சோயா பீன்ஸ் அல்லது சிவப்பு பீன்ஸ் அல்லது ராஜ்மா என அழைக்கப்படும் இந்த அற்புத உணவுப்பொருட்கள் ஏராளமான ஊட்டச்சத்துக்களை உள்ளடக்கிய ஒன்றாக உள்ளது. இந்த சோயா பீன்ஸை வட இந்திய மாநிலத்தில் அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். இப்போது தென்னிந்திய மாநிலத்திலும் அதிகளவு சமையலில் உபயோகிக்கின்றனர். இந்த பீன்ஸிற்கு சிவப்பு காராமணி என்று மற்றொரு பெயரும் உள்ளது. சோயா பீன்ஸை உணவில் அதிகமாக சேர்த்துக்கொண்டால் உடலானது எப்போதும் ஆரோக்கியத்துடன் காணப்படும். இவற்றில் கால்சியம், இரும்புச்சத்து அதிக அளவில் உள்ளதால் இவை வளரும் குழந்தைகளுக்கு ஏற்றது. மேலும், சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள் இவற்றை தாராளமாக தங்களது உணவுகளுடன் சேர்த்துக் கொள்ளலாம். இந்த சோயாவை வைத்து சுண்டல், கிரேவி, சப்ஜி என்று பல விதங்களில் சமைக்கலாம். அந்த வகையில் இன்று நாம் ராஜ்மா வைத்து ஸ்பைசியான உருண்டை குழம்பு காண உள்ளோம்.
ராஜ்மாவை வேக வைத்தோ அல்லது பொரியல் செய்தோ அடிக்கடி சாப்பிட்டு போரடித்துவிட்டதா? அவ்வப்போது சற்று வித்தியாசமான ரெசிபிக்களை வீட்டில் செய்து சுவைக்க விரும்புவீர்களா? உங்கள் வீட்டில் ராஜ்மா உள்ளது என்றால் அதை வைத்து ஒரு உருண்டை தயாரித்து, குழம்பு செய்து சாப்பிடுங்கள். இந்த ராஜ்மா உருண்டை குழம்பு சாதத்துடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும். மேலும் இந்த ரெசிபியை செய்வது மிகவும் சுலபம். பொதுவாக ராஜ்மா போன்ற பயறு வகைகளை குழந்தைகள் சாப்பிட தயக்கம் காட்டுவார்கள். எனவே அவர்கள் விரும்பி சாப்பிடக்கூடிய விதத்தில் சமைத்து தந்தால் சத்தம் மில்லாமல் சாப்பிட்டு முடிப்பார்கள்.இந்த உருண்டை குழம்பு சாதத்திற்கு ஊற்றி சாப்பிட ஒரு நல்ல தேர்வு மற்றும் நல்ல மாற்றாக இருக்கும்.
ராஜ்மா உருண்டை குழம்பு | Rajma Urundai Kulambu Recipe In Tamil
Equipment
- 1 மிக்ஸி
- 1 பவுள்
- 1 வாணலி
தேவையான பொருட்கள்
- 1 கப் ராஜ்மா
- 2 பெரிய வெங்காயம்
- 1 தக்காளி
- 6 பல் பூண்டு
- 2 பச்சை மிளகாய்
- 6 வர மிளகாய்
- 1/4 கப் தேங்காய் துருவல்
- 1/4 கப் புளி கரைசல்
- 2 டீஸ்பூன் சோம்பு
- 2 டீஸ்பூன் சீரகம்
- 1/2 டீஸ்பூன் வெந்தயம்
- 4 டீஸ்பூன் சாம்பார் தூள்
- 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- 1 துண்டு வெல்லம்
- 1/2 டீஸ்பூன் பெருங்காயத்தூள்
- உப்பு தேவையான அளவு
- 1 கொத்து கறிவேப்பில்லை
- கடலை எண்ணெய் தேவையான அளவு
செய்முறை
- முதலில் ராஜ்மாவை இரவு முழுவதும் ஊற வைத்து கொள்ளவும்.
- ஒரு மிக்ஸி ஜாரில் ஊற வைத்த ராஜ்மா, வரமிளகாய், சோம்பு, உப்பு சேர்த்து கொர கொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
- பின் இதனை ஒரு பவுளுக்கு மாற்றி அதனுடன் அரிசி மாவு சேர்த்து கலந்து நன்கு பிசைந்து சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும்.
- பின் மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவல், சோம்பு, சீரகம் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
- ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம், வெந்தயம், வர மிளகாய் சேர்த்து வதக்கவும்.
- பின் பூண்டு, பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். அத்துடன் தக்காளி சேர்த்து வதக்கி மஞ்சள் தூள், சாம்பார் தூள் சேர்த்து வதக்கவும்.
- மசாலா வாசனை போனதும் புளி தண்ணீர், மற்றும் ராஜ்மா வேக வைத்த தண்ணீர், பெருங்காயம் சேர்த்து கொதிக்க விடவும்.
- அத்துடன் வெல்லம், அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது, உப்பு சேர்த்து நன்கு கொதித்ததும் உருட்டி வைத்த உருண்டைகளை ஒவ்வொன்றாக போட்டு வேக விடவும்.
- உருண்டைகள் நன்கு வெந்து மேலே எழும்பி வந்ததும் அடுப்பை அணைத்து விடவும். அவ்வளவுதான் இப்போது சுவையான ராஜ்மா உருண்டை குழம்பு தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : ராஜ்மா மசாலா காரசாரமான ருசியில் இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க! பூரி சப்பாத்தி புலாவ் கூட எல்லாம் வெச்சு சாப்பிட அட்டகாசமாக இருக்கும்!