ரப்டி மால்புவா இப்படி செய்து பாருங்க! அஹா வாயில் வைத்தவுடன் கரையும் அற்புதமான ரெசிபி!

மாலையில் பள்ளி விட்டு வீடு திரும்பும் குழந்தைகள் மிகவும் சோர்வாக இருப்பார்கள், அவர்களுடைய சோர்வினை நீக்கி, குழந்தைகளை உற்சாகப்படுத்த, மாலை நேரங்களில் குழந்தைகளுக்கு தினமொரு சுவையான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்கலாம். ஒரே விதமாக நம்முடைய கைமுறுக்கு, அதிரசம், லட்டு, பூந்தி, காரா சேவு என்ற

By Prem Kumar · 9/4/2024

மாலையில் பள்ளி விட்டு வீடு திரும்பும் குழந்தைகள் மிகவும் சோர்வாக இருப்பார்கள், அவர்களுடைய சோர்வினை நீக்கி, குழந்தைகளை உற்சாகப்படுத்த, மாலை நேரங்களில் குழந்தைகளுக்கு தினமொரு சுவையான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்கலாம். ஒரே விதமாக நம்முடைய கைமுறுக்கு, அதிரசம், லட்டு, பூந்தி, காரா சேவு என்றெல்லாம் தின்று அலுத்துப் போன பெரியவர்களுக்கும் கூட இது கொஞ்சம் மாற்றமாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் அவங்களுக்கு ஜங்க் வகையறா ஸ்னாக்ஸ் ஐட்டங்களான கேக், பிரெட் டோஸ்ட், லேய்ஸ் சிப்ஸ், குர்குரே, அசைவம்னா சிக்கன் லாலிபாப், மட்டன் கபாப் போன்றவற்றிற்கு பதிலாக ஆரோக்கியமான வகையில் எதாவது செய்து கொடுங்கள். அந்த வகையில், இன்று நாம் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த மால்புவா செய்து கொடுக்கலாம். நிச்சயம் சுவையுடனே இருக்கும்.

இதை சாப்பிடும் போது ஒன்று அல்லது இரண்டு துண்டுகளோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். ஏனெனில் இது சுகர் சிரப்பில் ஊற வைத்துச் செய்யும் ஸ்னாக் என்பதால் குழந்தைகளுக்கு புழுத்தொல்லை வந்து விடக்கூடாது. உணவுக்கு பிறகு ஏனோ ஒரு துண்டு கடலை மிட்டாய், ஒரு சிறிய துண்டு வெல்லம் இந்த மாதிரி இனிப்பு சாப்பிட்டால் தான் திருப்தியாக இருக்கும். பெரும்பாலான விழாக்களில் உணவுக்கு கொடுக்கப்படும் அதே முக்கியத்துவம் இனிப்புகளுக்கும் வழங்கப்படுகிறது. அதில் மிகவும் பிரபலமான ஒரு இனிப்பு வகை தான் மால்புவா.‌ மால்புவா எனும் சுவையான இனிப்பு பண்டம் ராஜஸ்தான் மற்றும் ஒடிஷாவில் மிகவும் பிரபலமானது. இது ஒரு வகை பேன் கேக் ஆகும். இந்த சுவையான‌ ரப்டி மால்புவாவை எப்படி செய்வது என்று பார்ப்போம் வாருங்கள்.

இதனையும் படியுங்கள் : சுவையான வாழைப்பழ மால்புவா இப்படி ஒரு முறை செய்து பாருங்க! அசத்தலான சுவையில் இருக்கும்!

Recipes AMP · Quick view
View full