புரட்டாசி மாத ராசிபலன்!!
மேஷம் மேஷ ராசி நேயர்களே உங்களுக்கெல்லாம் இந்த மாதத்திலே மிக அற்புதமான மாதமாக அமைய போகின்றது. நீங்கள் நினைத்ததை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். இதுவரை இருந்த தேக்க நிலை மாறும், தெளிவு பிறக்கும்.ஊக்கமும் உற்சாகமும் கொண்டு நீங்கள் செயல்படுவீர்கள். வருமானம் உங்களுக்கு உயர்வாக
மேஷம்
மேஷ ராசி நேயர்களே உங்களுக்கெல்லாம் இந்த மாதத்திலே மிக அற்புதமான மாதமாக அமைய போகின்றது. நீங்கள் நினைத்ததை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். இதுவரை இருந்த தேக்க நிலை மாறும், தெளிவு பிறக்கும்.ஊக்கமும் உற்சாகமும் கொண்டு நீங்கள் செயல்படுவீர்கள். வருமானம் உங்களுக்கு உயர்வாகவே இருக்கும். காதல் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம். திருமணத்திற்கு முயற்சி செய்பவர்கள் நல்ல பலன் காண்பீர்கள். அரசு தொடர்பான வேலைகளில் இருந்த தடைகள் அகன்று நல்ல முடிவு கிடைக்கும். சிலர் வீடு, வாகனம் வாங்கும் எண்ணத்தை நிறைவேற்றுவீர்கள். சில நேரங்களில் முக்கிய முடிவு எடுப்பதில் தயக்கம் காட்டுவீர்கள். குடும்பத்தில் இருந்த வீண் பிரச்சனைகள் நீங்கி அமைதி ஏற்படும்.
ரிஷபம்
ரிஷப ராசி நேயர்களே உங்களுக்கெல்லாம் இந்த மாதம் ராசிநாதன் சுக்கிரன் நான்காம் இடத்தில் சுகஸ்தானத்தில் கேதுவோடு இணைந்திருக்கிறார். சுகங்களும் சந்தோஷங்களும் அதிகரிக்கின்ற மாதம். அதிகார பதவியில் உள்ளவர்களின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் நல்லிணக்கம் நிலவும். தம்பதியருக்கு மகிழ்ச்சியான தருணங்கள் வரும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனக் கசப்பு மாறும். முன்னேற்ற பாதையில் இருந்த முட்டுக்கட்டைகள் எல்லாம் அகலும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல கவனம் தேவைப்படும். போட்டித் தேர்வுகளில் சாதனை படைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. புதிய வேலை வாய்ப்பு தேடுபவர்கள் சாதகமான முடிவை பெறுவீர்கள்.
மிதுனம்
மிதுன ராசி நேயர்களே உங்களுக்கெல்லாம் ராசிநாதனே புதன். புதனுக்குரிய விஷ்ணுவை கொண்டாடுகின்ற மாதம். மாதம் முழுவதும் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும். சுபச் செய்திகள் வந்த வண்ணமாக இருக்கும். குடும்ப முன்னேற்றம் நீங்கள் எடுத்த முயற்சிகளில் எல்லாம் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். முதலீட்டில் லாபம் கிடைக்கும். தம்பதியருக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும். உறவினர்களிடமிருந்து நிதி ஆதரவு கிடைக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். புதிய பொறுப்புகள் வரலாம். வெளிநாட்டு வாய்ப்புகள் உருவாகும். மாணவர்கள் தங்கள் உழைப்பால் நல்ல மதிப்பெண் பெறுவீர்கள். பிள்ளைகள் உங்களது ஆலோசனைகளை கேட்பார்கள்.
கடகம்
கடக ராசி நேயர்களே அஷ்டமத்து சனியின் ஆதிக்கம் வலுவிழந்து இருப்பதால் இந்த மாதம் தொட்டது துலங்கும் தொழில் முன்னேற்றம் ஏற்படும். நினைத்தது நிறைவேறும். நீங்கள் என்ன எதை எதிர்பார்த்து காத்திருந்தீர்களோ அது நடைபெறும் மாதம் இந்த மாதம். தொழிலில் மேலதிகாரிகள் உங்களை பாராட்டுவர். இதுவரை இருந்த ஆரோக்கிய குறைபாடுகள் அகலும். நிலம், வீடு தொடர்பான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் அகலும். தடைப்பட்ட பண உதவி கிடைக்கும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி சூழல் நிலவும். தம்பதியரிடையே அன்பு அதிகரிக்கும். உடல் நலம் சீராக இருக்கும். பழைய கடன்கள் அடைக்கப்படும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் சாதகமாக நடந்து முடியும்.
சிம்மம்
சிம்ம ராசி நேயர்களே உங்களுக்கு ராசியிலேயே சுக்கிரன் ஏழாம் இடத்தில் சனி. சந்திர ஸ்தானத்தில் சனி வக்கிரம் பெற்றிருப்பதால் இதுவரை இருந்த குடும்ப பிரச்சனைகள் இப்பொழுது படிப்படியாக மாறும். தொழிலில் சில தடைகள் இருந்தாலும் கடைசியில் வெற்றி உங்களுக்கே வரும். பிள்ளைகளின் எதிர்காலம் தொடர்பாக அதிகம் சிந்திப்பீர்கள். உயர் பதவியில் உள்ளவர்கள் உங்களுக்கு பழக்கமாவார்கள். திடீரன சில காரியங்கள் முடிவடையலாம். காதல் வாழ்க்கையில் சில சிக்கல்கள் வரலாம். தொழிலை விரிவுபடுத்த எடுத்த முயற்சிகளும் வெற்றி உண்டு. குழந்தைகள் தொடர்பான மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் வரலாம்.
கன்னி
கன்னி ராசி நேயர்களே ராசியிலேயே சூரியன் புதன் ஆயத்திய யோகம். கல்விக்காக கலைக்காக எடுத்த முயற்சிகள் கைகூடும். கடமையில் இருந்த தொய்வு அகலும். சகோதர வழியில் இனிய செய்தி ஒன்று வரலாம். தொழிலில் உழைப்புக்கு உயர்வு கிடைக்கும். மேலதிகாரிகள் உங்களை பாராட்டுவர். புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். நண்பர்கள் நம்பிக்கைக்குரிய விதத்தில் உங்களிடம் நடந்து கொள்வார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். தொழிலிலே இருமடங்கு லாபங்கள் கிடைக்கலாம். சிலருக்கு ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். அரசியலில் முன்னேற்றம் ஏற்படும். மாணவர்கள் தங்கள் உழைப்பால் சிறந்த மதிப்பெண் பெறுவீர்கள்.
துலாம்
துலாம் ராசி நேயர்களே உங்களுக்கு ராசியிலேயே செவ்வாய் தனாதிபதி இருக்கின்ற பொழுது பணக்கவலை இல்லை. பொருளாதார பற்றாக்குறை அகலும். மாத கடைசியில் இடமாற்றங்கள், வீடு மாற்றங்கள், உத்தியோக மாற்றங்கள் கூட வரலாம். ஆடை ஆபரணம் வாங்குவீர்கள். தொழிலில் உங்கள் முயற்சிகள் வெற்றியைத் தரும். ஆனால் பணி அழுத்தம் அதிகமாக இருக்கும். சாதரியமாக பேசி பல காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். நிதி நிலை சீராக இருக்கும். பழைய கடன்கள் அடைக்கப்படும். முதலீடுகளில் சற்றே கவனமாக இருக்க வேண்டும். புதிய கூட்டாளர்களுடன் வேலை செய்வதில் கவனமாக இருங்கள். புதிய நண்பர்களின் தொடர்பு கிடைக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி நேயர்களே உங்களுக்கு இந்த மாதம் வெற்றி செய்திகள் வீடு வந்து சேர்கின்ற மாதம். நினைத்தது நிறைவேறும். நிகழ்கால தேவைகள் பூர்த்தியாகும். முன்னேற்ற பாதையில் அடியெடுத்து வைப்பீர்கள். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். அரசு வேலை சார்ந்த முயற்சிகளில் வெற்றி. வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். என்ன செய்ய நினைத்தாலும் செய்ய இயலும். புதிய முதலீடுகள் செய்வதற்கு நல்ல நேரம். பழைய கடன்களை அடைக்க வாய்ப்பு கிடைக்கும். நம்பிக்கைகள் அனைத்தும் நடைபெறும். காதல் வாழ்க்கையில் இனிமை அதிகரிக்கும். பகைவர் அழிக்கப்படுவார்கள். உங்களின் உற்சாகமும், தைரியமும் அதிகரிக்கும். திருமணத்திற்கு முயற்சி செய்பவர்கள் நல்ல முடிவு காண்பீர்கள்.
தனுசு
தனுசு ராசி நேயர்களே உங்களுக்கெல்லாம் குரு பார்வை இருக்கின்றது. குழப்பங்கள் அகலும் மாதம். அதே நேரம் கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டுகின்ற மாதம். குலதெய்வ வழிபாட்டின் மூலமும் குடும்ப முன்னேற்றத்தை நீங்கள் அதிகரித்து கொள்ள விரும்புவீர்கள். முதலீட்டில் லாபம் கிடைக்கும். நிலம், வீடு தொடர்பான முயற்சிகள் வெற்றியளிக்கும். திருமண முயற்சிகள் வெற்றியளிக்கும். குடும்பத்திலிருந்து பிரிந்திருந்த நபர்கள் மீண்டும் குடும்பத்துடன் இணைவதற்கான வாய்ப்புகள் உண்டு. மாணவர்களுக்கு கல்வியில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும். ஆரோக்கியத்தில் சிறு தொல்லைகள் இருக்கலாம். சிலருக்கு திருமணம், குழந்தை பாக்கியம் ஏற்பட வாய்ப்புள்ளது.
மகரம்
மகர ராசி நேயர்களே அஷ்டமத்தில் கேது இருப்பதனாலே அலைச்சலுக்கேற்ற ஆதாயம் உண்டு. அதிகார வர்க்கத்தின ஆதரவோடு ஒரு நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். இதுவரை நீங்கள் எதிர்பார்த்த தொழில் இப்பொழுது உங்களுக்கு அமையும். வேலைக்காக எதிர்பார்த்து காத்திருந்தால் அந்த வேலை அமையும். உயர்வு வாய்ப்பு அதிகம். வெளிநாட்டு வேலை வாய்ப்பு கிடைக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும், அமைதியும் நிறைந்திருக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். ஒரு நல்ல முயற்சிகளில் நீங்கள் ஈடுபட்டு வெற்றி காண்வீர்கள். நிதி நிலை வலுவடையும். புதிய முதலீடுகள் செய்ய நல்ல நேரம். சிலருக்கு உடல் நல பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
கும்பம்
கும்ப ராசி நேயர்களே உங்கள் ராசியிலேயே சனி வக்கர இயக்கத்தில் இருப்பதனாலே ஏழரை சனியால் ஏற்பட்ட பெரிய அளவு பாதிப்புகள் ஏற்படாமல் ஓரளவு நடைமுறையில் வாழ்க்கை தேவைகள் உங்களுக்கு பூர்த்தியாகும். கல்யாண கனவுகள் நனவாகலாம். குடும்பம், பணியிட பொறுப்புகளை உணர்ந்து செயல்படவும். நண்பர்களின் உதவியைப் பெறுவீர்கள். கடமையை செவ்வனை செய்து முடிப்பீர்கள். துணியும் தன்னம்பிக்கையும் கூடும். அரசு தொடர்பான வேலைகளில் நல்ல முடிவு கிடைக்கும். உடல் நலம் சீராக இருக்கும். ஆனால் மன அழுத்தம் ஏற்படாமல் இருப்பதில் கவனம் தேவை. மாணவர்களுக்கு கல்வி தொடர்பான கவலைகள் நீங்கும்.
மீனம்
மீன ராசி நேயர்களே உங்களுக்கு அற்புதமான மாதம். இந்த மாதம் யோகங்கள் அடுக்கடுக்காக வருகின்ற மாதம். ஏனென்றால் குரு பெயற்சி குரு அதிச்சாரமாக கடகத்துக்கு வந்தால் உங்கள் ராசியையும் பார்க்க போகின்றார். தொட்டது துலங்கும். தொழில் முன்னேற்றம் ஏற்படும். விலைந்த பொருளைகளை வாங்கி மகிழ்வீர்கள். சிலருக்கு தங்க ஆபரணங்கள் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். வங்கிகளில் சேமிப்பு உயரும். நீண்ட நாட்களாக காத்திருந்த வாய்ப்புகள் கைகூடும். உடல் நலம் சிறப்பாக இருக்கும். ஆன்மிகப் பயணம், ஆலய தரிசனம் செய்யும் வாய்ப்பு கிடைக்கும். சிலருக்கு பயணங்களால் சிரமங்கள் ஏற்படலாம். சக மாணவர்களிடம் இருந்த கருத்து வேற்றுமை குறையும்.
இதனையும் படியுங்கள் : 12 ராசிகளுக்கான சுக்கிர பெயர்ச்சி பலன்கள்!!