பனீர் புர்ஜி வழக்கம் போல் இல்லாமல் மிக வேறுபட்ட சுவையை கொண்டிருக்கும். இந்த உணவை செய்து உண்டு மகிழுங்கள். ஒரே மாதிரி பனீர் சமைப்பதை விட்டுவிட்டு கொஞ்சம் வித்தியாசமாக இப்படி ஒரு பனீர் புர்ஜி செய்து பாருங்கள். கொஞ்சம் வித்தியாசமான சுவையில் சாப்பிடுவதற்கு இது மிகவும் ருசியாக இருக்கும். மணிக்கணக்காக மிருதுவாக இருக்கும் பனீர் புர்ஜி
இதையும் படியுங்கள் : ருசியான பன்னீர் கட்லெட் சாண்ட்விச் இப்படி செஞ்சி பாருங்க!
பிரியர்கள் இதை கட்டாயம் மிஸ் பண்ண கூடாது. தோசைக்கு சைடிஷ் ஆகவும் இதைத் வைத்து சாப்பிடலாம். அத்தனை அருமையாக இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பனீர் புர்ஜி விரும்பி உண்பர். அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடு வார்கள்.அதனால் இன்று இந்த பனீர் புர்ஜி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
பஞ்சாப் பனீர் புர்ஜி| Punjab Paneer Bhurji Receipe in Tamil
Equipment
- 1 கடாய்
- 1 கரண்டி
தேவையான பொருட்கள்
- 2 cup பனீர்
- ½ tsp மிளகு
- 1 வெங்காயம்
- 1 தக்காளி
- 1 பச்சை மிளகாய்
- ½ tsp மஞ்சள் தூள்
- ½ tsp சீரக தூள்
- ¼ tsp சாம்பார் பொடி
- 1 tsp சிவப்பு மிளகாய் தூள்
- ¼ கொத்து புதினா இலைகள்
- 3 cup வெண்ணெய்
- உப்பு தேவையான அளவு
செய்முறை
- பனீர் புர்ஜி செய்ய முதலில் நடுத்தர வெப்பத்தில் ஒரு பாத்திரத்தை வைக்கவும், வெண்ணெய் சேர்க்க வேண்டும்.
- வெண்ணெய் உருகியதும் வெங்காயம், பச்சை மிளகாய், கேப்சிகம் சேர்க்கவும். வெங்காயம் மற்றும் கேப்சிகம் சிறிது மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
- அதன் பிறகு வெங்காயம் வதங்கியதும், நறுக்கிய தக்காளியைச் சேர்த்து, சில நொடிகள் வதக்கி, மஞ்சள் தூள், சீரகத் தூள், சிவப்பு மிளகாய் தூள் மற்றும் சாம்பார் தூள் போன்ற அனைத்து மசாலாப் பொடிகளையும் சேர்த்து வதக்க வேண்டும்.
- பின் தக்காளி சிறிது மென்மையாகும் வரை நன்கு வதக்கவும்.
- இந்த நிலையில், நொறுக்கப்பட்ட பனீரைச் சேர்த்து, தேவையான உப்பு சேர்த்து நன்கு கிளறவும்.
- அதன் பிறகு நறுக்கிய புதினா இலைகளை தூவி, பனீர் புர்ஜி மசாலாவுடன் இணைக்க வேண்டும்.சூடான பனீர் புர்ஜி ரெடி.