ருசியான சிவப்பரிசி ஆப்பம் ஈஸியாக வீட்டில் இப்படி செய்து பாருங்க! ஆப்ப சோடா எதுவும் சேர்காமலே செய்யலாம்!

- Advertisement -

இன்றைய காலகட்டத்தில் உணவை சமைப்பது விட கடினமான ஒன்று, எந்த உணவில் சத்துக்கள் நிறைந்துள்ளது என்று தேடித்தேடி சமைப்பது.. இப்போதெல்லாம் அனைத்து வீடுகளிலும் யாராவது ஒருவருக்கு சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகள் இருக்கிறது. அப்படி உள்ள வீடுகளில் பெண்கள் வேலைக்கு போகும் அவசரத்தில் குழந்தைகளுக்கு தனியாகவும், இவர்களுக்கு தனியாகவும் சமைப்பது என்பது முடியாத காரியம். இதுபோன்ற சூழ்நிலைகளை சமாளிப்பதற்கு பல சத்து நிறைந்த ஆரோக்கியமான உணவுகள் இருக்க தான் செய்கிறது.

-விளம்பரம்-

நார்ச்சத்து அதிகம் உள்ள சிவப்பு அரிசி உணவுகளை அவ்வப்போது சாப்பிட்டு வருவது செரிமான உறுப்புகளின் நலத்தை மேம்படுத்தும். தினமும் காலையில் இட்லி தோசை மற்றும் பூரி போன்றவற்றை மட்டுமே அதிகமாக நாம் சாப்பிடுவது வழக்கம். ஆனால் அதைவிட சுவையான மற்றும் ஆரோக்கியமான டிபன் வகைதான் சிவப்பரிசி ஆப்பம். தற்போதுள்ள குழந்தைகளுக்கு இந்த மாதிரியான சிவப்பரிசி ஆப்பம் ஊற்றி காலையில் குடுத்து பாருங்கள் தினமும் அவர்கள் அதை விரும்பி கேட்பார்கள். ஆப்பம் தயார்செய்வது எப்படி என்று பார்ப்போம் வாருங்கள்.

- Advertisement -
Print
1 from 1 vote

சிவப்பரிசி ஆப்பம் | Red Rice Appam Recipe In Tamil

நார்ச்சத்து அதிகம் உள்ள சிவப்பு அரிசி உணவுகளை அவ்வப்போது சாப்பிட்டு வருவது செரிமான உறுப்புகளின்நலத்தை மேம்படுத்தும். தினமும் காலையில் இட்லி தோசை மற்றும் பூரி போன்றவற்றை மட்டுமேஅதிகமாக நாம் சாப்பிடுவது வழக்கம். ஆனால் அதைவிட சுவையான மற்றும் ஆரோக்கியமான டிபன் வகைதான் சிவப்பரிசி ஆப்பம்  தற்போதுள்ள குழந்தைகளுக்கு இந்தமாதிரியான சிவப்பரிசி ஆப்பம் ஊற்றி காலையில் குடுத்து பாருங்கள் தினமும் அவர்கள் அதை விரும்பி கேட்பார்கள். ஆப்பம்தயார்செய்வது எப்படி என்று பார்ப்போம் வாருங்கள்.
Prep Time6 hours
Active Time5 minutes
Course: Breakfast, dinner
Cuisine: tamilnadu
Keyword: Red Rice Appam
Yield: 4
Calories: 247kcal

Equipment

  • 1 ஆப்ப கடாய்

தேவையான பொருட்கள்

  • 200 கிராம் சிவப்பரிசி
  • 200 கிராம் பச்சரிசி
  • 1 கைப்பிடி உளுத்தம்பருப்பு
  • 2 டீஸ்பூன் வெந்தயம்
  • உப்பு தேவையானஅளவு

செய்முறை

  • சிவப்பரிசி,பச்சரிசி, உளுத்தம் பருப்பு, வெந்தயம் ஆகியவற்றைச் சேர்த்து மூன்று மணி நேரம் ஊறவைக்கவும்.
  • பிறகு களைந்து அவற்றுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கிரைண்டரில் நைஸாக அரைத்தெடுக்கவும்.
  • பிறகு உப்பு சேர்த்துக் கரைத்து ஆறு மணி நேரம் புளிக்கவிடவும்.
  • ஆப்பக் கல்லைச் சூடாக்கி மாவை ஆப்பங்களாக ஊற்றி, வேகவிட்டு எடுக்கவும்.
  • சிவப்பரிசி சேர்ப்பதால் ஆப்ப சோடா தேவையில்லை. நன்கு மிருதுவாக வரும். ருசியாகவும் இருக்கும். சிவப்பரிசியில் சத்துகள் பல அடங்கியுள்ளன.

Nutrition

Serving: 250g | Calories: 247kcal | Carbohydrates: 47g | Protein: 21g | Saturated Fat: 0.6g | Sodium: 3mg | Potassium: 366mg | Fiber: 10.3g | Sugar: 1.1g | Calcium: 4mg | Iron: 8mg