தினமும் காலை உணவாக இட்லி, தோசை, பொங்கல், பூரி என்று செய்து சாப்பிட்டு அலுத்து விட்டதா? கொஞ்சம் வித்தியாசமாக வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து சுவையான அதே நேரத்தில் மிக எளிமையான ரெசிபியை செய்யலாமா! காலை உணவினை சத்தான ஆகாரமாக எடுத்துக் கொண்டால் தான் அன்றைய தினம் முழுவதும் நாம் மிகவும் சுறுசுறுப்பாக இயங்க முடியும். அப்படிப்பட்ட சத்தான காலை உணவினை தான் இன்று நாம் காண உள்ளோம். வயதானவர்கள், சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் உகந்தது ராகி. சிறு தானியங்களில் ராகி முக்கியமானது. ஆனால் எப்பொழுது வெள்ளை அரிசியின் பயன்பாடு அதிகரித்ததோ அன்றிலிருந்து தினை, ராகி உள்ளிட்ட சிறுதானியங்களின் நுகர்வு வெகுவாகக் குறைந்துள்ளது.
ராகியில் அதிகப்படியான கால்சியம் உள்ளது. ராகியில் மற்ற சிறு தானியங்களைக் காட்டிலும் இரும்புச்சத்து அதிகம். அரிசியை காட்டிலும் ஏழு மடங்கு அதிக நார்சத்து கொண்ட தானியம் இது. சொல்லப்போனால் ராகியை வைத்து பல வகையான உணவுகள் செய்யலாம். தோசை, ஊத்தப்பம், புலாவ், உப்புமா என எது வேண்டுமானாலும் செய்யலாம். இருப்பினும் பலர் அவற்றை சாப்பிட விரும்புவதில்லை. இப்போது ராகி உப்புமா செய்வது எப்படி என பார்க்கலாம். காலை வேளையில் குழந்தைகளுக்கு பிடித்தவாறு மிகவும் எளிமையான காலை உணவு செய்ய வேண்டுமானால் இந்த ராகி உப்புமா செய்து கொடுங்கள். இது மிகவும் ஈஸியான காலை உணவாகும். மேலும் இது ஆரோக்கியமானதும் கூட.
ராகி உப்புமா | Ragi Upma Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
- 1 மிக்ஸி
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 1 கப் ராகி
- 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல்
- 4 பச்சை மிளகாய்
- 1 துண்டு இஞ்சி
- 1/2 டீஸ்பூன் கடுகு
- 1/2 டீஸ்பூன் உளுந்தும் பருப்பு
- 1/2 டீஸ்பூன் கடலை பருப்பு
- 1 டேபிள் ஸ்பூன் நெய்
- 1/2 டீஸ்பூன் பெருங்காயத்தூள்
- 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
- உப்பு தேவையான அளவு
- 1/4 கப் பச்சை பட்டாணி
- 2 கேரட்
செய்முறை
- முதலில் ராகியை நன்கு கழுவி ஒரு மணி நேரம் வரை ஊற வைத்துக் கொள்ளவும். பின் இதனை வெயிலில் காய வைத்து, மிக்ஸியில் சேர்த்து ரவை பதத்திற்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
- அடுப்பில் ஒரு வாணலியை வைத்து நெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலை பருப்பு சேர்த்து வறுக்கவும்.
- பின் பச்சை மிளகாய், இஞ்சி, கருவேப்பிலை சேர்த்து வதக்கவும். பின் பச்சை பட்டாணி, கேரட் சேர்த்து நன்கு வதக்கவும்.
- பின் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதனுடன் உப்பு சேர்த்து கொதிக்க விடவும். இத்துடன் தேங்காய் துருவல், பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.
- பின் தண்ணீர் நன்கு கொதித்ததும் அரைத்து வைத்துள்ள ராகியை சேர்த்து நன்கு கலந்து 15 நிமிடங்கள் மூடி வைத்து வேக விடவும். அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான ராகி உப்புமா தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : ஆரோக்கியமான சுவை மிகுந்த ராகி வெஜ் நூடுல்ஸ்! இப்படி செஞ்சி பாருங்க!!!