பலருக்கும் காய்கறி என்றாலே கசப்பான விஷயம் தான். யாரும் இதனை விரும்பி சாப்பிடுவதில்லை. ஒரு சிலர் உடலுக்கு ஊட்டச்சத்து வேண்டுமே என்று சாப்பிடுகிறார்கள். ஒருசிலர் எதுவானாலும் பரவாயில்லை என்று இவற்றை ஒதுக்கவே முயற்சி செய்வார்கள். அவ்வாறு பலரும் விரும்பப்படாத ஒரு காய் புடலங்காய். ஒரு சில வீடுகளில் இவற்றை சமைத்து இருக்கவே மாட்டார்கள்.
ஆனால் இந்த புடலங்காயில் நீர் சத்து அதிகமாக இருக்கிறது. உடல் உஷ்ணத்தை குறைக்க வல்லது. இதனை வாரத்திற்கு ஒரு முறை உணவில் சேர்த்துக் கொள்வது என்பது மிகவும் நன்மை தரக்கூடியதாக இருக்கிறது. அவ்வாறு இந்த புடலங்காயை மிகவும் சுவையாக எப்படி செய்வது என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். பசியைத் தூண்டும். * குடல் புண்ணை ஆற்றும். வயிற்றுப்புண், தொண்டைப்புண் உள்ளவர்கள் அடிக்கடி சாப்பிட்டு வந்தால், மேற்கண்ட நோயின் பாதிப்புகள் குறையும். இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், மலச்சிக்கலைப் போக்கும். நாம் சாப்பிடும் உணவு வகைகளும் நீர் சத்து நிறைந்ததாக இருக்க வேண்டும்.
நீர்ச் சத்து நிறைந்த காய்கறி புடலங்காய், வெள்ளரிக்காய், சுரைக்காய், பீர்க்கங்காய், சௌசௌ போன்ற பல காய்கறிகள் இருக்கின்றன. இவற்றை பொரியல் செய்தும் சாப்பிடலாம். அல்லது இவற்றுடன் பருப்பு சேர்த்துக் கூட்டு செய்தும் சாப்பிடலாம். இந்த புடலங்காய் வைத்து புடலங்காய் மசாலா பொரியல் அருமையாக இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடுவதாக இருந்தால் புடலங்காய் மசாலா பொரியல் செய்வது தான் சிறந்த முறையாகும், அனைவரும் விருப்பமாக சாப்பிடுவார்கள். வாருங்கள் இப்படி ஒரு சுவையான புடலங்காய் மசாலா பொரியல் எவ்வாறு செய்வது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்
புடலங்காய் மசாலா பொரியல் | Snake gourd Masala Poriyal
Equipment
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 1 கப் புடலங்காய்
- 1 வெங்காயம்
- 1 டீஸ்பூன் கடுகு
- 1/2 டீஸ்பூன் உளுந்து பருப்பு
- 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- உப்பு தேவைக்கேற்ப
அரைக்க
- 2 பச்சைமிளகாய்
- 2 பல் பூண்டு
- 1/2 டீஸ்பூன் சோம்பு
- 1/2 டீஸ்பூன் சீரகம்
- தேங்காய் தேவைக்கேற்ப
செய்முறை
- கடாயில் எண்ணெய் காயவத்து கடுகு-உளுந்து தாளித்து வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
- வதங்கியதும்நறுக்கிய புடலங்காய், தேவையான உப்பு, ஒரு சிட்டிகை சர்க்கரை மற்றும் மஞ்சள்தூள் சேர்த்து கிளறிவிடவும்.
- கொஞ்சமாகத் தண்ணீர் தெளித்து, மூடி கொடுத்துள்ள கடாயை வேகவைக்கவும்.அரைக்கக் பொருட்களை (தண்ணீரில்லாமல்) கொறகொறப்பாக அரைத்து வைக்கவும்.
- புடலங்காய் வெந்ததும், அரைத்த கலவையைச் சேர்த்து கலந்து விடவும்.
- காயிலுள்ள தண்ணீர் வற்றி, மசாலாவின் வாசனை அடங்கியதும் பொரியலை அடுப்பிலிருந்து இறக்கவும். சுவையான புடலங்காய் மசாலா பொரியல் ரெடி.