முள்ளங்கி உருளைக்கிழங்கு சேர்த்து இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்கள்! மதிய உணவுக்கு பக்காவான பொரியல் ரெசிபி!

- Advertisement -

புது விதமாக உருளைகிழங்கு சேர்த்து முள்ளங்கி பொரியலை இப்படி மட்டும் செய்து பாருங்கள். இது முள்ளங்கியில் செய்த பொரியலா என்று எல்லோரும் ஆச்சரியப்படும் அளவிற்கு இதன் சுவை அவ்வளவு அற்புதமாக இருக்கும். முள்ளங்கியில் அதிகமாக வைட்டமின் சி இருக்கிறது. இதில் நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் ஏ, பி, சி போன்ற ஊட்டச்சத்துக்களும் அதிக அளவில் இருக்கிறது. சிலருக்கு இதை சமைக்கலாம் என்றே தெரியாமல் தூக்கி போட்டு விடுகிறார்கள்..

-விளம்பரம்-

நீர்ச்சத்து நிறைந்த முள்ளங்கியை அடிக்கடி உணவோடு சேர்த்துக் கொள்ள வேண்டும். நிறைய பேருக்கு முள்ளங்கியில் இருந்து வீசும் ஒரு வாடை பிடிக்காது. அந்த வாடை இந்த முள்ளங்கி உருளை பொரியலில் சுத்தமாக தெரியாது. ஒரு முறை செய்து பாருங்களேன்.

- Advertisement -

முள்ளங்கியில் உடலுக்கு தேவையான ஊட்டச் சத்துக்கள் பல நிறைந்துள்ளன. நீர்ச்சத்து அதிகம் உள்ள இந்த முள்ளங்கியை உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் ஆரோக்கியத்திற்கு பெரும் பலன் அளிக்கிறது. ஆனால் இதன் சுவை பலருக்கும் விருப்பமானதாக இருப்பதில்லை.

பெரும்பாலான வீடுகளில் முள்ளங்கி சமைப்பதை தவிர்த்தே வருகின்றனர். ஆனால் உருளைக்கிழங்கு பொரியல் போன்ற சுவையில் முள்ளங்கியையும் சேர்த்து செய்து  கொடுத்தால் அனைவரும் விருப்பமாக சாப்பிடுவார்கள். வாங்க எப்படினு பதிவை படிச்சு தெரிஞ்சிக்கலாம்

Print
4 from 1 vote

முள்ளங்கிகீரை உருளை பொரியல் | Radishgreens Potato Poriyal Recipe In Tamil

 
புதுவிதமாக உருளைகிழங்கு சேர்த்து முள்ளங்கிகீரை பொரியலை இப்படி மட்டும் செய்து பாருங்கள். முள்ளங்கிகீரையில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் பல நிறைந்துள்ளன ஆனால் முள்ளங்கிகீரை சுவை பலருக்கும் விருப்பமானதாக இருப்பதில்லை.எனவே பெரும்பாலான வீடுகளில் முள்ளங்கி சமைப்பதை தவிர்த்தே வருகின்றனர். ஆனால் உருளைக்கிழங்குபொரியல் போன்ற சுவையில் முள்ளங்கிகீரையில் உருளையையும் சேர்த்து செய்து  கொடுத்தால் அனைவரும் விருப்பமாக சாப்பிடுவார்கள்.வாங்க எப்படினு பதிவை படிச்சு தெரிஞ்சிக்கலாம்
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: Side Dish
Cuisine: tamil nadu
Keyword: Radishgreens Potato Poriyal
Yield: 4

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1 கட்டு முள்ளங்கி கீரை
  • வேக வைத்த உருளைக்கிழங்கு
  • 1 தேக்கரண்டி மிளகாய்த்தூள்
  • 1/4 கப் தேங்காய்த்துருவல்
  • 2 பல் பூண்டு
  • 1 வெங்காயம்
  • 1/4 தேக்கரண்டி சீரகத்தூள்
  • மஞ்சள்த்தூள் தேவைக்கு
  • உப்பு தேவைக்கு

செய்முறை

  • வேக வைத்த உருளைக்கிழங்கை சிறுத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயம் மற்றும் கீரையை கழுவி பொடியாக நறுக்கவும்
  • முதலில் தேங்காய், மிளகாய்த்தூள், பூண்டு, சீரகத்தூள், மஞ்சள்த்தூள் ஆகியவற்றை மிக்ஸியில் போட்டுகொரகொரப்பாக அரைக்கவும்.
  • வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, வெங்காயம் தாளிக்கவும்.
  • வெங்காயம் வதங்கியதும் கீரையை போட்டு உப்பு சேர்த்து மூடி மிதமான தீயில் வதக்கவும். வதங்கியதும் வேக வைத்து நறுக்கிய உருளைக்கிழங்கை அதில் போட்டு வதக்கவும்
  • பின் அரைப்பை போட்டு மிதமான தீயில் வதக்கி இறக்கவும். இது ரசம் சாதம் மற்றும் சப்பாத்தி, பிரெட்டுடன்சாப்பிட பொருத்தமாக இருக்கும்.