ஹெல்தியான ராகி உப்புமா காலை உணவிற்கு இப்படி செய்து பாருங்கள்!!
தினமும் காலை உணவாக இட்லி, தோசை, பொங்கல், பூரி என்று செய்து சாப்பிட்டு அலுத்து விட்டதா? கொஞ்சம் வித்தியாசமாக வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து சுவையான அதே நேரத்தில் மிக எளிமையான ரெசிபியை செய்யலாமா! காலை உணவினை சத்தான ஆகாரமாக எடுத்துக் கொண்டால் தான் அன்றைய தினம் முழுவதும் நாம் மி
தினமும் காலை உணவாக இட்லி, தோசை, பொங்கல், பூரி என்று செய்து சாப்பிட்டு அலுத்து விட்டதா? கொஞ்சம் வித்தியாசமாக வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து சுவையான அதே நேரத்தில் மிக எளிமையான ரெசிபியை செய்யலாமா! காலை உணவினை சத்தான ஆகாரமாக எடுத்துக் கொண்டால் தான் அன்றைய தினம் முழுவதும் நாம் மிகவும் சுறுசுறுப்பாக இயங்க முடியும். அப்படிப்பட்ட சத்தான காலை உணவினை தான் இன்று நாம் காண உள்ளோம். வயதானவர்கள், சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் உகந்தது ராகி. சிறு தானியங்களில் ராகி முக்கியமானது. ஆனால் எப்பொழுது வெள்ளை அரிசியின் பயன்பாடு அதிகரித்ததோ அன்றிலிருந்து தினை, ராகி உள்ளிட்ட சிறுதானியங்களின் நுகர்வு வெகுவாகக் குறைந்துள்ளது.
ராகியில் அதிகப்படியான கால்சியம் உள்ளது. ராகியில் மற்ற சிறு தானியங்களைக் காட்டிலும் இரும்புச்சத்து அதிகம். அரிசியை காட்டிலும் ஏழு மடங்கு அதிக நார்சத்து கொண்ட தானியம் இது. சொல்லப்போனால் ராகியை வைத்து பல வகையான உணவுகள் செய்யலாம். தோசை, ஊத்தப்பம், புலாவ், உப்புமா என எது வேண்டுமானாலும் செய்யலாம். இருப்பினும் பலர் அவற்றை சாப்பிட விரும்புவதில்லை. இப்போது ராகி உப்புமா செய்வது எப்படி என பார்க்கலாம். காலை வேளையில் குழந்தைகளுக்கு பிடித்தவாறு மிகவும் எளிமையான காலை உணவு செய்ய வேண்டுமானால் இந்த ராகி உப்புமா செய்து கொடுங்கள். இது மிகவும் ஈஸியான காலை உணவாகும். மேலும் இது ஆரோக்கியமானதும் கூட.
இதனையும் படியுங்கள் : ஆரோக்கியமான சுவை மிகுந்த ராகி வெஜ் நூடுல்ஸ்! இப்படி செஞ்சி பாருங்க!!!