ருசியான பஞ்சாபி தால் தட்கா இப்படி சுலபமாக வீட்டிலயே செஞ்சி பாருங்க! சாதம், சப்பாத்தி, பூரி என அனைத்திற்கும் பக்காவாக இருக்கும்!

சாதம், சப்பாத்தி அல்லது பூரி செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? அதற்கு சைடு டிஷ்ஷாக சற்று ஸ்பெஷலாகவும், வழக்கமான சுவையில் இல்லாமல் சற்று வித்தியாசமாகவும் செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் பருப்பு இருந்தால், அதைக் கொண்டு பஞ்சாபி தால் தட்கா செய்யுங்கள். பஞ்சாபி தாபா என்றாலே மிகவும் ப

By ·

சாதம், சப்பாத்தி அல்லது பூரி செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? அதற்கு சைடு டிஷ்ஷாக சற்று ஸ்பெஷலாகவும், வழக்கமான சுவையில் இல்லாமல் சற்று வித்தியாசமாகவும் செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் பருப்பு இருந்தால், அதைக் கொண்டு பஞ்சாபி தால் தட்கா செய்யுங்கள். பஞ்சாபி தாபா என்றாலே மிகவும் பிரபலமான ஒன்று. ஏனென்றால் அங்கு சமைக்கப்படும் உணவுகள் மிகவும் சுவையாக இருக்கும். எல்லோரும் விரும்பி சாப்பிட கூடிய வகையில் இருக்கும். இந்த தால் தட்கா செய்வது மிகவும் சுலபமாக இருப்பதோடு, பூரி, சப்பாத்திக்கு அட்டகாசமாகவும் இருக்கும். அதோடு இது குழந்தைகளும் விரும்பி சாப்பிடும் வகையில் ருசியாகவும் இருக்கும்.

தால் தட்கா வட இந்தியாவில் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. குறிப்பாக பஞ்சாப் மாநிலத்தில் இதற்கு இருக்கும் மவுசே தனி தான். அங்கு மக்கள் அன்றாடம் செய்து உண்ணும் உணவுகளில் தாலும் ஒன்று. தால் தட்காவை வெவ்வேறு இடங்களில் அங்கு இருக்கும் சமையல் முறைக்கேற்ப வெவ்வேறு விதமாக மக்கள் செய்து சுவைக்கிறார்கள். இன்று இங்கு நாம் காண இருப்பது பஞ்சாபிய முறையில் செய்யப்படும் பஞ்சாபி தால் தட்கா.

தால் (பருப்பு) இந்தியாவில் மட்டுமின்றி நேபாளத்திலும் மக்கள் அன்றாடம் சமைத்து உண்ணும் உணவாக இருக்கிறது. இதில் உடம்பிற்கு மிகவும் அவசியமான புரதச்சத்து அதிகம் இருப்பதால் இவை உடம்பிற்கு மிகவும் நல்லது. பொதுவாக இதை வட இந்திய மக்கள் சாதத்தில் ஊற்றி உண்பார்கள். மேலும் இதை சப்பாத்தி மற்றும் நான்னுக்கு சைட்டிஷ் ஆகவும் சுவைப்பார்கள். நாம் வழக்கமாக சப்பாத்தி மற்றும் நான்னுக்கு சைட்டிஷ் ஆக உண்ணும் பட்டர் சிக்கன், பன்னீர் பட்டர் மசாலா, மற்றும் பீஸ் மசாலாவிற்கு இவை ஒரு நல்ல மாற்று.

இதனையும் படியுங்கள் : ருசியான பஞ்சாபி பன்னீர் பச்சை பட்டாணி கிரேவி இப்படி செய்து பாருங்க! பின் நீங்களே அடிக்கடி செய்வீங்க!

Recipes AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை