- Prep
- 5 min
- Cook
- 10 min
- Serves
- 4
- Cuisine
- tamil nadu
- Course
- Soup
இந்த காலகட்டத்தில் மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்து இருப்பது உடல் பருமன். இந்த உடல் பருமன் தொல்லையால் அதிக அளவு இளைஞர்கள் பாதிக்கப்படுகிறார்கள். அதிலும் குறிப்பாக தொப்பையை குறைக்க அதிக அளவு சிரமப்பட வேண்டி உள்ளது. உணவு பழக்க வழக்கங்கள் முறையான உடற்பயிற்சியின்மை போன்றவற்றினால் இந்த உடலில் பருமன் பிரச்சனை அதிகரிக்கிறது.
அது மட்டுமல்லாமலீ ஹார்மோன் பிரச்சனைகளாலும் இந்த உடல் பருமன் தொல்லை ஏற்படுகின்றது. இப்படி ஏறிய உடல் பருமனை உடற்பயிற்சியோடு சேர்த்து குறைப்பதற்கு இந்த பரங்கிக்காய் சுக்கு சூப்பை எடுத்துக் கொள்வது மிகவும் நல்ல பலன்களை கொடுக்கும். இந்த சுக்கு சூப்பை தினமும் காலையில் வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்வது நல்லது. சுக்கு உடலுக்கு பல நன்மைகளை கொடுக்கின்றது. இது பித்தம் , கபம் போன்றவற்றை குறைப்பதற்கு பயன்படுகின்றது. அது மட்டும் அல்லாமல் தொண்டை கட்டு, சளி , இருமல் , வயிற்றுப் பிரச்சனை அஜீரணக் கோளாறுகள், வாயு தொல்லை,குரல்கம்மல், காதடைப்பு, வயிற்று பொருமல் போன்றவற்றிற்கு மருந்தாக பயன்படுகிறது.
பிள்ளை பெற்ற தாய்மார்களுக்கு கர்ப்பப்பை மீண்டும் இயல்பு நிலையை அடைவதற்கு சுக்குடன் சில பொருட்களையும் சேர்த்து லேகியம் செய்து தருவார்கள். அப்படிப்பட்ட அரிய மருந்தாகிய சுக்கை நாம் சூப்பாக செய்து உணவில் சேர்த்துக்கொண்டு உடலில் உள்ள கொழுப்பை கரைப்பதற்கு பயன்படுத்திக் கொள்ள இருக்கிறோம். வாருங்கள் இந்த பரங்கிக்காய் சுக்கு சூப்பு எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
Ingredients
Method
முதலில் பரங்கிக்காயை தோல் சீவி விட்டு பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி எடுத்து கொள்ளவும். சுக்கு,மிளகு இரண்டையும் சேர்த்து இடித்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, பரங்கிக்காய் சேர்த்து வேகவிடவும். பின் காய்கள் முக்கால் பதம் வெந்ததும் சுக்கு, மிளகு , மஞ்சள்தூள், உப்பு சேர்த்து நன்றாக வேக வைக்கவும்
காய்கள் நன்றாக வெந்து தண்ணீர் வற்றியதும் மேலும் 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க வைக்கவும்.
பிறகு ஒரு பாத்திரத்திற்கு மாற்றி அதில் கொத்தமல்லி தழை சேர்த்து பரிமாறினால் சூடான சத்தான் உடல் பருமனை குறைக்கும் பரங்கிக்காய் சுக்கு சூப் தயார்.
இந்த பரங்கிகாய் சுக்கு சூப்பை தினமும் காலையில் குடிப்பதால்உடல் பருமன் குறையும். தேவையில்லாத கொழுப்பு கரையும். உடல் ஆரோக்கியம் பெறும்






