வீடே மணக்க மணக்க முள்ளங்கி சாம்பார் இப்படி செய்து கொடுக்க இனி வீட்ல முள்ளங்கி சாம்பார் இப்படி செஞ்சி!
நாம் அனைத்து காய்கறிகளிலும் பலவிதமாக சாம்பார் வைத்திருப்போம். எல்லா காய்கறிகளையும் சேர்த்து கதம்ப சாம்பார் கூட செய்திருப்போம். இன்று நாம் செய்யவிருக்கும் சாம்பார் முள்ளங்கி சாம்பார். முள்ளங்கியில் அதிக அளவு நீர்சத்து உள்ளது . இந்த முள்ளங்கியை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ளும்போ
நாம் அனைத்து காய்கறிகளிலும் பலவிதமாக சாம்பார் வைத்திருப்போம். எல்லா காய்கறிகளையும் சேர்த்து கதம்ப சாம்பார் கூட செய்திருப்போம். இன்று நாம் செய்யவிருக்கும் சாம்பார் முள்ளங்கி சாம்பார். முள்ளங்கியில் அதிக அளவு நீர்சத்து உள்ளது . இந்த முள்ளங்கியை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ளும்போது உடலுக்கு தேவையான நீர்சத்துக்கள் அனைத்துமே கிடைக்கின்றன.
மேலும் சீறுநீரக பிரச்சினைகளை சரி செய்வதற்கு இந்த முள்ளங்கி மிகவும் பயன்படுகின்றது. ஆகையால் இந்த முள்ளங்கியை வாரத்தில் ஒருமுறையாவது அல்லது கிடைக்கும் பொழுதெல்லாம் உணவில் சேர்த்துக் கொள்வது உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தை கொடுக்கும். இந்த முள்ளங்கியில் பொரியல் செய்து சாப்பிட்டாலும் அதில் உள்ள பலன்கள் நமக்கு அப்படியே கிடைக்கும்.
முள்ளங்கி சத்து மிக்க காய் மட்டும் கிடையாது சுவையான ஒரு காயும் கூட. இந்த சுவை மிக்க முள்ளங்கியை உணவில் நாம் சேர்த்துக் கொள்ளும் பொழுது மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். முள்ளங்கி குழம்பில் இருக்கும் புளிப்பு தன்மையை தன்னுள் ஈர்த்து கொள்ளும் ஆனால் சாப்பிடுவதற்கு சுவையாகவும் இருக்காது. மிகவும் சுவை மிக்க இந்த முள்ளங்கி ஆரோக்கியமிக்கதாகவும் இருப்பதால் அதிலும் நீர் சத்து அதிகம் இருக்கக்கூடிய இந்த முள்ளங்கியை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்வது உடலுக்கு மேலும் பல ஆரோக்கியமான நன்மைகளை கொடுக்கும்.
உடலுக்கு நன்மை தரக்கூடிய காய்கறிகளை குழந்தைகள் விரும்பி சாப்பிட மாட்டார்கள் காரணம் அதன் சுவை அவர்களுக்கு பிடிக்காத ஆகையால் இதுபோல சாம்பார் அல்லது பொரியல் ஏதாவது ஒன்றில் சேர்த்துக் கொடுக்கும் பொழுது அந்த காய்கறியில் உள்ள சத்துக்கள் முழுவதும் குழம்பின் சாறில் இறக்கி விடுவதால் அவர்கள் உண்ணும் பொழுது உடலுக்கு சென்று சேர்கிறது. ஆகையால் முள்ளங்கியில் ஒருதரம் இதுபோன்று சாம்பார் வைத்து குழந்தைகளுக்கு கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இது அனைவரும் உண்ணுவதற்கு ஏற்ற ஒரு காயாகும். சரி வாருங்கள் எப்படி இந்த முள்ளங்கி சாம்பார் வைப்பது எப்படி தெரிந்து கொள்ளலாம்.
இதையும் படியுங்கள் : காலை டிபனுக்கு பக்காவான முள்ளங்கி ஊத்தாப்பம் ஒரு தடவை இப்படி செய்து பாருங்கள்! 2 ஊத்தாப்பம் அதிகமாவே சாப்பிடுவாங்க!