டீ, காபியுடன் சாப்பிட ருசியான பரங்கிக்காய் பக்கோடா இப்படி செய்து பாருங்க! மொறு மொறுனு அசத்தலாக இருக்கும்!
மாலை வேளையில் காபி, டீ குடிக்கும் போது, காரசாரமாகவும் மொறுமொறுப்பாகவும் ஏதேனும் ஸ்நாக்ஸ் சாப்பிட வேண்டுமென்று தோன்றுகிறதா? அதுவும் சற்று வித்தியாசமான ஸ்நாக்ஸ் சுவைக்க ஆசையாக உள்ளதா? அப்படியானால் உங்கள் வீட்டில் பரங்கிக்காய் உள்ளதா? இருந்தால், அதைக் கொண்டு ஒரு அட்டகாசமான சுவையுடைய
மாலை வேளையில் காபி, டீ குடிக்கும் போது, காரசாரமாகவும் மொறுமொறுப்பாகவும் ஏதேனும் ஸ்நாக்ஸ் சாப்பிட வேண்டுமென்று தோன்றுகிறதா? அதுவும் சற்று வித்தியாசமான ஸ்நாக்ஸ் சுவைக்க ஆசையாக உள்ளதா? அப்படியானால் உங்கள் வீட்டில் பரங்கிக்காய் உள்ளதா? இருந்தால், அதைக் கொண்டு ஒரு அட்டகாசமான சுவையுடைய பக்கோடா செய்யலாம். இந்த பரங்கிக்காய் பக்கோடா பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் ருசியாக இருக்கும்.
இதனையும் படியுங்கள் : ருசியான வெஜிடபுள் பக்கோடா இப்படி செய்து பாருங்க! மொறு மொறுனு இதன் சுவையே தனி தான்!
பக்கோடா இந்தியாவில் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு மாலை நேர சிற்றுண்டி. மாலை நேரங்களில் காபியுடன் பக்கோடாவை சுவைப்பது பெரும்பாலானோருக்கு மிகவும் விருப்பமான காம்பினேஷன் ஆக இருக்கிறது. பரங்கிக்காய் சாம்பார், கூட்டு செய்வார்கள். ஆனால் அதை வைத்து மொறு மொறு பக்கோடா டீ டைம் ஸ்னாக் செய்து பாருங்கள் மிகவும் ருசியாக இருக்கும்.