தித்திக்கும் சுவையில் ராகி அன்னாசிபழ பூரணம் கொழுக்கட்டை இப்படி ஒரு தரம் ட்ரை பண்ணி பாருங்க!

- Advertisement -

எல்லாருக்கும் கொழுக்கட்டை அப்படின்னா ரொம்பவே பிடிக்கும். அதுல இப்ப நம்ம பண்ண போற கொழுக்கட்டை ரொம்பவே வித்தியாசமா இருக்கும். ஆனால் எப்பவும் யூஸ் பண்ற அதே பச்சரிசி மாவு இல்லாம இப்ப நம்ம ராகி மாவுல கொழுக்கட்டை செய்ய போறோம். இத நீங்க இலை அடைனு கூட சொல்லிக்கலாம். இந்த கொழுக்கட்டையில நம்ம வைக்கப் போற பூரணம் என்ன அப்படின்னு பாத்தீங்கன்னா அன்னாசிப்பழத்தை வைத்து ஒரு பூரணம் ரெடி பண்ணி வைக்க போறோம்.

-விளம்பரம்-

இந்த சுவையான ராகி இலை கொழுக்கட்டை செய்து சாப்பிடும்போது அப்படி ஒரு சுவையாக இருக்கும். இத நீங்க மாலை நேர சிற்றுண்டிங்காக மழை டைம்ல கொடுக்கும்போது சுட சுட அந்த கொழுக்கட்டையை வாயில எடுத்து வச்சா இந்த மழை டைமுக்கு அப்படியே சூடாக கொழுக்கட்டை உள்ள இறங்கும் போது மனசுக்கு அவ்வளவு சந்தோஷமா இருக்கும். நாக்குக்கு அவ்வளவு ருசியா இருக்கும். செய்ய செய்ய கொழுக்கட்டை எல்லாம் காலி ஆயிட்டு இருக்கும். அந்த அளவுக்கு ருசியாவும் இருக்கும் ஆரோக்கியமாகவும் இருக்கு இந்த ராகி அண்ணாசி பழ இலை கொழுக்கட்டை.

- Advertisement -

இந்த சுவையான ராகி அண்ணாசி பழு இலை கொழுக்கட்டையை சும்மா சுட சுட ஈவினிங் ஸ்நாக்ஸ்க்கு வச்சு சாப்பிடும்போது அவ்வளவு நல்லா இருக்கும். இதுல ருசி மட்டும் கிடையாது ஆரோக்கியம் அதிகமாகவே இருக்கும். இந்த சுவையான ராகி இலை கொழுக்கட்டையை எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க. அப்படி சுவையான ராகி அன்னாசி பழு இலை கொழுக்கட்டையை எப்படி செய்யலாம் அப்படின்னு தெரிஞ்சுக்கலாம் வாங்க.

Print
1 from 1 vote

ராகி அன்னாசிபழ இலை கொழுக்கட்டை | Ragi Pinapple Leaf Kolukattai in Tamil

எல்லாருக்கும் கொழுக்கட்டை அப்படின்னா ரொம்பவே பிடிக்கும். அதுல இப்ப நம்ம பண்ண போற கொழுக்கட்டை ரொம்பவே வித்தியாசமா இருக்கும். ஆனால் எப்பவும் யூஸ் பண்ற அதே பச்சரிசி மாவு இல்லாம இப்ப நம்ம ராகி மாவுல கொழுக்கட்டை செய்ய போறோம். இத நீங்க இலை அடைனு கூட சொல்லிக்கலாம். இந்த கொழுக்கட்டையில நம்ம வைக்கப் போற பூரணம் என்ன அப்படின்னு பாத்தீங்கன்னா அன்னாசிப்பழத்தை வைத்து ஒரு பூரணம் ரெடி பண்ணி வைக்க போறோம்.
Prep Time20 minutes
Active Time15 minutes
Total Time35 minutes
Course: Dessert, steam, sweets
Cuisine: tamilnadu
Keyword: Adai, kollukattai
Yield: 6 people
Calories: 150kcal
Cost: 150

Equipment

 • 2 பெரிய பவுள்
 • 2 கரண்டி
 • 1 இட்லி பாத்திரம்
 • 5 சதுரமாக நறுக்கிய வாழை இலைகள்

தேவையான பொருட்கள்

 • 2 கப் ராகிமாவு
 • 1 கப் அன்னாசி பழ துண்டுகள்
 • 1 கப் நாட்டு சர்க்கரை
 • 1 கப் தேங்காய் துருவல்
 • 2 ஸ்பூன் நெய்

செய்முறை

 • முதலில் ராகி மாவை லேசாக வறுத்து எடுத்து ஆற வைத்து கொள்ளவும். சூடு வந்தால் மட்டும் போதுமானது.
 • பிறகு அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து தண்ணீரை கொதிக்க வைக்க வேண்டும்.
 • பிறகு வறுத்து எடுத்து வைத்துள்ள ராகி மாவில் வெந்நீரை சேர்த்து கலந்து விட வேண்டும். சூடாக இருக்கும் பொழுது கரண்டியால் கலந்து விட்டு பிறகு கை பொறுக்கும் அளவு சூடு வந்த பிறகு கையால் நன்றாக கொழுக்கட்டை மாவு பதத்திற்கு பிசைந்து எடுத்து வைத்து விட வேண்டும்.
 • பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து நெய் சேர்த்து பொடியாக நறுக்கிய அன்னாசிப்பழ துண்டுகளை சேர்த்து லேசாக வதக்கி விட்டு அதில் நாட்டுச் சர்க்கரையை சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும் .
 • கடாயில் உள்ள சூட்டிற்கு நாட்டுச்சர்க்கரை நன்றாக கரைந்து வரும். சுத்தமாக கரைந்து வந்த பிறகு கலந்து விட்டு அதில் ஒரு ஸ்பூன் நெய் துருவிய தேங்காய் சேர்த்து நன்றாக கலந்து எடுத்தால் கட்டியாகி சுருண்டு வரும் பொழுது அடுப்பை அணைத்து விட வேண்டும்.
 • பிறகு வாழை இலையை எடுத்து அதில் ராகி மாவை உருண்டைகளாக எடுத்து அழகாக வட்ட வடிவமாக கொழுக்கட்டைக்கு தட்ட வேண்டும்
 • பிறகு அன்னாசிப்பழ பூரணத்தை தட்டிய அந்த ராகி அடைக்குள் வைத்து வாழையிலேயே மடக்கி மூடி இட்லி பாத்திரத்தில் வைத்து வேக வைத்து எடுத்தால் சுவையான அன்னாசிப்பழ கொழுக்கட்டை தயார்.

Nutrition

Calories: 150kcal | Carbohydrates: 15g | Protein: 9g | Fat: 6g