ஒரே மாதிரி தோசை சாப்பிட்டு சலித்து விட்டதா ? கேழ்வரகு வெல்ல தோசை இப்படி ட்ரை பன்னி பாருங்க!
நம் உடலுக்கு தேவையான அனைத்து சத்துகளும் சிறுதானியங்களில் உள்ளன. சத்து குறைபாடு நீங்க மருந்து, மாத்திரைகளை உண்பதற்கு பதிலாக சிறு தானிய வகைகளை தேர்ந்தெடுத்து உண்பதால், நமக்கு எந்தவித பக்க விளைவுகளும் ஏற்படாமல் அனைத்து சத்துகளும் கிடைக்கும். அந்த வகையில் இன்று நாம் பார்க்கப் போவது ச
நம் உடலுக்கு தேவையான அனைத்து சத்துகளும் சிறுதானியங்களில் உள்ளன. சத்து குறைபாடு நீங்க மருந்து, மாத்திரைகளை உண்பதற்கு பதிலாக சிறு தானிய வகைகளை தேர்ந்தெடுத்து உண்பதால், நமக்கு எந்தவித பக்க விளைவுகளும் ஏற்படாமல் அனைத்து சத்துகளும் கிடைக்கும். அந்த வகையில் இன்று நாம் பார்க்கப் போவது சுண்ணாம்பு சத்து நிறைந்த கேழ்வரகு வெல்ல தோசை.
சிறுதானியங்களில் ஒன்றாக இருக்கக்கூடிய இந்த கேழ்வரகு ரொம்பவே ஆரோக்கியம் நிறைந்ததாக இருக்கிறது. அடிக்கடி சிறுதானியங்களை கொண்டு செய்யப்படும் உணவுகளை சாப்பிட்டு வந்தால் உடல் நன்கு வலுபெறும்.கேழ்வரகு தோசை என்றாலே பலருக்கும் பிடிக்காமல் போகலாம் ஆனால் அந்த காலங்களில் கேழ்வரகுக்கு தான் முக்கியத்துவம் கொடுத்து வந்தனர்.
முன்பு கேழ்வரகு இல்லாத வீடுகளே இருக்காது ஆனால் இன்று பெரும்பாலானோர் வீடுகளில் கேழ்வரகு அதிசயமாகத்தான் பார்க்க முடிகிறது. இந்த கேழ்வரகு வைத்து சுவையான சூப்பரான டேஸ்ட்டில் கேழ்வரகு வெல்ல தோசை இப்படி மட்டும் செஞ்சு பாருங்க, இந்த காலத்து குழந்தைகளுக்கும் ரொம்பவே பிடிக்கும். அடிக்கடி கேட்டு அடம் பிடிப்பாங்க.
எப்போதும் இட்லி, தோசை மாவு என்று செய்து அலுத்து போனவர்களுக்கு இது போல புதிதாக மற்றும் ஆரோக்கியமுள்ள கேழ்வரகு வெல்ல தோசை செய்து கொடுத்தால் ரொம்பவே விரும்பி சாப்பிட்டு விடுவார்கள். அரிசி உணவை விட மற்ற தானியங்களால் செய்யப்படும் உணவுகள் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் ஆரோக்கியம் பலப்படும். அந்த வகையில் கேழ்வரகு வெல்ல தோசை ஐந்து நிமிடத்தில் எளிதாக, சுவையாக எப்படி செய்வது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் அறிந்து கொள்ள இருக்கிறோம்.