ஒரே மாதிரி தோசை சாப்பிட்டு சலித்து விட்டதா ? கேழ்வரகு வெல்ல தோசை இப்படி ட்ரை பன்னி பாருங்க!

- Advertisement -

நம் உடலுக்கு தேவையான அனைத்து சத்துகளும் சிறுதானியங்களில் உள்ளன. சத்து குறைபாடு நீங்க மருந்து, மாத்திரைகளை உண்பதற்கு பதிலாக சிறு தானிய வகைகளை தேர்ந்தெடுத்து உண்பதால், நமக்கு எந்தவித பக்க விளைவுகளும் ஏற்படாமல் அனைத்து சத்துகளும் கிடைக்கும். அந்த வகையில் இன்று நாம் பார்க்கப் போவது சுண்ணாம்பு சத்து நிறைந்த கேழ்வரகு வெல்ல தோசை.

-விளம்பரம்-

சிறுதானியங்களில் ஒன்றாக இருக்கக்கூடிய இந்த கேழ்வரகு ரொம்பவே ஆரோக்கியம் நிறைந்ததாக இருக்கிறது. அடிக்கடி சிறுதானியங்களை கொண்டு செய்யப்படும் உணவுகளை சாப்பிட்டு வந்தால் உடல் நன்கு வலுபெறும்.கேழ்வரகு தோசை என்றாலே பலருக்கும் பிடிக்காமல் போகலாம் ஆனால் அந்த காலங்களில் கேழ்வரகுக்கு தான் முக்கியத்துவம் கொடுத்து வந்தனர்.

- Advertisement -

முன்பு கேழ்வரகு இல்லாத வீடுகளே இருக்காது ஆனால் இன்று பெரும்பாலானோர் வீடுகளில் கேழ்வரகு அதிசயமாகத்தான் பார்க்க முடிகிறது. இந்த கேழ்வரகு வைத்து சுவையான சூப்பரான டேஸ்ட்டில் கேழ்வரகு வெல்ல தோசை இப்படி மட்டும் செஞ்சு பாருங்க, இந்த காலத்து குழந்தைகளுக்கும் ரொம்பவே பிடிக்கும். அடிக்கடி கேட்டு அடம் பிடிப்பாங்க.

எப்போதும் இட்லி, தோசை மாவு என்று செய்து அலுத்து போனவர்களுக்கு இது போல புதிதாக மற்றும் ஆரோக்கியமுள்ள கேழ்வரகு வெல்ல தோசை செய்து கொடுத்தால் ரொம்பவே விரும்பி சாப்பிட்டு விடுவார்கள். அரிசி உணவை விட மற்ற தானியங்களால் செய்யப்படும் உணவுகள் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் ஆரோக்கியம் பலப்படும். அந்த வகையில் கேழ்வரகு வெல்ல தோசை ஐந்து நிமிடத்தில் எளிதாக, சுவையாக எப்படி செய்வது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் அறிந்து கொள்ள இருக்கிறோம்.

Print
1 from 1 vote

கேழ்வரகு வெல்ல தோசை | Ragi Sweet Dosa Recipe In Tamil

கேழ்வரகு தோசை என்றாலே பலருக்கும் பிடிக்காமல் போகலாம் ஆனால் அந்த காலங்களில் கேழ்வரகுக்கு தான் முக்கியத்துவம் கொடுத்து வந்தனர். கேழ்வரகு இல்லாத வீடுகளே இருக்காது ஆனால் இன்று பெரும்பாலானோர் வீடுகளில் கேழ்வரகு அதிசயமாகத்தான் பார்க்க முடிகிறது. இந்த கேழ்வரகு வைத்து சுவையான சூப்பரான டேஸ்ட்டில் கேழ்வரகு வெல்ல தோசை இப்படி மட்டும் செஞ்சு பாருங்க, இந்த காலத்து குழந்தைகளுக்கும் ரொம்பவே பிடிக்கும். அடிக்கடி கேட்டு அடம் பிடிப்பாங்க.எப்போதும் இட்லி, தோசை மாவு என்று செய்து அலுத்து போனவர்களுக்கு இது போல புதிதாக மற்றும் ஆரோக்கியமுள்ள கேழ்வரகு வெல்ல தோசை செய்து கொடுத்தால் ரொம்பவே விரும்பி சாப்பிட்டு விடுவார்கள். அரிசி உணவை விட மற்ற தானியங்களால் செய்யப்படும் உணவுகள் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் ஆரோக்கியம் பலப்படும்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: Breakfast, dinner
Cuisine: tamilnadu
Keyword: Ragi Sweet Dosa
Yield: 3
Calories: 160kcal

Equipment

 • 1 கடாய்

தேவையான பொருட்கள்

 • 1 கப் கேழ்வரகு மாவு
 • 1 ஸ்பூன் அரிசி மாவு
 • 1 ஸ்பூன் தேங்காய் துருவல்
 • 1/4 ஸ்பூன் வெல்லம்
 • 1/4 ஸ்பூன் ஏலக்காய்
 • முந்திரி தேவையான அளவு
 • நெய் தேவையான அளவு

செய்முறை

 • வெல்லத்தில் 2 கப் தண்ணீர் விட்டு லேசாகக் கொதிக்க வைத்து வடிகட்டி வைத்துக்கொள்ளுங்கள்.
 • பாகு ஆறியதும் அதில் கேழ்வரகு மாவு, அரிசிமாவு, தேங்காய் துருவல், ஏலக்காய்தாள், முந்திரி துருவல் எல்லாவற்றையும் சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைத்துக்கொள்ளவும்.
 • தண்ணீரை விருப்பம் போல சிறிது கூட்டியோ குறைத்தோ சேர்க்கலாம்
 • பிறகு, வெல்ல தோசைகளை நெய் ஊற்றிச் சுட்டெடுக்கவும்.

Nutrition

Serving: 300g | Calories: 160kcal | Carbohydrates: 56g | Protein: 13g | Sodium: 3.1mg | Potassium: 381mg | Fiber: 1.5g