வித்தியாசமான முள்ளங்கி வறுவல் ஒரு முறை இப்படி செய்து பாருங்கள் இனிமேல் இப்படிதான் அடிக்கடி செய்வீர்கள்!!!

உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்ய போகிறீர்களா? அதற்கு சைடு டிஷ்ஷாக மசாலா செய்து அலுத்துவிட்டதா? ஒரு வித்தியாசமான, அதே சமயம் சுவையான ஒரு சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் முள்ளங்கி உள்ளதா? அப்படியானால் அதைக் கொண்டு வறுவல் செய்யுங்கள். இந்த முள்ளங்கி வறுவல் சப்பாத்திக்

By ·

உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்ய போகிறீர்களா? அதற்கு சைடு டிஷ்ஷாக மசாலா செய்து அலுத்துவிட்டதா? ஒரு வித்தியாசமான, அதே சமயம் சுவையான ஒரு சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் முள்ளங்கி உள்ளதா? அப்படியானால் அதைக் கொண்டு வறுவல் செய்யுங்கள். இந்த முள்ளங்கி வறுவல் சப்பாத்திக்கு மட்டுமின்றி, புளிக்குழம்பிற்கு சைடு டிஷ்ஷாகவும் அற்புதமாக இருக்கும். முள்ளங்கி வறுவல் என்றதும் பலர் அதன் வாசனையை நினைத்து முகம் சுளிக்கலாம். ஆனால் இந்த முள்ளங்கியை நன்கு வேகவைத்து செய்வதால், வாசனை அதிகம் வராது.

முள்ளங்கியில் உடலுக்கு தேவையான ஊட்டச் சத்துக்கள் பல நிறைந்துள்ளன. கால்சியம், வைட்டமின் சி, ரிபோஃப்ளேவின், நியாசின், தியாமின், வைட்டமின் B6, ஃபோலேட், பொட்டாசியம், இரும்பு, மாங்கனீசு போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது முள்ளங்கி. நீர்ச்சத்து அதிகம் உள்ள இந்த முள்ளங்கியை உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் ஆரோக்கியத்திற்கு பெரும் பலன் அளிக்கிறது.

இவ்வாறு உடலுக்குத் தேவையான அத்துனை ஊட்டச்சத்துக்களையும் முள்ளங்கி கொண்டுள்ளதால், தினமும் அல்லது வாரத்திற்கு ஒரு முறையாவது உங்களது உணவு முறையில் சேர்த்துக் கொள்ளும் போது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். ஆனால் பெரும்பாலான வீடுகளில் முள்ளங்கி சமைப்பதை தவிர்த்தே வருகின்றனர். ஆனால் வறுவல் போன்ற சுவையில் முள்ளங்கியையும் வறுத்து கொடுத்தால் அனைவரும் விருப்பமாக சாப்பிடுவார்கள்.

இதனையும் படியுங்கள் : இதை முள்ளங்கியில் செய்ததுனு சொன்ன யாருமே நம்ப மாட்டாங்க! முள்ளங்கி சாப்ஸ் இப்படி செய்து பாருங்க!

Recipes AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை