Advertisement
சைவம்

ஆரோக்கியமான சுவை மிகுந்த ராகி வெஜ் நூடுல்ஸ்! இப்படி செஞ்சி பாருங்க!!!

Advertisement

குழந்தைகளுக்கு நூடுல்ஸ் என்றால் மிகவும் பிடிக்கும். நாகரிகம் என்ற பெயரில் தற்போது பீட்சா, பர்கர், நூடுல்ஸ், பாஸ்தா உள்ளிட்ட உணவுகளை நாம் சாப்பிட்டு வருகிறோம். தற்போது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த உணவுகளை விரும்பி சாப்பிடுகின்றனர். சத்தான எடுத்துக்கொள்ள வேண்டிய சூழ்நிலையில் இருக்கும் நான் இது போன்ற சாட் உணவுகளோடு சத்து நிறைந்த பாரம்பரிய உணவுகளை இணைத்துச் சாப்பிடுவது சிறந்த வழியாகும். இன்று ராகி வெஜிடபிள் நூடுல்ஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தானிய வகைகளில் அதிக ஊட்டச்சத்து தரக்கூடியது என்றால் அது சிறுதானியன்களே. இன்றைய நவீன உலகத்தில் நூடுல்ஸ் வடிவிலும் சிறுதானியங்கள் நமக்கு சந்தைகளில் கிடைக்கின்றன. அந்த வகையில் இன்று நாம் சிறுதானியத்தில் ஒன்றான ராகி வைத்து ராகி நூடுல்ஸ் செய்வதை காண உள்ளோம். வாழ்க்கை முறையில் மாற்றங்கள் ஏற்பட்ட காரணத்தினால் உடலில் பல்வேறு விதமான நோய்கள் அதிகரித்து விட்டன. அதிலிருந்து மீண்டு வர வேண்டும் என்றால் பாரம்பரிய உணவு முறைக்குத் திரும்பி வரவேண்டும்.

Advertisement

துரித உணவுகளில் ஒன்றான நூடுல்ஸை குழந்தைகள் மட்டுமல்லாது இளைஞர்கள் கூட விரும்பி சாப்பிடுவார்கள். நூடுல்ஸ் உடலுக்கு கெடுதி எனினும் ஊட்டசத்து மிக்க ராகி கொண்டு செய்யப்படும் நூடுல்ஸ் சாப்பிடுவதால் உடலுக்கு தீங்கு ஏதும் இல்லை. கால்சியம் சத்து அதிகம் நிறைந்த இந்த ராசி, உடல் உஷ்ணத்தை நீக்கும், உடல் வலிமையை அதிகப்படுத்தும், எலும்பு வலிமை, ரத்த சோகை போக்குதல், மலச்சிக்கல் சிக்கலை நீக்குதல், தைராய்டு கட்டுப்பாடு, பால் சுரப்பு என பல்வேறு விதமான நன்மைகளைக் கொடுக்கும்.மேலும் இந்த ராகி நூடுல்ஸ் ரெசிபியில் பல்வேறு காய்கறிகளும் சேர்த்து சமைக்க படுவதால் வயதானவர்களுக்கும் இது ஏற்ற ஒரு சிற்றுண்டி எனலாம்.

ராகி வெஜ் நூடுல்ஸ் | Ragi Veg Noodles Recipe In Tamil

Print Recipe
குழந்தைகளுக்கு நூடுல்ஸ் என்றால் மிகவும் பிடிக்கும். நாகரிகம் என்ற பெயரில் தற்போது பீட்சா, பர்கர், நூடுல்ஸ், பாஸ்தா உள்ளிட்ட உணவுகளை நாம் சாப்பிட்டு வருகிறோம். தற்போது குழந்தைகள் முதல் பெரியவர்கள்
Advertisement
வரை அனைவரும் இந்த உணவுகளை விரும்பி சாப்பிடுகின்றனர். சத்தான எடுத்துக்கொள்ள வேண்டிய சூழ்நிலையில் இருக்கும் நான் இது போன்ற சாட் உணவுகளோடு சத்து நிறைந்த பாரம்பரிய உணவுகளை இணைத்துச் சாப்பிடுவது சிறந்த வழியாகும். இன்று ராகி வெஜிடபிள் நூடுல்ஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தானிய வகைகளில் அதிக ஊட்டச்சத்து தரக்கூடியது என்றால் அது சிறுதானியன்களே. இன்றைய நவீன உலகத்தில் நூடுல்ஸ் வடிவிலும் சிறுதானியங்கள் நமக்கு சந்தைகளில் கிடைக்கின்றன. அந்த வகையில் இன்று நாம் சிறுதானியத்தில் ஒன்றான ராகி வைத்து ராகி நூடுல்ஸ் செய்வதை காண உள்ளோம்.
Advertisement
Course Breakfast
Cuisine Indian
Keyword Ragi Veg Noodles
Prep Time 15 minutes
Cook Time 10 minutes
Total Time 25 minutes
Servings 3 People

Equipment

  • 1 கடாய்
  • 1 பவுள்
  • 1 கரண்டி

Ingredients

  • 1 பாக்கெட் ராகி நூடுல்ஸ்
  • 2 பெரிய வெங்காயம்
  • 1 கேரட்
  • 1 குடைமிளகாய்
  • 10 பீன்ஸ்
  • முட்டைக்கோஸ் சிறிதளவு
  • 2 டீஸ்பூன் மிளகு தூள்
  • 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1 டீஸ்பூன் தக்காளி சாஸ்
  • 1/2 டீஸ்பூன் சில்லி சாஸ்
  • 1 டீஸ்பூன் வினிகர்
  • 1 டீஸ்பூன் சோயா சாஸ்
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

Instructions

  • முதலில் ராகி நூடுல்சை ஒரு பாத்திரத்தில் போட்டு சிறிதளவு தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • நூடுல்ஸ் வெந்ததும் தண்ணீரை வடிகட்டி சிறிதளவு எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெங்காயம், கேரட், பீன்ஸ், குடைமிளகாய், முட்டைக்கோஸ் சேர்த்து சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
  • காய்கறிகள் பாதி வெந்ததும் நூடுல்ஸை சேர்த்து அதனுடன் மிளகாய்த்தூள், மிளகு‌ தூள், வினிகர், சோயா சாஸ், தக்காளி சாஸ், சில்லி சாஸ் சேர்த்து உடையாமல் கலந்து விடவும்.
  • மிதமான தீயிலேயே மூன்று முதல் ஐந்து நிமிடங்கள் வைத்து நன்கு கலந்து விட்டு அடுப்பை அணைத்து விடவும். அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான ராகி வெஜ் நூடுல்ஸ் தயார்.

Nutrition

Serving: 350g | Carbohydrates: 7.6g | Protein: 7.7g | Fat: 1.3g | Sodium: 10mg | Potassium: 587mg | Fiber: 16.5g | Vitamin A: 2.84IU | Calcium: 350mg | Iron: 3.9mg

இதனையும் படியுங்கள் : தித்திக்கும் சுவையில் ராகி அன்னாசிபழ பூரணம் கொழுக்கட்டை இப்படி ஒரு தரம் ட்ரை பண்ணி பாருங்க!

Advertisement
Prem Kumar

Recent Posts

அட்சய திருதியை 2024 என்ன பொருள் வாங்கி வைத்து, எந்த முறையில் பூஜை செய்தால் மகாலட்சுமியின் அருள் கிடைக்கும் ?

இந்தியாவில் இந்துக்கள், ஜயினர்கள் ஆகிய மதத்தினரால் மிகவும் புனிதமான நாளாக கருதப்படுகிறது அட்சய திருதியை திருநாள். ஒவ்வொரு ஆண்டும் சித்திரை…

16 நிமிடங்கள் ago

ரொம்பவே சிம்பிளான ஒரு வர மிளகாய் துவையல் எப்படி செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

வீட்டில் வேலை பார்த்து பார்த்து ரொம்ப சலிச்சு போனவங்க இட்லி தோசைக்கு பேச எந்த சட்னியும் அரைக்காமல் இந்த மாதிரி…

32 நிமிடங்கள் ago

ரோட்டுக்கடை ஸ்டைலில் சுவையான மற்றும் மொறு மொறுவென்ற இந்த நெத்திலி மீன் ஃப்ரை செய்து பாருங்கள் இனி இப்படித்தான் மீன் வறுவல் செய்வீர்கள்!!

ரோட்டு கடைக்கு சென்றால் அங்கு விற்கும் உணவு பொருட்களை பார்த்து பசித்து எடுத்து சாப்பிடுவது ஒரு வழக்கமாக வைத்திருப்போம்..! ரோட்டுக்கடை…

2 மணி நேரங்கள் ago

கருங்காலி மாலை அணிய வேண்டிய ராசிக்காரர்கள்

பொதுவாக ஆன்மீகத்தில் பலரால் நம்பப்பட்ட ஒரு சில விஷயங்கள் ஒரு சில காலகட்டத்தில் மிகவும் சுவாரசியமாக பேசப்படும். அதேபோல் ஆன்மிகத்தை…

2 மணி நேரங்கள் ago

முலாம்பழ சர்பத் இந்த வெயிலுக்கு இப்படி ஒரு தடவை செஞ்சு குடிச்சு பாருங்க!

முலாம்பழம் வச்சு சர்பத்தா அப்படின்னு யோசிக்கிறீங்களா! ஆமாங்க முலாம் பழம் வச்சு சூப்பரான இதுவரைக்கும் நீங்க சாப்பிடாத ஒரு சுவைல…

4 மணி நேரங்கள் ago

காரசாரமான ருசியில் காளான் கொத்துக்கறி இப்படி செய்து கொடுத்து பாருங்க கொஞ்சம் கூட மிச்சம் வைக்காம சாப்பிடுவாங்க!

வீட்ல விரதம் இருந்தாலோ புரட்டாசி மாதத்தில் அசைவம் சாப்பிடல அப்படின்னாலும் அந்த நேரங்கள்ல நம்ம காளான் சோயா காலிஃப்ளவர் இத…

5 மணி நேரங்கள் ago