ருசியான வெஜிடபுள் பக்கோடா இப்படி செய்து பாருங்க! மொறு மொறுனு இதன் சுவையே தனி தான்!

- Advertisement -

மாலையில் டீ/காபி குடிக்கும் போது, சூடாகவும், மொறுமொறுப்பாகவும் செய்து சாப்பிடத் தோன்றும். அப்போது பலரும் பஜ்ஜி, போண்டா, பக்கோடா என்று தான் செய்து சாப்பிடுவோம். அதிலும் பக்கோடா என்றால் வெங்காய பக்கோடாவைத் தான் செய்வோம்.

-விளம்பரம்-

இதனையும் படியுங்கள் : மொறு மொறுனு முட்டை பக்கோடா இப்படி செய்து பாருங்க! மாலை நேரத்திற்கு ஏற்ற ஸ்நாக்ஸ்!

- Advertisement -

ஆனால் வீட்டில் உள்ள ஒருசில காய்கறிகளைக் கொண்டும் அற்புதமான சுவையில் பக்கோடா செய்யலாம் என்பது தெரியுமா?இங்கு அப்படி காய்கறிகளைக் கொண்டு எப்படி பக்கோடா செய்வதென்று பார்ப்போம். அந்த வெஜிடேபிள் பக்கோடாவின் செய்முறையைப் பார்த்து செய்து சுவைத்து பாருங்களேன் நீங்களே அசந்து போய் விடுவீர்கள்.

Print
5 from 1 vote

வெஜிடபுள் பக்கோடா | Vegtable Pakkoda Recipe in Tamil

மாலையில் டீ/காபி குடிக்கும் போது, சூடாகவும், மொறுமொறுப்பாகவும் செய்து சாப்பிடத் தோன்றும். அப்போது பலரும் பஜ்ஜி, போண்டா, பக்கோடா என்று தான் செய்து சாப்பிடுவோம். அதிலும் பக்கோடா என்றால் வெங்காய பக்கோடாவைத் தான் செய்வோம். ஆனால் வீட்டில் உள்ள ஒருசில காய்கறிகளைக் கொண்டும் அற்புதமான சுவையில் பக்கோடா செய்யலாம் என்பது தெரியுமா?இங்கு அப்படி காய்கறிகளைக் கொண்டு எப்படி பக்கோடா செய்வதென்று பார்ப்போம்.
Prep Time10 minutes
Active Time10 minutes
Total Time20 minutes
Course: Snack
Cuisine: Indian, tamilnadu
Keyword: Pakkoda, பக்கோடா
Yield: 5 People
Calories: 315kcal

Equipment

  • 1 கரண்டி
  • 1 பவுள்
  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1 கப் முட்டைக்கோஸ் துருவியது
  • 1/2 கப் கேரட் நறுக்கியது
  • 1/2 கப் குடைமிளகாய் நறுக்கியது
  • 1/2 கப் வெங்காயம் நறுக்கியது
  • 1 கப் கடலைமாவு
  • 1/2 கப் அரிசி மாவு 1
  • 1 டீஸ்பூன் மமிளகாய் தூள்
  • 1 உருளைக்கிழங்கு நறுக்கியது
  • 1 பச்சைமிளகாய் பொடியாக நறுக்கியது
  • கறிவேப்பிலை சிறிதளவு
  • உப்பு தேவையான அளவு
  • தண்ணீர் தேவையானளவு
  • எண்ணெய் தேவையானளவு
  • கொத்தமல்லி சிறிதளவு

செய்முறை

  • முதலில் ஒரு பௌலில் காய்கறிகள் அனைத்தையும் ஒன்றாக போட்டுக் கொள்ள வேண்டும்.
  • பின்னர் அதில் கடலை மாவு, மிளகாய் தூள், சோம்பு, மற்றும் உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும்.
  • பின்பு அதில் தண்ணீர் ஊற்றி, பக்கோடா பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
  • பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
  • எண்ணெய் சூடானதும், அதில் பிசைந்து வைத்துள்ள பக்கோடா கலவையை எண்ணெயில் தூவி பொன்னிறமாக பொரித்து எடுத்தால், வெஜிடேபிள் பக்கோடா ரெடி!!!

Nutrition

Serving: 500g | Calories: 315kcal | Carbohydrates: 25.1g | Protein: 7.3g | Fiber: 5.9g | Vitamin A: 542.2IU | Vitamin C: 28.9mg | Calcium: 40.1mg | Iron: 2mg