ருசியான சிவப்பரிசி ஆப்பம் ஈஸியாக வீட்டில் இப்படி செய்து பாருங்க! ஆப்ப சோடா எதுவும் சேர்காமலே செய்யலாம்!
இன்றைய காலகட்டத்தில் உணவை சமைப்பது விட கடினமான ஒன்று, எந்த உணவில் சத்துக்கள் நிறைந்துள்ளது என்று தேடித்தேடி சமைப்பது.. இப்போதெல்லாம் அனைத்து வீடுகளிலும் யாராவது ஒருவருக்கு சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகள் இருக்கிறது. அப்படி உள்ள வீடுகளில் பெண்கள் வேலைக்கு போகும் அ
இன்றைய காலகட்டத்தில் உணவை சமைப்பது விட கடினமான ஒன்று, எந்த உணவில் சத்துக்கள் நிறைந்துள்ளது என்று தேடித்தேடி சமைப்பது.. இப்போதெல்லாம் அனைத்து வீடுகளிலும் யாராவது ஒருவருக்கு சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகள் இருக்கிறது. அப்படி உள்ள வீடுகளில் பெண்கள் வேலைக்கு போகும் அவசரத்தில் குழந்தைகளுக்கு தனியாகவும், இவர்களுக்கு தனியாகவும் சமைப்பது என்பது முடியாத காரியம். இதுபோன்ற சூழ்நிலைகளை சமாளிப்பதற்கு பல சத்து நிறைந்த ஆரோக்கியமான உணவுகள் இருக்க தான் செய்கிறது.
நார்ச்சத்து அதிகம் உள்ள சிவப்பு அரிசி உணவுகளை அவ்வப்போது சாப்பிட்டு வருவது செரிமான உறுப்புகளின் நலத்தை மேம்படுத்தும். தினமும் காலையில் இட்லி தோசை மற்றும் பூரி போன்றவற்றை மட்டுமே அதிகமாக நாம் சாப்பிடுவது வழக்கம். ஆனால் அதைவிட சுவையான மற்றும் ஆரோக்கியமான டிபன் வகைதான் சிவப்பரிசி ஆப்பம். தற்போதுள்ள குழந்தைகளுக்கு இந்த மாதிரியான சிவப்பரிசி ஆப்பம் ஊற்றி காலையில் குடுத்து பாருங்கள் தினமும் அவர்கள் அதை விரும்பி கேட்பார்கள். ஆப்பம் தயார்செய்வது எப்படி என்று பார்ப்போம் வாருங்கள்.