Advertisement
ஸ்வீட்ஸ்

தித்திக்கும் சுவையுடன் ராகி அல்வா செய்வது எப்படி ?

Advertisement

நமது அன்றாட வாழ்க்கையில் நாம் சாப்பிடும் உணவுகளில் கண்டிப்பாக ஒரு முறையாவது இனிப்பை சுவைத்து விடாமல் அந்த நாள் முடிவதில்லை. அந்த அளவுக்கு இனிப்பு பொருட்கள் நம் வாழ்வோடு ஒன்றிணைந்து வருகிறது. எந்தவித நல்ல காரியங்களும் மற்றும் சுப நிகழ்ச்சிகளும் நடந்தாலும் இனிப்பில்லாமல் அந்த நிகழ்ச்சி நடக்காது. ஆம் நாம் பொதுவாக இனிப்பு உதவுகளை தான் கடைகளில் சென்று வாங்கி சாப்பிடுவோம்.

இதையும் படியுங்கள் : தேவாமிர்தம் போல் லட்டு செய்வது எப்படி ?

Advertisement

ஆனால் இனிப்பு சாப்பிடுவதற்கு கடைகளில் தான் வாங்க வேண்டும் என்ற அவசியம் ஏதுமில்லை. நாம் நம் வீட்டிலேயே இனிப்ப உணவுகள் செய்து சாப்பிடலாமா அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருப்பது தித்திக்கும் சுவையுடன் ராகி அல்வா செய்வது எப்படி, தேவையான பொருட்கள், செய்முறை என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

அப்படியே மறக்காம எங்க YouTube சேனலையும் Subscribe பண்ணிருங்க.

ராகி அல்வா | Ragi Halwa Recipe in Tamil

Print Recipe
நாம் பொதுவாக இனிப்பு உதவுகளை தான் கடைகளில் சென்று வாங்கி சாப்பிடுவோம். ஆனால் இனிப்பு சாப்பிடுவதற்கு கடைகளில் தான் வாங்க வேண்டும் என்ற அவசியம் ஏதுமில்லை. நாம் நம் வீட்டிலேயே இனிப்ப உணவுகள் செய்து சாப்பிடலாமா அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருப்பது தித்திக்கும் சுவையுடன் ராகி அல்வா செய்வது எப்படி, தேவையான பொருட்கள், செய்முறை என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
Course sweets
Cuisine Indian, TAMIL
Keyword Ragi Helwa, ராகி அல்வா
Prep Time 20 minutes
Cook Time 20 minutes
Total Time 40 minutes
Servings 4 People
Calories 469

Equipment

  • 2 கடாய்
  • 1 பெரிய பவுள்
  • 1 பவுள்

Ingredients

  • 100 கிராம் நெய்
  • ¾ கப் ராகி மாவு
  • ¼ கப் கோதுமை மாவு
  • 10 முந்திரி
  • 1 கப் துருவிய வெல்லம்
  • ஏலக்காய் பொடி சிறிது
  • 2 கப் தண்ணீர்
  • 1 சிட்டிகை உப்பு

Instructions

  • முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து இரண்டு டீஸ்பூன் நெய் ஊற்றிக் கொள்ளவும் நெய் உருகி நன்றாக சூடேறியதும் 10 முந்திரி பருப்பை பாதி பாதியாக உடைத்து கடாயில் போட்டு வறுக்கவும்.
    Advertisement
  • அதன் பின் முந்திரி பருப்பு நன்கு சிவந்து வந்ததும் முந்திரி பருப்பை தனியாக ஒரு பவுளில் எடுத்து வைத்துக் கொள்ளவும். பின்பு ராகி மாவையும், கோதுமை மாவையும் சேர்த்து அதே கடாயில் மீதம் இருக்கும் நெய்யுடன் போட்டு நன்றாக வறுத்துக் கொள்ளவும்.
  • மாவு திருதிருவேன வறுத்து வந்ததும் தனியாக ஒரு பெரிய பவுளில் எடுத்து கொள்ளவும். பின்பு வேறொரு கடாயை அடுப்பில் வைத்து அதில் ஒரு கப் துருவிய வெல்லத்தை போட்டு அதனுடன் இரண்டு கப் அளவு தண்ணீர் ஊற்றி வெல்லம் கரையும் வரை கொதிக்க விடுங்கள்.
    Advertisement
  • பின்பு நாம் வறுத்து வைத்துள்ள ராகி மாவுடன் இந்த வெள்ளம் சேர்த்த சூடான நீரை ஊற்றிக் கொண்டே கலக்கி கொள்ளவும். மாவில் கட்டிகள் விழாமல் கலக்கி கொள்ளவும்.
  • பின்பு நாம் கலக்கி வைத்துள்ள மாவை கடாயில் ஊற்றி நன்கு கிளரி விட்டுக் கொண்டு இருக்கவும். மாவு தண்ணீர் வற்றி கட்டி பதத்திற்கு வரும் வரை கிளரி கொண்டே இருக்கவும் பின் ஒரு டீஸ்பூன் அளவு நெய் ஊற்றி கிளறிக் கொண்டே இருக்கவும்.
  • அதன் பின்பு நெய் மாவுடன் கரைந்து சென்றதும் மறுபடியும் ஒரு டீ ஸ்பூன் அளவு நெய் ஊற்றி கிளறிக் கொண்டே இருக்கவும் இப்படியே அல்வா பதத்திற்கு சட்டியில் ஒட்டாமல் வரும்வரை கிளறி கொள்ள வேண்டும்.
  • அல்வா பதத்திற்கு வந்தவுடன் கடைசியாக ஒரு டீஸ்பூன் நெய் ஊற்றி நம் முதலில் வறுத்து வைத்த முந்திரி பருப்பு வையும் சேர்த்து கடைசியில் சிறிது ஏலக்காய் பொடியை சேர்த்து நன்கு கிளறி விடவும் அவ்வளவுதான் தித்திக்கும் சுவையுடன் ராகி அல்வா இனிதே தயாராகி விட்டது.

Nutrition

Calories: 469kcal | Carbohydrates: 60g | Protein: 12g | Fat: 22g | Saturated Fat: 4.1g | Sodium: 195mg | Potassium: 187mg

English Overview: ragi helwa is one of the most important sweet in south india. Ragi helwa recipe or Ragi helwa seivathu eppadi or ragi helwa recipe in Tamil are a few important terms to describe this recipe in the tamil.

Advertisement
Prem Kumar

Recent Posts

இரவு டிபனாக ருசியான துவரம் பருப்பு அடை இப்படி ஒரு தரம் ட்ரை பண்ணி பாருங்க! 2 அடை அதிகமாவே சாப்பிடுவாங்க!

துவரம் பருப்பில் உடம்பிற்கு தேவையான அதிகப்படியான ஊட்டச்சத்துக்கள் இருக்கிறது. அதனால் தான் பல உணவை சமைப்பதாக இருந்தாலும் அதில் ஒரு…

1 மணி நேரம் ago

ருசியான வெஜிடபிள் ஒயிட் குருமா இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி ருசி தான்!!

இன்று உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? அதற்கு ஒரு அட்டகாசமான சைடு டிஷ் செய்ய வேண்டுமா? உங்கள் வீட்டில்…

2 மணி நேரங்கள் ago

தித்திக்கு சுவையில் ஆப்பிள் கீர் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! பார்தாலே நாவில் எச்சி ஊறும்!

கீர் ஒரு சுவையான வட இந்திய ரெசிபி ஆகும். கீரில் பல வகைகள் உள்ளன. பாதாம் கீர், கேரட் கீர்,…

3 மணி நேரங்கள் ago

முட்டை போண்டா இப்படி செஞ்சி குடுங்க நிமிசத்துல எல்லாமே காலி ஆகிவிடும்

என்னதான் வாழைக்காய் பஜ்ஜி வெங்காய பஜ்ஜி வெங்காய போண்டா உளுந்து வடை பருப்பு வடை மசால் போண்டா சாப்பிட்டாலும் முட்டை…

5 மணி நேரங்கள் ago

சுவையான வெண்ணெய் புட்டு இப்படி வீட்டிலயே செஞ்சி பாருங்கள்! மீண்டும் செய்ய சொல்லி கேட்பார்கள்!

அது என்ன வெண்ணெய் புட்டு அப்படின்னு யோசிக்கிறீங்களா இது அரிசி மாவுல பண்ணக்கூடிய ஒரு சுவையான கேக் இந்த மாதிரியான…

7 மணி நேரங்கள் ago

அக்னி நட்சத்திரம் 2024 எப்போது? தேதி, நேரம்.. முழு விவரம் இதோ!

கோடை தொடங்கியதுமே பள்ளி விடுமுறை, மாம்பழம், தர்பூசணி என நினைவுக்கு வரும். அதோடு கத்திரி வெயில் காலம் சுட்டெரிக்குமே என்பதையும்…

8 மணி நேரங்கள் ago