கல்யாண வீட்டு ஸ்டைல் புடலங்காய் கூட்டு இப்படி வீட்டில் செஞ்சி பாருங்க! அதன் ருசியின் ரகசியம் இது தான்!

மதியம் என்ன சமைப்பது என்றே தெரியவில்லையா? உங்கள் வீட்டில் புடலங்காய் உள்ளதா? அப்படியெனில் அதனைக் கொண்டு கூட்டு செய்யுங்கள். இது சாதத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் இது ஆரோக்கியமான ரெசிபியும் கூட. அதுமட்டுமின்றி, பேச்சுலர்கள் கூட இதனை முயற்சிக்கலாம்.புடலங்காய் கூட்டு தம

By Prem Kumar · 28/10/2023

மதியம் என்ன சமைப்பது என்றே தெரியவில்லையா? உங்கள் வீட்டில் புடலங்காய் உள்ளதா? அப்படியெனில் அதனைக் கொண்டு கூட்டு செய்யுங்கள். இது சாதத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் இது ஆரோக்கியமான ரெசிபியும் கூட. அதுமட்டுமின்றி, பேச்சுலர்கள் கூட இதனை முயற்சிக்கலாம்.புடலங்காய் கூட்டு தமிழகத்தில் மிகவும் பிரபலமான மற்றும் பாரம்பரியமான ஒரு பொரியல் வகை. தமிழகத்தில் இவை பெரும்பாலான கல்யாண விருந்துகளில் கட்டாயம் இடம் பிடித்திருக்கும்.

புடலங்காய் கூட்டிற்க்கு என ஒரு கூட்டம் கல்யாண விருந்துகளில் பங்கேற்பார்கள் என்றால் அது மிகை அல்ல. கூட்டுகளில் பல வகை உண்டு. குறிப்பாக அதில் காலிஃபிளவர் கூட்டு, சுரக்காய் கூட்டு, கத்திரிக்காய் கூட்டு, பூசணிக்காய் கூட்டு, வெள்ளரிக்காய் கூட்டு, மற்றும் வாழைத்தண்டு கூட்டு மிகவும் பிரபலமானவை. அதில் நாம் இன்று இங்கு காண இருப்பது புடலங்காய் கூட்டு. இந்த புடலங்காய் கூட்டானது கார குழம்பு, சாம்பார், ரசம், வத்த குழம்பு போன்ற அனைத்து குழம்பிற்கும் ஏற்ற வகையில் இருக்கும்.

உடல் எடை கூடியவர்களின் உடலில் கொழுப்பு படியாமல் தடுத்து உடல் எடையை சீக்கிரம் குறைப்பதில் புடலங்காய் சிறப்பாக பணியாற்றுகிறது. இதில் இருக்கும் சத்துகள் உடலின் அதீத பசியுணர்வை கட்டுப்படுத்தி, நீர் சுரப்பை அதிகப்படுத்தி உடல் எடையை குறைப்பதில் பேருதவி புரிகிறது இந்த புடலங்காய் கூட்டு. புடலங்காய் கூட்டின் ஸ்பெஷல் என்னவென்றால் இதை நாம் வெகு சுலபமாக எந்த ஒரு சிரமமும் இன்றி குறைந்த நேரத்திலேயே செய்து விடலாம். அது மட்டுமின்றி இதை குறைந்த பொருட்களை வைத்தே நாம் செய்து விடலாம்.

Recipes AMP · Quick view
View full