Home சைவம் வீடே மணமணக்க ருசியான பூசணிக்காய் மோர் குழம்பு இப்படி ஒரு முறை செஞ்சு பாருங்க எவ்வளவு...

வீடே மணமணக்க ருசியான பூசணிக்காய் மோர் குழம்பு இப்படி ஒரு முறை செஞ்சு பாருங்க எவ்வளவு சாப்பாடு கொடுத்தாலும் மெய் மறந்து சாப்பிடுவீங்க!

அனைவருக்கும் மோர் குழம்பு என்றால் மிகவும் பிடிக்கும். மோர் குழம்பு வைத்து அதனுடன் உருளைக்கிழங்கு வறுவலோடு சாப்பிட பலருக்கும் மிகவும் பிடிக்கும். வெயில் காலம் என்றாலும் சரி மழைக்காலம் என்றாலும் சரி மோர் குழம்பு பிரியர்கள் இருந்து கொண்டே தான் இருப்பார்கள். காரணம் ஒரு கரண்டி சாதம் கூடுதலாக சாப்பிடலாம் என்பதற்காகத்தான்.

-விளம்பரம்-

அவ்வளவு ருசியாக இருக்கும் மோர் குழம்பில் நாம் பலவிதமான காய்கறிகளை சேர்த்து சாப்பிட்டு இருப்போம். அதிலும் பூசணிக்காய் மோர்க்குழம்பு என்றால் அலாதி பிரியம் கொண்டவர்கள் நிறைய உண்டு.  அப்படி இந்த சுவையான மோர் குழம்பு ஒரு முறை வீட்டில் செய்துவிட்டால் அனைவருக்கும் பிடிக்கும். அனைவருக்கும் தெரிந்த பூசணிக்காய் மோர் குழம்பு எப்படி சுவையாக வைப்பது என்பதை பார்க்க இருக்கிறோம்.

இந்த சுவையான மோர் குழம்பு ஒருமுறை வீட்டில் வைத்து விட்டால் போதும் மீண்டும் மீண்டும் மோர் குழம்பு பூசணிக்காயுடன் வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டே இருப்பார்கள். இப்படி சுவையான மோர் குழம்பு வைத்து சாதத்தோடு சேர்த்து உருளைக்கிழங்கு வறுவல் அல்லது ஊறுகாயுடன் சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும்.

சிலர் வெண்டைக்காயுடன் வைக்கும் மோர் குழம்பு பிரியர்களாக இருப்பார்கள். ஆனால் பூசணிக்காயில் வைக்கும் மோர் குழம்பு மிக மிக சுவையாக இருக்கும். ஒருமுறை வீட்டில் வைத்து பாருங்கள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இந்த மோர் குழம்பு மிகவும் பிடித்தமானதாக அமையும். இப்பொழுது வாங்க இந்த பூசணிக்காய் மோர் குழம்பு எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

Print
3 from 2 votes

பூசணிக்காய் மோர் குழம்பு | Pumpkin Mor Kulambu In Tamil

சுவையான மோர் குழம்பு ஒருமுறை வீட்டில் வைத்து விட்டால் போதும் மீண்டும் மீண்டும் மோர் குழம்பு பூசணிக்காயுடன் வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டே இருப்பார்கள். இப்படி சுவையான மோர் குழம்பு வைத்து சாதத்தோடு சேர்த்து உருளைக்கிழங்கு வறுவல் அல்லது ஊறுகாயுடன் சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும். சிலர் வெண்டைக்காயுடன் வைக்கும் மோர் குழம்பு பிரியர்களாக இருப்பார்கள். ஆனால் பூசணிக்காயில் வைக்கும் மோர் குழம்பு மிக மிக சுவையாக இருக்கும். ஒருமுறை வீட்டில் வைத்து பாருங்கள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இந்த மோர் குழம்பு மிகவும் பிடித்தமானதாக அமையும். இப்பொழுது வாங்க இந்த பூசணிக்காய் மோர் குழம்பு எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
Prep Time5 minutes
Active Time19 minutes
Course: Breakfast
Cuisine: tamil nadu
Keyword: Pumpkin Mor Kulambu
Yield: 4
Calories: 22kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1 கப் பூசணிக்காய்
  • 1 கப் கெட்டியான தயிர்
  • 1/2 டீஸ்பூன் சீரகம்
  • 1/4 கப் தேங்காய் துருவல்
  • 3 பச்சை மிளகாய்
  • 2 காய்ந்த மிளகாய்
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள்தூள்
  • 1/2 டீஸ்பூன் கடுகு
  • 1/2 டீஸ்பூன் வெந்தயம்
  • 2 டேபிள் ஸ்பூன் பொட்டுக்கடலை
  • 1 துண்டு v இஞ்சி
  • உப்பு தேவையான அளவு
  • கறிவேப்பிலை சிறிதளவு
  • கொத்தமல்லி இலைகள் சிறிதளவு
  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  •  
    முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் பூசணிக்காய் சேர்த்து நன்றாக வேக வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு மிக்ஸி ஜாரில் பொட்டுக்கடலை, சீரகம்,தேங்காய் துருவல், பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி என அனைத்தையும் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
  • ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து அதில் கடுகு மற்றும் மிளகாய் சேர்த்து தாளித்த அரைத்த விழுதையும் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். தேவையான அளவு உப்பு மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்த கலக்கவும்.
  • இப்பொழுது வேக வைத்துள்ள பூசணிக்காய்  அந்தகலவையில் சேர்க்க வேண்டும்.
  • ஒரு பத்து நிமிடங்கள் கொதித்த பிறகு எடுத்து வைத்துள்ள தயிரையும் மஞ்சள் தூளையும் அந்த குழம்பில் சேர்த்து விட வேண்டும்.
  • சுவையான  பூசணிக்காய் மோர் குழம்பு தயார் இதனை சாதத்துடன் வைத்து சாப்பிட்டால் ருசியை அருமையாக இருக்கும்.

Nutrition

Serving: 200g | Calories: 22kcal | Carbohydrates: 3.3g | Protein: 3.1g | Sodium: 35mg | Potassium: 213mg | Fiber: 2g

இதையும் படியுங்கள் : ஆந்திரா ஸ்டைல் பரங்கிக்காய் பால் கூட்டு, ஒரு தரம் இம்முறையில் செய்து அசத்துங்கள்! யாரும் வேண்டாம்னே சொல்ல மாட்டாங்க!

-விளம்பரம்-