Advertisement
சைவம்

மதிய உணவுக்கு ஏற்ற பஞ்சாபி வெண்டைக்காய் தாபா கிரேவி இப்படி செய்து பாருங்க!

Advertisement

பஞ்சாபி தாபா என்றாலே மிகவும் பிரபலமான ஒன்று. ஏனென்றால் அங்கு சமைக்கப்படும் உணவுகள் மிகவும் சுவையாக இருக்கும். எல்லோரும் விரும்பி சாப்பிட கூடிய வகையில் இருக்கும். அந்த வகையில் பஞ்சாபி முறையில் வெண்டைக்காய் வைத்து இது போன்று கிரேவி

இதையும் படியுங்கள் : பஞ்சாப் ஸ்பெஷல் பனீர் புர்ஜி இப்படி செஞ்சி பாருங்க!

Advertisement

செய்து பாருங்க. வீட்டில் உள்ளவர்களெல்லாம் அசந்து போய்டுவாங்க. அப்புறம் கிரேவியும் காலியாகிவிடும், சோறும் காலியாகி விடும். இந்த பஞ்சாபி தாபா கிரேவி எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

பஞ்சாபி தாபா கிரேவி | Punjabi Dhaba Gravy Recipe In Tamil

Print Recipe
பஞ்சாபி தாபா என்றாலே மிகவும் பிரபலமான ஒன்று. ஏனென்றால் அங்கு சமைக்கப்படும் உணவுகள் மிகவும் சுவையாக இருக்கும். எல்லோரும் விரும்பி சாப்பிட கூடிய வகையில் இருக்கும். அந்த வகையில் பஞ்சாபி முறையில் வெண்டைக்காய் வைத்து இது போன்று கிரேவி செய்து பாருங்க. வீட்டில் உள்ளவர்களெல்லாம் அசந்து போய்டுவாங்க. அப்புறம் கிரேவியும் காலியாகிவிடும், சோறும் காலியாகி விடும். இந்த பஞ்சாபி தாபா கிரேவி எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
Course LUNCH
Cuisine Indian, TAMIL
Keyword punjabi dhaba gravy, பஞ்சாபி தாபா கிரேவி
Advertisement
Prep Time 10 minutes
Cook Time 15 minutes
Total Time 25 minutes
Servings 4 people
Calories 125

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • 15 வெண்டைக்காய் நறுக்கியது
  • எண்ணெய் தேவைக்கேற்ப
  • 1 டீஸ்பூன் கடுகு
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 1 பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது
  • 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1 பச்சை மிளகாய்
    Advertisement
  • ¼ டீஸ்பூன் மஞ்சள் பொடி
  • 1 டீஸ்பூன் மிளகாய் பொடி
  • 1 டீஸ்பூன் தனியா பொடி
  • ½ டீஸ்பூன் சீரக பொடி
  • ½ டீஸ்பூன் கரம் மசாலா
  • உப்பு தேவைக்கேற்ப
  • 3 டீஸ்பூன் தயிர்
  • 1 தக்காளி அரைத்தது
  • 7 முந்திரி பருப்பு ஊறவைத்து அரைத்தது
  • கஸ்தூரி மேதி கொஞ்சம்

Instructions

  • முதலில் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய வெண்டைக்காயை சேர்த்து வதக்கி தனியாக எடுத்துக்கொள்ளவும்.
  • அடுத்து அதே கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், சேர்த்து பொரிந்ததும் நறுக்கிய வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய், சேர்த்து வதக்கவும்.
  • வெங்காயம் வதங்கியதும் மஞ்சள் பொடி, மிளகாய் பொடி, தனியா பொடி, சீரக பொடி, கரம் மசாலா, தேவையான அளவு உப்பு, மற்றும் தயிர் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.
  • எண்ணெய் தனியாக பிரிந்து வந்ததும் அரைத்து வைத்துள்ள தக்காளி, மற்றும் முந்திரி பேஸ்ட் சேர்த்து கலந்து வதக்கி வைத்துள்ள வெண்டைக்காயை சேர்த்து கொஞ்சம் தண்ணீர் ஊற்றி மூடி போட்டு கொதிக்க விடவும்.
  • கொதித்ததும் கடைசியாக கஸ்தூரி மேதி தூவி இறக்கவும்.

Nutrition

Serving: 700G | Calories: 125kcal | Carbohydrates: 3g | Protein: 11g | Fat: 0.1g | Saturated Fat: 0.5g | Potassium: 89mg | Sugar: 0.5g
Advertisement
swetha

Recent Posts

அட்சய திருதியை அன்று பல்லியை பார்த்தால் ஏற்படும் நன்மைகள்

ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் வரக்கூடிய வளர்பிறை திருதியை திதியை அட்சய திருதியையாக கொண்டாடுகிறோம். அத்தகைய அட்சய திருதியை அன்று…

24 நிமிடங்கள் ago

பிரெஞ்ச் ப்ரைஸ் மாதிரி கேரட் ப்ரைஸ் என்று ஒரு தடவை அசத்துங்க!

இப்பலாம் குழந்தைகளுக்கு கடைகளில் கிடைக்கிற பிரெஞ்சு ப்ரைஸ் kfc சிக்கன் ,சிக்கன் ரோல், அப்படின்னா இந்த மாதிரி ஐட்டங்கள் தான்…

3 மணி நேரங்கள் ago

மாலை வேளையில் உங்கள் குழந்தைகளுக்கு பிடித்தமான இந்த வாழைப்பழ குழி பணியாரம் செய்து கொடுங்கள் சுவை மிகவும் அற்புதமாக இருக்கும்!!

தோசை முதல் இட்லி மற்றும் சாம்பார் வரை தென்னிந்திய உணவு எல்லாமே ஆரோக்கியம் தான். தென்னிந்திய உணவு வகைகளில் பெரும்பாலான…

3 மணி நேரங்கள் ago

அட்சய திருதியை 2024 என்ன பொருள் வாங்கி வைத்து, எந்த முறையில் பூஜை செய்தால் மகாலட்சுமியின் அருள் கிடைக்கும் ?

இந்தியாவில் இந்துக்கள், ஜயினர்கள் ஆகிய மதத்தினரால் மிகவும் புனிதமான நாளாக கருதப்படுகிறது அட்சய திருதியை திருநாள். ஒவ்வொரு ஆண்டும் சித்திரை…

7 மணி நேரங்கள் ago

ரொம்பவே சிம்பிளான ஒரு வர மிளகாய் துவையல் எப்படி செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

வீட்டில் வேலை பார்த்து பார்த்து ரொம்ப சலிச்சு போனவங்க இட்லி தோசைக்கு பேச எந்த சட்னியும் அரைக்காமல் இந்த மாதிரி…

7 மணி நேரங்கள் ago

ரோட்டுக்கடை ஸ்டைலில் சுவையான மற்றும் மொறு மொறுவென்ற இந்த நெத்திலி மீன் ஃப்ரை செய்து பாருங்கள் இனி இப்படித்தான் மீன் வறுவல் செய்வீர்கள்!!

ரோட்டு கடைக்கு சென்றால் அங்கு விற்கும் உணவு பொருட்களை பார்த்து பசித்து எடுத்து சாப்பிடுவது ஒரு வழக்கமாக வைத்திருப்போம்..! ரோட்டுக்கடை…

8 மணி நேரங்கள் ago