இதுவரை புடலங்காய் வைத்து எத்தனையோ ரெசிபி செய்திருப்பீர்கள் அந்த வகையில் இந்த ரெசிபியையும் ட்ரை பண்ணி பாருங்கள்!!

வழக்கமாக பிரியாணி, சப்பாத்தி, பரோட்டா போன்றவற்றிக்கு குருமா, சால்னாவுடன் ரைத்தா எனப்படும் பச்சடி வைத்தும் சாப்பிடுவோம். பொதுவாக வெங்காய பச்சடி, கேரட் பச்சடி, காராபூந்தி பச்சடி, வெள்ளரி பச்சடியை தான் அதிகமாக செய்து சாப்பிட்டு இருப்போம். புடலங்காய் வைத்து பச்சடி செய்துள்ளீர்களா? இல

By Prem Kumar · 23/6/2025

வழக்கமாக பிரியாணி, சப்பாத்தி, பரோட்டா போன்றவற்றிக்கு குருமா, சால்னாவுடன் ரைத்தா எனப்படும் பச்சடி வைத்தும் சாப்பிடுவோம். பொதுவாக வெங்காய பச்சடி, கேரட் பச்சடி, காராபூந்தி பச்சடி, வெள்ளரி பச்சடியை தான் அதிகமாக செய்து சாப்பிட்டு இருப்போம். புடலங்காய் வைத்து பச்சடி செய்துள்ளீர்களா? இல்லையா? அப்படியென்றால், புடலங்காய் தயிர் பச்சடியை எப்படி செய்ய வேண்டும் என்று இந்த பதிவில் காணலாம் வாங்க. புடலங்காயில் நமது உடலுக்கு தேவையான இரும்பு சத்து, நார் சத்து, புரதம், வைட்டமின் போன்ற எல்லாம் உள்ளது. அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிட்டால் வாய் புண், குடல், தொண்டை, வயிற்று புண் எல்லாம் சரி செய்யும்.

புடலங்காய் தயிர் பச்சடியின் ஸ்பெஷல் என்னவென்றால் இதை நாம் வெகு சுலபமாக எந்த ஒரு சிரமமும் இன்றி குறைந்த நேரத்திலேயே செய்து விடலாம். அது மட்டுமின்றி இதை குறைந்த பொருட்களை வைத்தே நாம் செய்து விடலாம். இதை வெறும் புடலங்காய், தயிர், மற்றும் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே நாம் சுலபமாக செய்து விடலாம். மேலும் புடலங்காயில் தண்ணீர் சத்து மற்றும் பைபர் அதிகமாக இருப்பதனால் இவை நம் உடம்பிற்கு மிகவும் நல்லது. ஆரோக்கியமான உணவு சாப்பிடுவது உடலுக்கு நல்லது. பல நன்மைகளை கொடுக்கும்.

குறிப்பாக காய்கறி வகைகள் அதிகம் சாப்பிட வேண்டும். தினமும் காய்கறி சாப்பிட வேண்டும். எப்போதும் ஒரே மாதிரியாக காய் செய்து போர் அடிக்கிறது என்றால் இந்த புடலங்காய் தயிர் பச்சடி ட்ரை செய்து பாருங்க. புடலங்காய் போன்ற நீர் காய்களை நம்மில் பெரும்பாலானோர் பொரியல், கூட்டு ஆகிய இரண்டை தான் அதிகமாக செய்து சாப்பிட்டு இருப்பார்கள். இன்று நாம் புடலங்காய் வைத்து சுவையான புடலங்காய் தயிர் பச்சடியை எப்படி எளிமையாக செய்யலாம் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

இதனையும் படியுங்கள் : சுவையான புடலங்காய் மசாலா பொரியல் ஒரு முறை இப்படி செய்து பாருங்கள்! புடலங்காய் பிடிக்காதவர்கள் கூட சாப்பிடுவார்கள்!

Recipes AMP · Quick view
View full