Advertisement
அசைவம்

செட்டிநாடு காடை கிரேவி இப்படி ஒரு தடவை ட்ரை பண்ணி பாருங்க! கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்!

Advertisement

ஞாயிற்றுக் கிழமை வந்துவிட்டது. பலரும் என்ன சமைத்து நாவிற்கு விருந்தளிக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருப்பார்கள். நீங்கள் சற்று வித்தியாசமாக அசைவ உணவை செய்து சுவைக்க நினைத்தால், அதற்கு வட இந்திய ஸ்பெஷல் ரெசிபியான செட்டிநாடு காடை கிரேவி சிறந்த தேர்வாக இருக்கும். செட்டிநாடு உணவுகளின் சுவை சைவ பிரியர்களுக்கும் சரி, அசைவ பிரியர்களுக்கும் சரி மிகவும் பிடித்தமான ஒன்று.

செட்டிநாடு உணவின் மசாலா நாவை சுண்டி இழுக்கும். தூக்கலான மசாலா சேர்த்த நாட்டுக்கோழி குழம்பு, ஆட்டுக்கறிக் குழம்பு, காரைக்குடி இறால் என அசைவத்தில் மெனு வரிசைக்கட்டி நிற்க, சைவத்திலும் காரக்குழம்பு, கூட்டு, மசியல், பொரியல், துவையல், பிரட்டல், பருப்பு உருண்டை குழம்பு என ஏராளமான பிரத்தியேக செட்டிநாடு உணவுகள் உள்ளன. செட்டிநாடு காடை கிரேவி சாதத்திற்கு மட்டுமின்றி, சப்பாத்திக்கும் அட்டகாசமாக இருக்கும்.

Advertisement

அதோடு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் வகையிலும் இருக்கும். பொதுவாக அசைவ பிரியர்களுக்கு காடை என்றால் மிகவும் பிடிக்கும். காடையில் பலவகையான ரெசிப்பீஸ் செய்யலாம். அவற்றில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் அனைவரும் விரும்பி சாப்பிட கூடிய ஒன்று தான் செட்டிநாடு காடை கிரேவி. இந்த செட்டிநாடு காடை கிரேவியை மிகவும் சுவையாக எப்படி செய்யலாம் என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.

செட்டிநாடு காடை கிரேவி | Quail Gravy Recipe In Tamil

Print Recipe
செட்டிநாடு காடை கிரேவி சாதத்திற்கு மட்டுமின்றி, சப்பாத்திக்கும் அட்டகாசமாக இருக்கும். அதோடு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும்
Advertisement
வகையிலும் இருக்கும். பொதுவாக அசைவ பிரியர்களுக்கு காடை என்றால் மிகவும் பிடிக்கும். காடையில் பலவகையான ரெசிப்பீஸ் செய்யலாம். அவற்றில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் அனைவரும் விரும்பி சாப்பிட கூடிய ஒன்று தான் செட்டிநாடு காடை கிரேவி. இந்த செட்டிநாடு காடை கிரேவியை மிகவும் சுவையாக எப்படி செய்யலாம் என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
Course Gravy
Cuisine tamil nadu
Advertisement
Keyword Quail Gravy
Prep Time 5 minutes
Cook Time 10 minutes
Servings 4
Calories 789

Equipment

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி

Ingredients

  • 4 காடை
  • 150 கிராம் சின்ன வெங்காயம்
  • 2 தக்காளி
  • 1 டேபிள் ஸ்பூன் மல்லி
  • 1/2 டேபிள் ஸ்பூன் சோம்பு
  • 1 டேபிள் ஸ்பூன் மிளகு
  • 2 சிறிய துண்டு பட்டை
  • 1 டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல்
  • 1 நச்சத்திர சோம்பு
  • 1 லவங்கம்
  • 1 டேபிள் ஸ்பூன் சீரகம்
  • 4 மிளகாய்
  • 6 பூண்டு
  • 2 இஞ்சி
  • 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  • உப்பு தேவைக்கேற்ப
  • மல்லிதழை சிறிதளவு

Instructions

  • ஒரு கடாயில் சோம்பு, மல்லி, மிளகு, நட்சத்திர சோம்பு, லவங்கம், பட்டை மற்றும் சீரகம் சேர்த்து வறுத்து எடுக்கவும்.
  • பின் அதே கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்த மிளகாய், தேங்காய் துருவல், இஞ்சி மற்றும் பூண்டு சேர்த்து வதக்கவும். பின் இவை இரண்டையும் பேஸ்ட் போல அரைத்து கொள்ளவும்.
     
  • ஒரு குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  • வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கி, பின் அரைத்த விழுதை மற்றும் உப்பு சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
  • பின்பு காடையை அதில் சேர்த்து, கொஞ்சம் தண்ணீர் ஊற்றி 2-3 விசில் போடவும். கடைசியில் சிறிது மிளகு தூள், சீரகத்தூள், மல்லி தழை தூவி இறக்கவும்.
  • சுவையான செட்டிநாடு காடை கிரேவி தயார்.

Nutrition

Serving: 500g | Calories: 789kcal | Carbohydrates: 34g | Sodium: 352mg | Potassium: 456mg | Fiber: 3g | Calcium: 36mg
Advertisement
Prem Kumar

Recent Posts

வைகாசி விசாகத்தில் முருகப் பெருமானை வழிபட வேண்டிய நேரம்

உலகோர் அனைவருக்கும் தெய்வமாக, ஸ்கந்தன், சுப்பிரமணியன், விசாகன் என்று பல்வேறு திருநாமங்களோடு அருள்பவன் முருகன். அந்த அழகனை, 'தமிழ்க் கடவுள்'…

10 மணி நேரங்கள் ago

ஈவினிங் டைம்ல சாப்பிடுவதற்கு இந்த மாதிரி சுட சுட சிக்கன் ரோல் ஒரு தடவை செஞ்சு பாருங்க!

பொதுவா நமக்கு சிக்கன் ரோல் சிக்கன் பப்ஸ் கேக் சமோசா அந்த மாதிரி சாப்பிடனும் போல இருந்துச்சுன்னா அதுக்குன்னு நம்ம…

12 மணி நேரங்கள் ago

இட்லி மீதமாயிடுச்சு அப்படின்னா இந்த மாதிரி மசாலா இட்லி செஞ்சு பாருங்க!

வீட்ல இட்லி மீதமாயிருச்சு அப்படின்னா அதை வைத்து இட்லி உப்புமா தான் செய்வோம் ஆனா எல்லாருக்குமேலா இந்த இட்லி உப்புமா…

20 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 18 மே 2024!

மேஷம் எதிர்பாராத பயணம் களைப்பை ஏற்படுத்தலாம். இன்று பொறுமை குறைவாக இருக்கும் - அதனால் கவனமாக இருங்கள். வேலையில் இன்று…

22 மணி நேரங்கள் ago

வீட்டு கதவு ஜன்னலை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் திறந்து வைப்பதால் ஏற்படும் அதிர்ஷ்டங்கள்

இந்துக்களுக்கு பொதுவாக ஆன்மீகத்திலும் ஜோதிடத்திலும் வாஸ்து சாஸ்திரத்திலும் அதிகப்படியான நம்பிக்கை இருக்கும் அந்த வகையில் ஒரு வீடு கட்டுவதற்கு அஸ்திவாரம்…

1 நாள் ago

குடல் குழம்பு இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

ஆட்டுக்கறி குழம்பு ஆட்டு குடல் குழம்பு ஆட்டு ஈரல் ப்ரை, சுவரொட்டி ஃப்ரை, மட்டன் சூப், மட்டன் மூளை ப்ரை,…

2 நாட்கள் ago