- Prep
- 20 min
- Cook
- 20 min
- Total
- 40 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- sweets
நமது அன்றாட வாழ்க்கையில் நாம் சாப்பிடும் உணவுகளில் கண்டிப்பாக ஒரு முறையாவது இனிப்பை சுவைத்து விடாமல் அந்த நாள் முடிவதில்லை. அந்த அளவுக்கு இனிப்பு பொருட்கள் நம் வாழ்வோடு ஒன்றிணைந்து வருகிறது. எந்தவித நல்ல காரியங்களும் மற்றும் சுப நிகழ்ச்சிகளும் நடந்தாலும் இனிப்பில்லாமல் அந்த நிகழ்ச்சி நடக்காது. ஆம் நாம் பொதுவாக இனிப்பு உதவுகளை தான் கடைகளில் சென்று வாங்கி சாப்பிடுவோம்.
இதையும் படியுங்கள் : தேவாமிர்தம் போல் லட்டு செய்வது எப்படி ?
ஆனால் இனிப்பு சாப்பிடுவதற்கு கடைகளில் தான் வாங்க வேண்டும் என்ற அவசியம் ஏதுமில்லை. நாம் நம் வீட்டிலேயே இனிப்ப உணவுகள் செய்து சாப்பிடலாமா அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருப்பது தித்திக்கும் சுவையுடன் ராகி அல்வா செய்வது எப்படி, தேவையான பொருட்கள், செய்முறை என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
அப்படியே மறக்காம எங்க YouTube சேனலையும் Subscribe பண்ணிருங்க. 
English Overview: ragi helwa is one of the most important sweet in south india. Ragi helwa recipe or Ragi helwa seivathu eppadi or ragi helwa recipe in Tamil are a few important terms to describe this recipe in the tamil.
Ingredients
Method
முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து இரண்டு டீஸ்பூன் நெய் ஊற்றிக் கொள்ளவும் நெய் உருகி நன்றாக சூடேறியதும் 10 முந்திரி பருப்பை பாதி பாதியாக உடைத்து கடாயில் போட்டு வறுக்கவும்.
அதன் பின் முந்திரி பருப்பு நன்கு சிவந்து வந்ததும் முந்திரி பருப்பை தனியாக ஒரு பவுளில் எடுத்து வைத்துக் கொள்ளவும். பின்பு ராகி மாவையும், கோதுமை மாவையும் சேர்த்து அதே கடாயில் மீதம் இருக்கும் நெய்யுடன் போட்டு நன்றாக வறுத்துக் கொள்ளவும்.
மாவு திருதிருவேன வறுத்து வந்ததும் தனியாக ஒரு பெரிய பவுளில் எடுத்து கொள்ளவும். பின்பு வேறொரு கடாயை அடுப்பில் வைத்து அதில் ஒரு கப் துருவிய வெல்லத்தை போட்டு அதனுடன் இரண்டு கப் அளவு தண்ணீர் ஊற்றி வெல்லம் கரையும் வரை கொதிக்க விடுங்கள்.
பின்பு நாம் வறுத்து வைத்துள்ள ராகி மாவுடன் இந்த வெள்ளம் சேர்த்த சூடான நீரை ஊற்றிக் கொண்டே கலக்கி கொள்ளவும். மாவில் கட்டிகள் விழாமல் கலக்கி கொள்ளவும்.
பின்பு நாம் கலக்கி வைத்துள்ள மாவை கடாயில் ஊற்றி நன்கு கிளரி விட்டுக் கொண்டு இருக்கவும். மாவு தண்ணீர் வற்றி கட்டி பதத்திற்கு வரும் வரை கிளரி கொண்டே இருக்கவும் பின் ஒரு டீஸ்பூன் அளவு நெய் ஊற்றி கிளறிக் கொண்டே இருக்கவும்.
அதன் பின்பு நெய் மாவுடன் கரைந்து சென்றதும் மறுபடியும் ஒரு டீ ஸ்பூன் அளவு நெய் ஊற்றி கிளறிக் கொண்டே இருக்கவும் இப்படியே அல்வா பதத்திற்கு சட்டியில் ஒட்டாமல் வரும்வரை கிளறி கொள்ள வேண்டும்.
அல்வா பதத்திற்கு வந்தவுடன் கடைசியாக ஒரு டீஸ்பூன் நெய் ஊற்றி நம் முதலில் வறுத்து வைத்த முந்திரி பருப்பு வையும் சேர்த்து கடைசியில் சிறிது ஏலக்காய் பொடியை சேர்த்து நன்கு கிளறி விடவும் அவ்வளவுதான் தித்திக்கும் சுவையுடன் ராகி அல்வா இனிதே தயாராகி விட்டது.





