மாலை நேர ஸ்நாக்ஸாக சாப்பிட ருசியான ராகி கார கொழுக்கட்டை இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

ராகி கொழுக்கட்டை சுவை மற்றும் ஆரோக்கியமான சிற்றுண்டி வகை. இதனை விநாயகர் சதுர்த்தி, சங்கடஹர சதுர்த்தி, போன்ற நாட்களில் இறைவனுக்கு செய்து படைக்கலாம். இது தவிர மற்ற நாட்களிலும் குழந்தைகளுக்கு மாலை நேர சிற்றுண்டியாக வழங்கலாம். மாலையில் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான ஓர் ஸ்நாக்ஸ் செய்து க

By Prem Kumar · 27/8/2024

ராகி கொழுக்கட்டை சுவை மற்றும் ஆரோக்கியமான சிற்றுண்டி வகை. இதனை விநாயகர் சதுர்த்தி, சங்கடஹர சதுர்த்தி, போன்ற நாட்களில் இறைவனுக்கு செய்து படைக்கலாம். இது தவிர மற்ற நாட்களிலும் குழந்தைகளுக்கு மாலை நேர சிற்றுண்டியாக வழங்கலாம். மாலையில் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான ஓர் ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க நினைத்தால், ராகி கொழுக்கட்டை செய்து கொடுங்கள். இது மிகவும் ஆரோக்கியமான ஓர் ஸ்நாக்ஸ். மேலும் குழந்தைகளும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். இது கேழ்வரகு கொழுக்கட்டை என்றும் கூறப்படுகிறது.

இதனை மிகச் சுலபமான முறையில் செய்யலாம் புதிதாக சமையல் கற்றுக் கொள்பவர்கள் மற்றும் கொழுக்கட்டை செய்பவர்கள் கூட மிகச் சுலபமான முறையில் இதனை செய்து முடிக்கலாம். நம் நாவிற்கு நல்ல சுவையையும் தரும் உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் இதை மிகவும் விரும்பி சாப்பிடும் வகையில் இந்த ராகி கார கொழுக்கட்டை இருக்கும். உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடுவார்கள். தொடர்ந்து இனிப்பு வகைகளை சாப்பிடும் பொழுது திகட்டும் வாய்ப்புள்ளது.

இனிப்பு கொழுக்கட்டைகளுடன் கார கொழுக்கட்டை சேர்த்து சாப்பிடும்போது சுவையாக இருக்கும். பசையம் சகிப்புத்தன்மை இல்லாதவர்களுக்கு தானிய மாவு தயாரிக்க ராகி மாவு பயன்படுத்தலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். தானிய மாவில் காணப்படும் பசையம் மற்ற தானியங்களை விட குறைவாக இருப்பதாக கருதப்படுகிறது. சர்க்கரை நோயாளிகள் ராகியை உணவில் சேர்த்து கொள்வது மிகவும் நல்லது. இன்று ராகி கார கொழுக்கட்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

Recipes AMP · Quick view
View full