அடகு வைத்த நகை மற்றும் வீட்டு பத்திரத்தை மீட்க பரிகாரம்!!
இன்றைய காலகட்டத்தில் உழைத்து சம்பாதித்து பெரும்பாடு பட்டாலும் அதில் மிச்சம் பிடிப்பது மிகவும் கடினமான ஒன்று. நாம் கஷ்டப்பட்டு சம்பாதித்த நகையோ இடமோ அவசர தேவைக்காக அடமானம் வைக்க வேண்டிய சூழல் ஏற்படும் போது மிகவும் வருத்தமாக இருக்கும். அந்த சூழலில் நாம் அடகு வைத்த நகையும் நிலமும் ந
இன்றைய காலகட்டத்தில் உழைத்து சம்பாதித்து பெரும்பாடு பட்டாலும் அதில் மிச்சம் பிடிப்பது மிகவும் கடினமான ஒன்று. நாம் கஷ்டப்பட்டு சம்பாதித்த நகையோ இடமோ அவசர தேவைக்காக அடமானம் வைக்க வேண்டிய சூழல் ஏற்படும் போது மிகவும் வருத்தமாக இருக்கும். அந்த சூழலில் நாம் அடகு வைத்த நகையும் நிலமும் நமக்கு திரும்பவும் கிடைக்குமா என்ற கவலையில் இருந்தால் இந்த எளிய பரிகாரத்தை செய்து பாருங்கள் நிச்சயமாக அது உங்களிடம் வந்து சேரும். அதனைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையில்லாமல் நகையை அடகு வைத்து
நகையோ பத்திரமோ அடகு வைப்பதற்கு முன்பாக பலமுறை யோசிக்க வேண்டும். அப்படி செய்தால் தான் அந்த பிரச்சினை சரியாகும் என்று யோசிக்க வேண்டும். அவசியம் இல்லாமல் இதனை அடகு வைக்க கூடாது அடகு வைத்தாலும் அதனை திருப்புவதற்கான சூழல் நம்மிடம் இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டுதான் அடமானம் வைக்க வேண்டும்.
குரு மற்றும் செவ்வாய் கிரகம்
நகையை அடகு வைக்கும் போது நம்முடைய ஜாதகத்தில் குரு பகவான் எந்த இடத்தில் இருக்கிறார் என்பதை பார்த்துக் கொண்டு தான் வைக்க வேண்டும். அதனை போல் நிலம் வீடு போன்றவற்றிற்கு உகந்த கிரகமான செவ்வாய் கிரகம் நம்முடைய ஜாதகத்தில் எந்த இடத்தில் உள்ளது என்பதை பார்த்துவிட்டு பிறகு தான் பத்திரத்தை அடகு வைக்க வேண்டும். இது எல்லாம் யாரிடமும் கேட்க தெரியாது கேட்கவும் முடியாது அதற்கான நேரம் கூட இல்லை அப்படியான சூழ்நிலையில் நகையை அடகு வைத்து விட்டோம் என்று சொல்பவர்கள். இந்த எளிய பரிகாரத்தை செய்வதன் மூலம் நிச்சயமாக சீக்கிரத்தில் திருப்பலாம்.
நகையை அடகு வைப்பதற்கு முன்பாக செய்ய வேண்டியவை
நகையை அடக்க வைப்பதற்கு முன்பாக நகையில் சிறிதளவு பசும்பாலை ஒரு டம்ளரில் எடுத்துக்கொண்டு அந்த பாலை நகை மீது லேசாக தெளித்து விட்டு சிறிது நேரம் பூஜை அறையில் வைத்துவிட்டு மனதார தெய்வத்திடம் வேண்டிக்கொண்டு குலதெய்வத்திடம் மனதார பிரார்த்தனை செய்து கொண்டு பிறகுதான் நகையை அடக்க வைக்க வேண்டும். அப்படி செய்யும் போது உங்களிடம் நிச்சயமாக அந்த நகை வந்து சேரும்.
நிலத்தை அடமானம் வைக்கும் போது செய்ய வேண்டியவை
நிலத்திற்கான பத்திரத்தை அடமானம் வைக்கும் போது நிலத்திலிருந்து சிறிதளவு மண்ணை எடுத்து ஒரு துணிவு கட்டி முருகப்பெருமான் திருவுருவப்படத்திற்கு முன்பாக வைத்து தீபம் ஏற்றி வழிபட்டு விட்டு உன்னை நம்பித்தான் அடமானம் வைக்கிறேன், மீண்டும் என்னிடம் கொண்டுவந்து சேர்த்து விடு என்று முருகனிடம் மனதார பிரார்த்தனை செய்து கொண்டு பிறகு அடகு வைக்க வேண்டும். நிலத்திற்கான தெய்வம் செவ்வாய் கிரகமாக இருந்தாலும் அதி தேவதையாக விளங்கக்கூடிய தெய்வம் முருகப்பெருமான். எனவே முருகப்பெருமானை இந்த முறையில் வழிபட்டுவிட்டு பத்திரத்தை வைக்கும் போது நிச்சயமாக உங்களிடம் வந்து சேரும்.
நகையை நிலத்தை அடகு வைத்த பின்பு செய்ய வேண்டியவை
பத்திரம் நகை இரண்டையும் அடகு வைப்பதற்கு முன்பு நன்கு யோசித்து வைக்க வேண்டும். இறைவனை வேண்டி விட்டு பிறகு செய்தால் நிச்சயம் நம்மிடம் வந்து சேரும். இந்த பரிகாரத்தை மட்டும் செய்து கொண்டிருந்தாலும் பலன் கிடைக்காது அதற்கான முயற்சிகளையும் நாம் போட வேண்டும் ஆனால் முயற்சி செய்தும் திரும்ப பெற முடியாதவர்கள் கிரக சூழ்நிலைகளையும் நேரங்களையும் பார்த்து அதற்கான பரிகாரத்தை செய்ய வேண்டும். அப்படி செய்தால் நிச்சயம் உங்களுடைய நகை நிலம் திரும்ப கிடைக்கும்.
இதனையும் படியுங்கள் : திருச்செந்தூர் முருகனுக்கும் வைகாசி விசாகத்திற்கும் இருக்கும் தொடர்!