Advertisement
அசைவம்

சூடான பரங்கிக்காய் சுக்கு சூப் இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க! சட்டுனு உடல் எடையை கூட குறைதத்து விடும்!

Advertisement

இந்த காலகட்டத்தில் மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்து இருப்பது உடல் பருமன். இந்த உடல் பருமன் தொல்லையால் அதிக அளவு இளைஞர்கள் பாதிக்கப்படுகிறார்கள். அதிலும் குறிப்பாக தொப்பையை குறைக்க அதிக அளவு சிரமப்பட வேண்டி உள்ளது. உணவு பழக்க வழக்கங்கள் முறையான உடற்பயிற்சியின்மை போன்றவற்றினால் இந்த உடலில் பருமன் பிரச்சனை அதிகரிக்கிறது.

அது மட்டுமல்லாமலீ ஹார்மோன் பிரச்சனைகளாலும் இந்த உடல் பருமன் தொல்லை ஏற்படுகின்றது. இப்படி ஏறிய உடல் பருமனை உடற்பயிற்சியோடு சேர்த்து குறைப்பதற்கு இந்த பரங்கிக்காய் சுக்கு சூப்பை எடுத்துக் கொள்வது மிகவும் நல்ல பலன்களை கொடுக்கும். இந்த சுக்கு சூப்பை தினமும் காலையில் வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்வது நல்லது. சுக்கு உடலுக்கு பல நன்மைகளை கொடுக்கின்றது. இது பித்தம் , கபம் போன்றவற்றை குறைப்பதற்கு பயன்படுகின்றது. அது மட்டும் அல்லாமல் தொண்டை கட்டு, சளி , இருமல் , வயிற்றுப் பிரச்சனை அஜீரணக் கோளாறுகள், வாயு தொல்லை,குரல்கம்மல், காதடைப்பு, வயிற்று பொருமல் போன்றவற்றிற்கு மருந்தாக பயன்படுகிறது.

Advertisement

பிள்ளை பெற்ற தாய்மார்களுக்கு கர்ப்பப்பை மீண்டும் இயல்பு நிலையை அடைவதற்கு சுக்குடன் சில பொருட்களையும் சேர்த்து லேகியம் செய்து தருவார்கள். அப்படிப்பட்ட அரிய மருந்தாகிய சுக்கை நாம் சூப்பாக செய்து உணவில் சேர்த்துக்கொண்டு உடலில் உள்ள கொழுப்பை கரைப்பதற்கு பயன்படுத்திக் கொள்ள இருக்கிறோம். வாருங்கள் இந்த பரங்கிக்காய் சுக்கு சூப்பு எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

பரங்கிக்காய் சுக்கு சூப் | Pumpkin Dry Ginger Soup In Tamil

Print Recipe
பிள்ளை பெற்ற தாய்மார்களுக்கு
Advertisement
கர்ப்பப்பை மீண்டும் இயல்பு நிலையை அடைவதற்கு சுக்குடன் சில பொருட்களையும் சேர்த்து லேகியம் செய்து தருவார்கள். அப்படிப்பட்ட அரிய மருந்தாகிய சுக்கை நாம் சூப்பாக செய்து உணவில் சேர்த்துக்கொண்டு உடலில் உள்ள கொழுப்பை கரைப்பதற்கு பயன்படுத்திக் கொள்ள இருக்கிறோம். வாருங்கள் இந்த பரங்கிக்காய் சுக்கு சூப்பு எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
Course Soup
Cuisine tamil nadu
Keyword Pumpkin Dry Ginger Soup
Advertisement
Prep Time 5 minutes
Cook Time 10 minutes
Servings 4
Calories 22

Equipment

  • 1 பெரிய பாத்திரம்

Ingredients

  • 14 கப் பரங்கிக்காய்
  • 1 ஸ்பூன் சுக்கு
  • 1 ஸ்பூன் மிளகு
  • 1 வெங்காயம்
  • 1 தக்காளி
  • 1 சிட்டிகை மஞ்சள்தூள்
  • உப்பு  தேவையானஅளவு
  • கொத்தமல்லி தழை  சிறிதளவு

Instructions

  • முதலில் பரங்கிக்காயை தோல் சீவி விட்டு பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  • வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி எடுத்து கொள்ளவும்.  சுக்கு,மிளகு இரண்டையும் சேர்த்து இடித்து கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தில்  பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, பரங்கிக்காய் சேர்த்து வேகவிடவும். பின் காய்கள் முக்கால் பதம் வெந்ததும் சுக்கு, மிளகு , மஞ்சள்தூள், உப்பு சேர்த்து நன்றாக வேக வைக்கவும்
  • காய்கள் நன்றாக வெந்து தண்ணீர் வற்றியதும் மேலும் 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க வைக்கவும்.
  • பிறகு ஒரு பாத்திரத்திற்கு மாற்றி அதில் கொத்தமல்லி தழை சேர்த்து பரிமாறினால் சூடான சத்தான் உடல் பருமனை குறைக்கும் பரங்கிக்காய் சுக்கு சூப் தயார்.  
  • இந்த பரங்கிகாய் சுக்கு சூப்பை தினமும் காலையில்  குடிப்பதால்உடல் பருமன் குறையும். தேவையில்லாத கொழுப்பு கரையும். உடல் ஆரோக்கியம் பெறும்

Nutrition

Serving: 200g | Calories: 22kcal | Carbohydrates: 3.3g | Protein: 3.1g | Sodium: 5mg | Potassium: 318mg | Fiber: 1g | Sugar: 2g
Advertisement
Prem Kumar

Recent Posts

ஆரோக்கியமான சுவை மிகுந்த ராகி வெஜ் நூடுல்ஸ்! இப்படி செஞ்சி பாருங்க!!!

குழந்தைகளுக்கு நூடுல்ஸ் என்றால் மிகவும் பிடிக்கும். நாகரிகம் என்ற பெயரில் தற்போது பீட்சா, பர்கர், நூடுல்ஸ், பாஸ்தா உள்ளிட்ட உணவுகளை…

57 நிமிடங்கள் ago

இன்றைய ராசிபலன் – 15 மே 2024!

மேஷம் இன்று உங்களுக்கு குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவு கிடைக்கும். தாயிடம் இருந்து மகிழ்ச்சியை பெறுவீர்கள். இன்று உங்களின் தனிப்பட்ட…

4 மணி நேரங்கள் ago

கோடை வெயில் தரும் வாட்டத்தை குறைக்க கேசர் பிஸ்தா குல்பி ஐஸ் இப்படி செய்து பாருங்க!

என்ன தான் இப்போ ஐஸ் கிரீம் கடைகளில் வித விதமா கிடைச்சாலும்.இந்த குல்பி ஐஸ்கு இருக்கற மவுசு தனி தாங்க.…

13 மணி நேரங்கள் ago

காலை டிபனுக்கு வெஜிடபிள் பாசிப் பயறு இட்லி அடுத்தமுறை இப்படி ட்ரை பண்ணி பாருங்கள்!

பயறு வகைகளில் பொதுவாக புரோட்டீன் சத்து நிறைந்து காணப்படுவதால் எந்த அளவிற்கு நீங்கள் முழு தானிய உணவு வகைகளை அடிக்கடி…

13 மணி நேரங்கள் ago

ஜவ்வாது பற்றி நமக்கு தெரியாத சில பலன்கள்

இப்பொழுதெல்லாம் தினமும் நாம் என்ன உடை உடுத்தினாலும் அது செயற்கை வாசனை திரவியங்களின் வாசனை மட்டுமே இருக்கும் ஆனால் அந்த…

14 மணி நேரங்கள் ago

சூப்பரான ஹெல்தியான தேங்காய் உருண்டை இப்படி ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

90ஸ் கிட்ஸ்க்கு தேங்காய் மிட்டாய் அப்படின்னு சொன்னாலே ரொம்ப ரொம்ப பிடிக்கும் கடைகளில கிடைக்கிற தேங்காய் மிட்டாய் வாங்கி நம்ம…

16 மணி நேரங்கள் ago