காரசாரமான ருசியான பூசணிக்காய் கிரேவி ஒரு முறை இப்படி மட்டும் செய்து பாருங்க அற்புதமான சுவையில் இருக்கும்!
கிரேவிகள் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. பொதுவாக கிரேவியை சப்பாத்தி, பூரி, நான், புல்கா, பரோட்டா, தோசை, மற்றும் இட்லிக்கு சைடிஷ் ஆக மக்கள் சுவைக்கிறார்கள். இதை வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு பொருட்கள், காய்கறிகள், மற்றும் செய்முறையை பின் பற்றி மக்கள் வித விதமாக
கிரேவிகள் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. பொதுவாக கிரேவியை சப்பாத்தி, பூரி, நான், புல்கா, பரோட்டா, தோசை, மற்றும் இட்லிக்கு சைடிஷ் ஆக மக்கள் சுவைக்கிறார்கள். இதை வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு பொருட்கள், காய்கறிகள், மற்றும் செய்முறையை பின் பற்றி மக்கள் வித விதமாக சமைத்து சுவைக்கிறார்கள். கிரேவிகளில் பல வகை உண்டு. அதில் குறிப்பாக சிக்கன் கிரேவி, மட்டன் கிரேவி, வெஜிடபிள் கிரேவி, மற்றும் உருளைக்கிழங்கு கிரேவி மிகவும் பிரபலமானவை.
ஆனால் நாம் என்று இங்கு காண இருப்பது வித்தியாசமான பூசணிக்காய் கிரேவி. நீர்ச்சத்து அதிகம் நிறைந்த பூசணிக்காயை கோடைக்காலத்தில் அதிகம் சேர்த்துக் கொள்வதால், உடல் நீரேற்றத்துடன் ஆரோக்கியமாக இருக்கும். உங்களுக்கு மஞ்சள் பூசணிக்காய் பிடிக்குமானால், இதுவரை அதைக் கொண்டு பொரியல் மட்டும் தான் செய்துள்ளீர்கள் என்றால், இனிமேல் அதைக் கொண்டு அட்டகாசமான கிரேவி செய்து சாப்பிடுங்கள். இது நிச்சயம் உங்களுக்கு பிடிக்குமாறு அற்புதமான சுவையுடன் இருக்கும். மேலும் இந்த கிரேவி சாதத்துடன் சேர்த்து சாப்பிட சூப்பராக இருக்கும்.
மஞ்சள் பூசணியை ஒருவர் அடிக்கடி உணவில் சேர்ப்பது மிகவும் நல்லது. ஏனெனில் அதில் வைட்டமின் ஏ அதிகம் உள்ளது. அதோடு, ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் நிறைந்துள்தால் நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்கும். மேலும் இதில் வைட்டமின்கள் அதிகம் இருப்பதால், நோயெதிர்ப்பு சக்தி மேம்படும். குறிப்பாக மஞ்சள் பூசணியில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது செரிமானத்தை தாமதப்படுத்தி, நீண்ட நேரம் பசி எடுக்காமல் வயிற்றை நிரப்பி வைத்திருக்கும். இதில் கலோரிகளும் மிகவும் குறைவு என்பதால் உடல் எடையைக் குறைப்போருக்கு மிகச்சிறப்பான காய்கறி. இந்த பூசணிக்காய் கிரேவி சப்பாத்திக்கு ஒரு அற்புதமான சைடு டிஷ்ஷாக இருக்கும். மேலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடியதாகவும் இருக்கும்.
இதனையும் படியுங்கள் : வீடே மணமணக்க ருசியான பூசணிக்காய் மோர் குழம்பு இப்படி ஒரு முறை செஞ்சு பாருங்க எவ்வளவு சாப்பாடு கொடுத்தாலும் மெய் மறந்து சாப்பிடுவீங்க!