வேத ஜோதிடத்தின் படி ஒவ்வொரு கிரகங்களின் மாற்றம் அனைத்து ராசியினருக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். அன்பு, அழகு, படைப்பாற்றல், செல்வம் ஆகியவற்றின் காரணி கிரகமாக இருப்பவர் சுக்கிரன். ஒருவரது ராசியில் சுக்கிரன் உச்சம் பெற்றிருந்தால், அந்த நபர் அனைவராலும் விரும்பப்படுகிறார். அனைத்து வித செல்வங்களையும் அனுபவிக்கிறார். அந்த வகையில் கடந்த ஜூலை 26 தொடங்கி மிதுன ராசியில் பயணித்து வரும் சுக்கிரன் வரும் ஆகஸ்ட் 21 அன்று கடக ராசியில் குடியேறுகிறார். செல்வத்தை பிரதிபலிக்கும் ஒரு கிரகமாக அழைக்கப்படும் சுக்கிரன், கடக ராசியில் குடியேறும் இந்த நிகழ்வு மங்களகரமான ஒரு கிரக நிலை மாற்றமாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் சுக்கிரன் பெயர்ச்சி 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும் என்று இந்த ஆன்மிகப் பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
மேஷம்

கடக ராசியில் நிகழும் இந்த கிரக பெயர்ச்சி, மேஷ ராசியினரின் ஜாதகத்தில் 4-வது வீட்டில் தாக்கத்தை உண்டாக்குகிறது. இந்த மாற்றம் ஆனது, குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியை கொண்டு வரும் ஒரு மாற்றம் ஆகும். இந்தப் பெயர்ச்சியின் விளைவாக, நீங்கள் செல்வத்தையும் செழிப்பையும் பெறலாம். நீங்கள் பணம் சம்பாதிக்க புதிய வாய்ப்புகளைப் பெறலாம். தொழில் முன்னேற்றம், பதவி உயர்வு மற்றும் வணிகத்தில் லாபம் கிடைக்கும். காதல் மற்றும் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
ரிஷபம்

சுக்கிரன் பெயர்ச்சியின் தாக்கம் ரிஷப ராசியினரின் ஜாதகத்தில் 3-வது வீட்டில் மாற்றத்தை கொண்டு வருகிறது. உடன் பிறந்தவர்களுடன் காணப்பட்ட பிரச்சனைகள் முடிவுக்கு வரும், குறிப்பாக இளைய சகோதரன் – சகோதரியுடன் பாசமான உறவு உண்டாகும். நிதி ரீதியாக, இந்த நேரம் உங்களுக்கு நன்மைகளைத் தரக்கூடும். குறிப்பாக கலை மற்றும் இலக்கிய மாணவர்கள் நல்ல பலன்களைப் பெற வாய்ப்புள்ளது. குடும்பத்துடன் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள். இப்போது வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.
மிதுனம்

கடக ராசிக்கு குடியேறும் சுக்கிரன், மிதுன ராசியினரின் ஜாதகத்தில் 2-வது வீட்டில் மாற்றத்தை கொண்டு வருகிறார். தன லாபத்தை குறிக்கும் இந்த வீட்டில் நிகழும் மாற்றம், தொழில் வாழ்க்கையில் எண்ணற்ற மாற்றங்களை கொண்டு வருகிறது. தேவையற்ற செலவுகளைத் தவிர்க்கவும். இந்த நேரத்தில் நிதி நிர்வாகத்தை சிறப்பாகச் செய்யுங்கள். முதலீடுகளால் நல்ல லாபம் கிடைக்கும் காலம் இது. காதல் உறவுகள் வலுப்பெறக்கூடும். இந்த நேரத்தில் படைப்புப் பணிகளில் வெற்றி பெறுவீர்கள்.
கடகம்

சுக்கிரனின் இந்த நிலை மாற்றம் கடக ராசியில் உண்டாகும் நிலையில், மற்ற ராசிகளை காட்டிலும் அதிகம் நன்மை பெறும் ஒரு ராசியாக கடக ராசி பார்க்கப்படுகிறது. இந்த நேரத்தில் உங்கள் மீதான ஈர்ப்பு அதிகரிக்கும். உங்கள் வார்த்தைகள் மற்றும் ஆளுமையால் ஈர்க்கப்படுவார்கள். தொழிலில் மகிழ்ச்சி மற்றும் வெற்றியைக் கொண்டுவரக்கூடும். சொத்து, ரியல் எஸ்டேட் மற்றும் வாகனங்கள் மூலம் லாபம் உண்டாகும். புதிய வருமான வழிகள் திறக்கும், சமூக வலைப்பின்னல் பலப்படும். காதல் மற்றும் திருமணத்தில் நல்லிணக்கம் அதிகரிக்கும்.
சிம்மம்

ஆளுமை மிக்க சிம்ம ராசியினருக்கு இந்த சுக்கிரன் பெயர்ச்சி, பண வரவு அளிக்கும் பயணங்களை கொண்டு வருகிறது. ஆம், குறித்த இந்த காலத்தில் சிம்ம ராசியினர் தங்கள் தொழில் வளர்ச்சிக்காக அதிக பயணங்களை மேற்கொள்ள வேண்டி இருக்கும். பயண வாய்ப்புகள் பெறலாம். பணியிடத்தில் வெற்றி பெறுவதற்கான வலுவான வாய்ப்புகள் உங்களுக்கு இருக்கும். நீண்ட பயணங்களில் வெற்றியை தரும். சர்வதேச வணிகத்தில் லாபம் கிடைக்கும், சொத்து முதலீடுகளுக்கு இது நல்ல நேரம். புதிய நண்பர்கள் உருவாகக்கூடும்.
கன்னி

கடக ராசியில் உண்டாகும் இந்த சுக்கிரன் பெயர்ச்சி ஆனது, கன்னி ராசியினரின் ஜாதகத்தில் 11-வது வீட்டில் மாற்றத்தை கொண்டு வருகிறது. நிதி நிலையை குறிக்கும் இந்த கட்டம் ஆனது, கன்னி ராசியினரின் வருமானத்தை இரட்டிப்பாக்குகிறது. மக்கள் உங்கள் பேச்சைக் கவனமாகக் கேட்பார்கள். சகோதர சகோதரிகள் மற்றும் நண்பர்களிடமிருந்து உங்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். உங்கள் கவலைகள் நீங்கும். காதல், குழந்தைகள் மற்றும் படைப்பாற்றல் மேம்படும். பங்குச் சந்தையில் முதலீடு லாபத்தை தரும்.
துலாம்

சுக்கிரன் பெயர்ச்சியின் தாக்கம் துலாம் ராசியினருக்கு ஆரோக்கியமான வாய்ப்புகளை கொண்டு வருகிறது. குறிப்பாக, தொழில் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை கொண்டு வருகிறது. இந்த நேரத்தில் நீங்கள் நண்பர்களுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள், புதியவர்களைச் சந்திப்பீர்கள். கடின உழைப்பின் பலனைப் பெறுவீர்கள். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். உங்கள் கனவுகள் நிறைவேற வாய்ப்புள்ளது. குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வெளிநாடுகளுடன் தொடர்புடையவர்களிடமிருந்து நீங்கள் பயனடையலாம்.
விருச்சிகம்

விருச்சிக ராசியினரின் ஜாதகத்தில் 9-வது வீட்டில் மாற்றத்தை கொண்டு வருகிறார் சுக்கிரன். இதன் விளைவு, பணியிடத்தில் காணப்படும் எதிரிகளை குறைக்கும், ஆரோக்கியமான மாற்றத்தை கொண்டு வரும். அரசு மற்றும் நிர்வாக விஷயங்களும் சுமூகமாக தொடரலாம். மதப் பயணங்கள் சாத்தியமாகும். தைரியம் அதிகரிக்கும். வணிகத்தில் புதிய ஒப்பந்தங்கள், பதவி உயர்வுகள் கிடைக்கும். இந்த நேரத்தில், சமூக நிகழ்வுகளில் பங்கேற்கவும், உங்கள் நட்பு வட்டத்தை அதிகரிக்கவும். காதல் வாழ்க்கையிலும் நீங்கள் மகிழ்ச்சியைப் பெறுவீர்கள்.
தனுசு

தனுசு ராசியினரின் ஜாதகத்தில் 8-வது வீட்டில் மாற்றத்தை கொண்டு வருகிறார் தனுசு. உடல் ஆரோக்கியத்தை குறிக்கும் இந்த கட்டம், சுக்கிரன் பெயர்ச்சியின் தாக்கம், உங்கள் சேமிப்புகளை குறைக்கும் அளவுக்கு சூழ்நிலைகளை மாற்றும். குடும்பத்தினர் அல்லது உறவினர்களிடையே சுப நிகழ்வுகள் நடைபெறலாம். வெளியூர் மற்றும் வெளிநாடு சென்று செல்வம் சேர்க்கும் நிலை உண்டாகும். அலுவலகத்தில் ஒரு சிலருக்கு இடமாற்றம் உண்டாகலாம். தொழிற் கூட்டாளிகள் உடன் இருந்த சிக்கல்கள் தீரும்.
மகரம்

கடக ராசியில் குடியேறும் சுக்கிரன் மகர ராசியினரின் ஜாதகத்தில் 7வது வீட்டில் தாக்கத்தை உண்டாக்குகிறது. இதன் தாக்கம் மண வாழ்க்கையில் பிரதிபலிக்கிறது. காதல் உறவுகளில் இதுவரை இருந்த தடைகள் நீங்கும். தேர்வுகளில் வெற்றி மற்றும் பொழுதுபோக்குக்கான வாய்ப்புகள் ஆகியவற்றை நீங்கள் அனுபவிக்கலாம். சமூகத்தில் உயர்ந்த மதிப்பும், செல்வாக்கும் உண்டாகும் காலம் இது. தொழில் மற்றும் வேலையில் தொட்டதெல்லாம் துலங்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைக்கூடும். காதலிப்பவர்களுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும்.
கும்பம்

கும்ப ராசியினரின் ஜாதகத்தில் 6-வது வீட்டில் மாற்றத்தை கொண்டு வருகிறார் சுக்கிரன். பணியிடத்தில் காணப்பட்ட பிரச்சனைகள் முடிவுக்கு வரும். திருமண வயதில் இருந்தால், திருமணம் நடக்கலாம். இந்த பெயர்ச்சி உங்களுக்கு சாதகமான பலன்களைத் தரும். காதல் உறவுகள் நெருக்கமாகும், திருமண வாழ்க்கை அமைதியாக இருக்கும். சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு முன்னேற்றம் கூடும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். வேலையில் தலைமை பொறுப்புகள் தேடி வரும். புதிய முதலீடுகளை செய்ய முன்வருவீர்கள்.
மீனம்

சுக்கிரன் பெயர்ச்சியின் தாக்கம், மீன ராசியினரின் ஜாதகத்தில் 5-வது வீட்டில் தாக்கத்தை உண்டாக்குகிறது. இந்த மாற்றம் ஆனது, மீன ராசியினரின் குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியை கொண்டு வருகிறது. சொத்து, வீடு மற்றும் வாகனங்கள் வாங்கலாம். மன திருப்தியை அதிகமாக உணரலாம். இந்த நேரத்தில், உங்கள் காதல் மற்றும் திருமண வாழ்க்கை உறவுகளில் இனிமை இருக்கும். வாழ்க்கைத் துணையுடனும் குடும்பத்துடனும் மகிழ்ச்சியான பொழுதை செலவிட வாய்ப்பு கிடைக்கும். வாழ்க்கைத்துணை உங்கள் செயல்பாடுகளுக்கு உதவிகரமாக இருப்பார்.
இதனையும் படியுங்கள் : 2025ல் ஒரு சில ராசிகளுக்கான சனி பெயர்ச்சி பரிகாரம்!!


