Advertisement
சைவம்

ருசியான கிராமத்து கேழ்வரகு புட்டு இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி தான

Advertisement

பல ஆண்டுகளாக நமது உணவு பாரம்பரியத்தில் நம்முடன் இருந்து வரும் உணவுகளில் புட்டும் ஒன்றுதான், பொதுவாக புட்டு காலை நேரத்தில் சாப்பிடுவதற்கு ஏற்ற ஒரு உணவு அதனுடன் வாழைப்பழம் சர்க்கரை சேர்த்து சாப்பிடும் பொழுது அதன் சுவை நம்மளை அப்படியே மறக்கடிக்கும் அந்த அளவிற்கு அட்டகாசமான சுவையில் இருக்கும். இந்த புட்டுகள் பல வகையான சிறு தானியங்களை வைத்து செய்யப்படுகின்றது, அந்த வகையில் இன்று நாம் கேழ்வரகு புட்டு பற்றி தான் பார்க்க இருக்கிறோம்.

இதையும் படியுங்கள் : சுவையான கேரளா அரிசி புட்டு செய்வது எப்படி ?

Advertisement

பொதுவாக நம் உணவில் கேழ்வரகு சேர்த்து சாப்பிடுவதால் அதில் அதிக அளவு இரும்புச் சத்து இருப்பதால் நமக்கு உடல் வலிமை அதிகம் தரும். மேலும் கேழ்வரகில் உள்ள சத்துக்களால் ரத்த சோகை நீங்கி நம் உடலில் உள்ள ஹீமோகுளோபின் அளவு அதிகரித்து ரத்தத்தின் அளவை அதிகரிக்க வைக்கிறது. அதனால் இன்று இந்த கேழ்வரகு புட்டு எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்து தொகுப்பில் நாம் காணலாம் பாருங்கள்.

கேழ்வரகு புட்டு | Ragi Puttu Recipes in Tamil

Print Recipe
காலை நேரத்தில் சாப்பிடுவதற்கு ஏற்ற ஒரு உணவு அதனுடன் வாழைப்பழம் சர்க்கரை சேர்த்து சாப்பிடும் பொழுது அதன் சுவை நம்மளை அப்படியே மறக்கடிக்கும் அந்த அளவிற்கு அட்டகாசமான சுவையில் இருக்கும். இந்த புட்டுகள் பல வகையான சிறு தானியங்களை வைத்து செய்யப்படுகின்றது, அந்த வகையில் இன்று நாம் கேழ்வரகு புட்டு பற்றி தான் பார்க்க இருக்கிறோம். பொதுவாக நம் உணவில் கேழ்வரகு சேர்த்து சாப்பிடுவதால் அதில் அதிக அளவு இரும்புச் சத்து இருப்பதால் நமக்கு உடல் வலிமை அதிகம் தரும். மேலும் கேழ்வரகில் உள்ள சத்துக்களால் ரத்த சோகை நீங்கி நம் உடலில் உள்ள ஹீமோகுளோபின் அளவு அதிகரித்து ரத்தத்தின் அளவை அதிகரிக்க வைக்கிறது.
Course Breakfast
Cuisine Indian, TAMIL
Keyword Ragi, கேழ்வரகு
Prep Time 10 minutes
Cook Time 20 minutes
Total Time 30 minutes
Servings 3 People
Calories 79

Equipment

  • 1 பெரிய பவுள்
  • 1 இட்லி பாத்திரம்

Ingredients

  • 3 கப் கேழ்வரகு
  • 1 கப் சர்க்கரை
  • ½ tbsp உப்பு
  • ½ மூடி தேங்காய்
  • நெய் தேவையான அளவு

Instructions

  • முதலில் ஒரு பெரிய பவுளில் நாம் வைத்திருக்கும் கேழ்வரகு மாவை நன்றாக சலித்து சேர்த்துக் கொள்ளுங்கள். பின் இதனுடன் ஒரு அரை டீஸ்பூன் அளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ளுங்கள்
  • பின்பு இந்த மாவுடன் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளுங்கள். மாவை கெட்டியாகவும் தண்ணியாகவும் பிசைந்து விடாமல் சிறிதளவிலேயே தண்ணீர் சேர்த்து புட்டு மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளுங்கள்.
  • ஒரு இட்லி பாத்தித்தை அடுப்பில்
    Advertisement
    வைத்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றிக் கொள்ளுங்கள், தண்ணீர் நன்கு கொதித்து வந்தவுடன் இட்லி தட்டை போட்டு இட்லி துணியை தண்ணீரில் நனைத்து அதன்பின் தண்ணீரில் இல்லாமல் நன்கு பிழிந்து கொள்ளுங்கள்.
  • பின் இட்லி தட்டின் மேல் துணியை விரித்து நாம் தயார் செய்து உள்ள வைத்துள்ள கேழ்வரகு மாவை துணியின் மேல் பரப்பி விட்டுக் கொள்ளுங்கள். பிறகு இட்லி பாத்திரத்தை மூடிவிட்டு. பின் இந்த நேரத்தில் நீங்கள் வைத்திருக்கும் தேங்காயை பூ போல துருவி வைத்துக் கொள்ளுங்கள்.
  • பின் புட்டு நன்றாக வெந்து ஆவி வரும் வரை காத்திருந்து ஆவி வந்த பின் புட்டுவை வெளிய எடுத்துக் கொள்ளுங்கள். பின் புட்டு சூடாக இருக்கும் பொழுது இதனுடைய நாம் வைத்திருக்கும் ஒரு கப் சர்க்கரை, தேவையான அளவு நெய் மற்றும் தேங்காயை துருவலை சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.
  • அவ்வளவுதான் சுவையான கேழ்வரகு புட்டு தயாராகிவிட்டது. இந்த கேழ்வரகு புட்டுடன் நீங்கள் வாழைப்பழத்தையும் சேர்ந்து சாப்பிட்டால் இதன் சுவை தாறுமாறாக இருக்கும்.

Nutrition

Serving: 400கிராம் | Calories: 79kcal | Carbohydrates: 56g | Protein: 31g | Fat: 12g | Saturated Fat: 3.1g | Cholesterol: 4.7mg | Sodium: 17mg | Potassium: 387mg | Fiber: 0.7g | Sugar: 8.9g | Vitamin A: 1.9IU | Vitamin C: 2.3mg | Iron: 98mg

English Overview: ragi puttu is one of the most important dishes in india. ragi puttu recipe or ragi puttu seivathu eppadi or ragi puttu in Tamil are a few important terms to describe this recipe in the tamil language

Advertisement
Prem Kumar

Recent Posts

காலை உணவுக்கு ருசியான ஓட்ஸ் பச்சைப்பட்டாணி அடை இப்படி செய்து பாருங்க!

காலை வேளையில் என்ன சமைப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் தோசை மாவு இல்லையா? கவலை வேண்டாம் ஈஸியாக…

3 மணி நேரங்கள் ago

செவ்வாய் கிழமையில் மறந்தும் கூட இந்த விஷயங்களை செய்து விடாதீர்கள்

வாழ்க்கையில் நாம் செய்யும் ஒவ்வொரு சின்ன சின்ன விஷயங்களும் கூட நம்முடைய வாழ்க்கையில் சுப மற்றும் அசுப பலன்களை ஏற்படுத்தும்…

3 மணி நேரங்கள் ago

முட்டை இருந்தால் மட்டும் போதும் ருசியான முட்டை பணியாரம் செய்து விடலாம்! மாலை நேரத்திற்கு ஏற்ற பக்காவான ஸ்நாக்ஸ்!

அனைவரும் தினமும் ஒரு முட்டை சாப்பிட்டால் உடலுக்கு மிகவும் நல்லது. பெரியவர்கள் தினமும் இரண்டு முட்டை கூட அசால்டாக சாப்பிடுவார்கள்…

4 மணி நேரங்கள் ago

சுவையான கேக் வீட்டிலயே சாப்பிட நினைத்தால் ஒரு முறை வாழைப்பழ கப் கேக் செஞ்சு பாருங்க, வாயில் வைத்தவுடன் கரையும்!

சுவையான உணவுகளைச் சமைத்துச் சாப்பிடுவது என்பது ஒரு வகை அலாதியான இன்பம் தான். அதிலும் நமக்குப் பிடித்த உணவுகளைச் சமைப்பது…

7 மணி நேரங்கள் ago

சிம்பிளான அவரைக்காய் பொரியல் எப்படி ஒரு தடவை செஞ்சு சாப்பிடுங்க!

டெய்லி ஏதாவது ஒரு காய்கறி சாப்பிடுவது ரொம்ப நல்லது. அந்த வகையில பச்சை காய்கறிகளான அவரைக்காய் பீன்ஸ் பட்டாணி வெண்டைக்காய்…

7 மணி நேரங்கள் ago

2024 சித்திரை அமாவாசை வழிபாடு இரண்டு மடங்கு பலன்களை நமக்கு கொடுக்கும்!

தமிழ் மாதத்தில் முதல் மாதமாக வரக்கூடிய சித்திரை மாதம் தெய்வ வழிபாட்டிற்கு மிகவும் முக்கியமான மாதமாக கருதப்படுகிறது. சூரிய பகவான்…

9 மணி நேரங்கள் ago