உங்கள் வீட்டில் செல்வம் குறைந்து கொண்டே போகிறதா? அதற்கு இது தான் காரணமாம்!
பொதுவாகவே ஒவ்வொருவரின் வீட்டிலும் செல்வம் பெருக வேண்டும் என்று நினைப்பதுண்டு. ஆனால் சில காரணங்களால் கையில் வரும் செல்வமானது தங்காமல் கைவிட்டு போகும். பலருக்கும் காரணமே இல்லாமல் பணம் செலவாகிறதே என்பது தான் பெரிய பிரச்சனையாக உள்ளது. வீண் செலவுகள் ஏற்படுவதற்கு, வீட்டில் மகாலட்சுமியி
பொதுவாகவே ஒவ்வொருவரின் வீட்டிலும் செல்வம் பெருக வேண்டும் என்று நினைப்பதுண்டு. ஆனால் சில காரணங்களால் கையில் வரும் செல்வமானது தங்காமல் கைவிட்டு போகும். பலருக்கும் காரணமே இல்லாமல் பணம் செலவாகிறதே என்பது தான் பெரிய பிரச்சனையாக உள்ளது. வீண் செலவுகள் ஏற்படுவதற்கு, வீட்டில் மகாலட்சுமியின் அருள் கடாட்சம் குறைவதற்கும் ஆன்மிக ரீதியாக சில காரணங்கள் சொல்லப்படுகின்றன. என்னென்ன காரணங்களால் பண இழப்பு, தேவையற்ற செலவுகள் ஏற்படுகின்றன என்று இந்த ஆன்மீகப் பதிவில் பார்க்கலாம்.
வீண் செலவு
மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ போதுமான பணம் இருப்பது மிகவும் முக்கியம். ஆனால் பல சமயங்களில், பல வகைகளில் கடுமையாக முயற்சி செய்த பிறகும், வருமானம் அதிகரிக்கப்பதில்லை. அப்படியே அதிகரித்தாலும், பணம் வீட்டில் தங்காமல் போய் விடுகிறது. வீட்டில் இருக்கும் பணம், செல்வம் எப்படி குறைகிறது என தெரியாமலும், பணம் வருவதும் தெரியாமல், போவதும் தெரியாமலும் இருக்கும் நிலை இருக்கும். இதற்கு பல காரணங்கள் உள்ளன, பணத்தை சரியாக கையாள முடியாதது தவிர. இது போல் வீட்டில் பற்றாக்குறைய நிலை ஏற்படுவதற்கு சாஸ்திரங்களில் சில குறிப்பிட்ட காரணங்கள் சொல்லப்படுகிறது. அது என்ன காரணங்கள் என்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
வீட்டில் பண பற்றாக்குறை ஏற்பட காரணம்
யாரிடமும் உப்பை நீங்கள் இலவசமாக வாங்கக் கூடாது. அவ்வாறு செய்தால் உடல் நல பிரச்சினைகள் ஏற்படுவதோடு மட்டுமல்லாமல் பண பிரச்சினைகளும் ஏற்படும்.
சமயலறையும் தெய்வீக சக்தி நிறைந்த இடம்தான். அதனால் அங்கு பாத்திரங்களை கழுவாமல் வைக்கவே கூடாது.
படுக்கையையும் பூஜை பொருட்களையும் வேலையாட்களை கொண்டு சுத்தம் செய்வது. மற்றும் வாசலில் செருப்பு துடைப்பம் போன்றவற்றால் அலங்கோலப்படுத்தி வைத்து இருப்பது.
ஒருபோதும் இருட்டிய பின்னர்,தயிர் சேர்த்த உணவுகளை சாப்பிடக்கூடாது. அப்படி சாப்பிட்டால், எவ்வளவு பெரிய கோடீஸ்வரனாக இருந்தாலும், அவன் வறுமைக்குள் விழுந்துவிடுவான்.
மாலை 5 மணிக்குள் நமது வீட்டை பெருக்கி,சுத்தம் செய்து விட வேண்டும். 6 மணிக்கு மேல் வீட்டை சுத்தம் செய்ய கூடாது. அதுமட்டுமல்லாமல் வீட்டில் ஒட்டடை சேராமல் சுத்தம் செய்து கொண்டே இருக்க வேண்டும்.
பெண்கள் செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமை தவிர மற்ற நாளில் எண்ணெய் தேய்த்து குளிக்க கூடாது. அதேபோல் ஆண்கள் புதன், சனி தவிர மற்ற நாளில் தலைக்கு எண்ணெய் வைத்து குளிக்க கூடாது.
வீட்டில் நாம் செய்யும் தவறுகள்
ஒருவருக்கு பணம் கொடுக்க வேண்டுமென்றால் வாசல் படியில் நின்று கொண்டு கொடுக்கக் கூடாது.
இருட்டியபின் துர்சக்திகள் உலவும் நேரம் அது. அவைகளை ஈர்க்கும் வகையில் மெல்லிசை கேட்காமல் சதா காலம் ராட்சச இசையை, அபஸ்வர இசைகளை கேட்பது, குறைந்த பட்ச வெளிச்சம் இல்லாமல் மின்சாரம் சேமிப்பதாக வெளிச்சங்களை குறைப்பது இது போன்ற நிகழ்வுகளால் வீட்டில் துரதிர்ஷ்டம், எதிர்மறை நிகழ்வுகள் நடக்கும்.
எனக்கு மட்டும் எப்ப பார்த்தாலும் நேரமே சரி இல்லை என்று சொல்லி கொண்டு இருந்தால் அதுவாகவே சரியில்லாமல் போய்விடும்.
மாலை சூரியன் மறைந்த பின் , தலை முடியை வாருவதால் உதிரும் முடிகள் தீய சக்திகளை ஈர்ப்பவை. அதனால் அதை செய்யாதீர்கள்.
மாலையில் நகம் வெட்டுதல் வீட்டில் நேர்மறை சக்தியை குறைக்கும் சக்தி உண்டு. இது செல்வத்தை குறைக்க வழி செய்யும்.
நம்மில் பலருக்கும் மாலையில் தூங்கும் பழக்கம் உள்ளது. மாலையில் தூங்கினால் லக்ஷ்மி தேவிக்கு பிடிக்காது. ஆகவே விளக்கேற்றிய பின் தூங்காதீர்கள்.
உதவி செய்தோருக்கு நன்றிகள் இல்லாமல் அவர்களுக்கே எதிரியாக செயல்படுவதால் நாம் பலரது கோபத்திற்கு ஆளாகலாம். அதனால் எப்போதும் நன்றியுடன் இருங்கள்.
வீட்டில் செல்வம் சேர நாம் செய்ய வேண்டியவை
சம்பாதிப்பதில் ஒரு தொகையை சேர்த்து அதனைஅன்னதானத்திற்கு செலவிட அதனை போல் ஐந்து மடங்குநம்மிடம் வந்து சேரும்.
நமது வீட்டிற்குள் நுழைந்ததும்,எப்போதும் நறுமணம் வீச வேண்டும். அப்படி இருந்தால்,செல்வம் சேரத்துவங்கும். எங்கோ போக வேண்டிய பணம், நமது வீட்டை நோக்கி வரும்.அதே சமயம் அனாவசியமான செலவுகளும் குறையும்.
எந்த வீட்டில் சாப்பாட்டிற்கு ருசியாக ஊறுகாய் இருக்கிறதோ அந்த வீட்டில் வறுமை இருக்காது. எனவே உங்கள் வீட்டில் எப்போதும் பலவித ஊறுகாய்கள் குறைவின்றி இருக்கட்டும்.
நம்முடைய வீட்டுக்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு குங்குமமும், தண்ணீரும் அவசியம் வழங்க வேண்டும்.
உங்கள் குடும்ப உறுப்பினர்களிடம் வாரம் ஒரு நாட்களாவது அல்லது தினமும் ஒரு மணி நேரமாவது குடும்பத்தாருடன் நேரத்தை செலவு செய்யுங்கள். இல்லையெனில் எவ்வளவு சம்பாதித்தாலும் வீண் தான்.
எண்ணங்கள் மிகவும் வலிமையானவை. அவை உங்களுக்கு நல்லதையே கொண்டு வந்து சேர்க்கும், அதனால் நல்லவற்றை மட்டும் எப்போதும் உங்கள் எண்ணங்களில் இருக்கட்டும்.
இதனையும் படியுங்கள் : செல்வம் பெருகிக் கொண்டே இருக்க குபேரனை எப்படி வழிபட வேண்டும்