கடன் பிரச்சனையும் எதிரிகள் தொல்லையும் தீர செய்ய வேண்டிய பரிகாரம்!!

நம்முடைய வாழ்க்கையில் நமக்கு எதிரிகள் என்று சிலர் இருப்பார்கள். வேலை பார்க்கும் இடம் வீட்டின் அருகில் என்று எங்க வேண்டுமானாலும் இருக்கலாம். கடன் பிரச்சனையும் நமக்கு தீராத ஒரு பிரச்சினையாகவே தொடர்ந்து கொண்டிருக்கும். இவை அனைத்தும் தீர்வதற்கு பல விதமான தெய்வங்களை வழிபாடு செய்திருப்

By Prem Kumar · 3/8/2025

நம்முடைய வாழ்க்கையில் நமக்கு எதிரிகள் என்று சிலர் இருப்பார்கள். வேலை பார்க்கும் இடம் வீட்டின் அருகில் என்று எங்க வேண்டுமானாலும் இருக்கலாம். கடன் பிரச்சனையும் நமக்கு தீராத ஒரு பிரச்சினையாகவே தொடர்ந்து கொண்டிருக்கும். இவை அனைத்தும் தீர்வதற்கு பல விதமான தெய்வங்களை வழிபாடு செய்திருப்போம் ஆனால் உக்கிர தெய்வங்களில் ஒருவரான காலபைவரை நாம் வழிபாடு செய்வதன் மூலம் அனைத்து பிரச்சினைகளும் தீர்ந்து போகும். அஷ்டமி திதி அன்று கால பைரவரை வழிபாடு செய்தால் எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும். அந்த வழிபாட்டை பற்றி இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கலாம்.

அஷ்டமி நாள்

ஒவ்வொரு மாதத்திலும் வரக்கூடிய அஷ்டமினால் அன்று அதிலும் வளர்பிறை அஷ்டமி சமயத்தில் சொர்ண ஆகர்ஷண பைரவரை வாய்ப்பாடு செய்யும் போது செல்வ செழிப்பிற்கு குறைய இருக்காது. இது மிகவும் சக்தி வாய்ந்த நாள் மேலும் நரசிம்மரை சுவாதி நட்சத்திர நாளன்று வழிபாடு செய்பவர்களுக்கு கடன் பிரச்சினை தீரும் அதனால் மறக்காமல் அஷ்டமி நாள் அன்று இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள்.

பரிகாரம் செய்ய தேவையான பொருள்

இந்த வழிபாட்டை செய்வதற்கு நமக்கு தேவைப்படும் பொருள் எட்டு மிளகு. கால பைரவருக்கு மிளகு மிகவும் உகந்த பொருள் பலரும் மிளகை மூட்டையாக கட்டி கால பைரவருக்கு தீபம் ஏற்றி வழிபாடு செய்வார்கள். இந்த வழிபாட்டை மாலை 6:00 மணி முதல் இரவு 9 மணிக்குள் எப்பொழுது வேண்டும் ஆனாலும் செய்து முடிக்கலாம். இந்த மிளகை வைத்து நாம் செய்யும் பரிகாரம் நிச்சயமாக நமக்கு நல்லதை கொடுக்கும். இந்த பரிகாரத்தை செய்யும் முன்பு அசைவம் சாப்பிடக்கூடாது. பெண்களும் கூட மாதாந்திர நாள் சமயத்தில் இந்த வழிபாட்டை செய்வதில் தவறு கிடையாது.

பரிகாரம் செய்யும் முறை

கையில் எட்டு மிளகாய் எடுத்துக்கொண்டு ஏதாவது ஒரு அமைதியான இடத்தில் ஏதாவது ஒரு திசை நோக்கி அமர்ந்து கொள்ள வேண்டும். பிறகு கால பைரவர் இடம் எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்க வேண்டும் கடன் பிரச்சினை நீங்க வேண்டும் என்று முழு மனதோடு பிரார்த்தனை செய்ய வேண்டும். பிறகு காலபைரவர் உடைய மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.

மந்திரம்

“ஓம் க்லீம் ப்ரம் பைரவாய நமஹ”

இந்த மந்திரத்தை 15 நிமிடம் உச்சரிக்க வேண்டும் பிறகு உங்கள் கையில் இருக்கக்கூடிய மிளகாய் ஒரு பேப்பரில் வைத்து மடித்து வீட்டில் பணம் வைக்கக்கூடிய இடத்தில் வைக்க வேண்டும் அல்லது பர்ஸில் கூட வைக்கலாம். மூன்று மாதங்களுக்கு பிறகு அந்த மிளகாய் எடுத்து வளர்பிறை அஷ்டமி என்று ஓடுகின்ற தண்ணீரில் போட்டுவிட்டு புது மிளகை எடுத்து மறுபடியும் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். பைரவருக்கு உரிய மிளகு வைத்து இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள் நிச்சயமாக எதிரிகள் தொல்லையும் கடன் பிரச்சனையும் தீர்ந்துவிடும்.

இதனையும் படியுங்கள் : கடன் பிரச்சினைகள் அதிகமாக சில காரணங்கள்!

Recipes AMP · Quick view
View full