அடுத்த முறை புளிச்ச கீரை வாங்கினால் ஆந்திரா ஸ்டைலில் பருப்பு கடையல் செய்து பாருங்கள்!!

நாம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையான உணவுகளை உட்கொள்கிறோம். அதில் அதிகமாக உணவில் சேர்த்துக்கொள்ள பரிந்துரை செய்வது கீரை தான். கீரையில் அதிகப்படியாக சத்துக்கள் நிறைந்துள்ளது. குறிப்பாக கீரையில் இரும்பு சத்துக்கள் உள்ளது. அதனால் தான் குழந்தைகளுக்கு தினம் ஏதாவது ஒரு கீரையை சேர்த்து கொ

By Prem Kumar · 19/6/2025

நாம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையான உணவுகளை உட்கொள்கிறோம். அதில் அதிகமாக உணவில் சேர்த்துக்கொள்ள பரிந்துரை செய்வது கீரை தான். கீரையில் அதிகப்படியாக சத்துக்கள் நிறைந்துள்ளது. குறிப்பாக கீரையில் இரும்பு சத்துக்கள் உள்ளது. அதனால் தான் குழந்தைகளுக்கு தினம் ஏதாவது ஒரு கீரையை சேர்த்து கொள்வது அவசியம். கீரையில் நிறைய வகைகள் உள்ளது. ஒவ்வொரு கீரையில் நிறைய சத்துக்கள் உள்ளது. ஆகவே இந்த பதிவில் புளிச்ச கீரை பருப்பு கடையல் எப்படி செய்வதென்று பார்க்கலாம். கீரைகள் உடலுக்கு மிகவும் நல்லது. கீரை வகைகளில் மிகவும் வித்தியாசமான கீரை புளிச்சக்கீரை. புளிச்ச கீரையை அடிக்கடி உணவில் சேர்ப்பது இன்னும் நல்லது.

வாயில் வைத்தாலே அப்படி ஒரு புளிப்பு இதனிடத்தில் இருப்பது என்பது அதிசயம் தான். இந்த புளிச்ச கீரையில் எண்ணற்ற நன்மைகள் நிறைந்துள்ளன. குறிப்பாக உடல் வெப்பத்தால் அவதிப்படுபவர்கள், புளிச்ச கீரையை சாப்பிட்டால் தணிந்து விடும். புளிச்ச கீரையில் இரும்புச் சத்துக்கள், வைட்டமின் ஏ, கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் சி உள்ளன. பார்வைக் கோளாறு, ரத்த சோகையைப் போக்கும். வயிற்றில் அமிலத்தன்மை குறையும்போது பசி இல்லாமல் போகிறது. புளிச்ச கீரை பசியை தூண்டும்.

நோய் எதிர்ப்பு சக்தி உடையது. மிகவும் சுவையாக இருக்கும் இதன் இலைகளை சிலர் சும்மாவே உண்பார்கள். மேலும் இவற்றில் தயார் செய்யப்படும் சட்னி மற்றும் தொக்கு, சாதம், சப்பாத்தி என்று எல்லாவற்றுடனும் தொட்டுக்கொண்டால் சாப்பிட்டால் ஜோராக இருக்கும். இன்று இந்த புளிச்சக்கீரையை வைத்து சுவையான கடையல் செய்வது எப்படி என்று பார்க்கலாம். இந்த புளிச்ச கீரை பருப்பு கடையல் வைத்து சாப்பிட்டால் எவ்வளவு சாதம் உள்ளே இறங்குது அப்படின்னு தெரியவே தெரியாது. இந்த கடையலை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவர்.

இதனையும் படியுங்கள் : இரவு டிபனுக்கு கமகமனு பாலக்கீரை தோசையை இப்படி ட்ரை பண்ணி பாருங்க! சாப்பிட அருமையாக இருக்கும்!!

Recipes AMP · Quick view
View full