சந்திரகிரஹணத்தினுடைய பாதிப்பு நீங்க செய்ய வேண்டிய பரிகாரம்!

சந்திர கிரகணம் நடைபெறும் நாளில் சந்திர கிரகணத்தால் ஒரு சில ராசிக்காரர்கள் பாதிக்கப்படுவார்கள் தனுசு ராசி மகர ராசி கும்ப ராசி மற்றும் மீன ராசி போன்றவர்களும் பூரட்டாதி புனர்பூசம் விசாக நட்சத்திர ராசிக்காரர்களும் பாதிப்பை சந்திப்பார்கள். அந்த பாதிப்பை போக்குவதற்கு ஒரு எளிமையான பரிகா

By Prem Kumar · 24/9/2024

சந்திர கிரகணம் நடைபெறும் நாளில் சந்திர கிரகணத்தால் ஒரு சில ராசிக்காரர்கள் பாதிக்கப்படுவார்கள் தனுசு ராசி மகர ராசி கும்ப ராசி மற்றும் மீன ராசி போன்றவர்களும் பூரட்டாதி புனர்பூசம் விசாக நட்சத்திர ராசிக்காரர்களும் பாதிப்பை சந்திப்பார்கள். அந்த பாதிப்பை போக்குவதற்கு ஒரு எளிமையான பரிகாரத்தை செய்தால் போதும் அதனை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

சந்திரகிரகணத்தின் பாதிப்பு நீங்க செய்ய வேண்டிய பரிகாரம்

தனுசு ராசிக்காரர்கள் செய்ய வேண்டியவை

தனுசு ராசிக்காரர்கள் சந்திர கிரகணத்தன்று காலை 6:00 மணிக்கு மேல் வீட்டின் பூஜை அறைக்கு சென்று பூஜை அறையை சுத்தம் செய்து அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றி வழிபட்டு விட்டு மாலை நேரத்தில் நவகிரக கோவிலுக்கு சென்று அங்குள்ள புதன் பகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்யலாம்.

கும்ப ராசிக்காரர்கள் செய்ய வேண்டியவை

கும்ப ராசிக்காரர்கள் அன்றைய தினம் காலை ஆறு மணிக்கு மேல் வீட்டில் நெய் தீபம் ஏற்றுவிட்டு அதனை இரண்டு மணி நேரம் எரிய விட்டு குளிர வைக்க வேண்டும். நீங்கள் உணவு உண்பதற்கு முன்பாக நல்லெண்ணெயில் செய்த சாதத்தை காகத்திற்கு வைத்துவிட்டு மாலை நேரத்தில் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று வழிபட வேண்டும்.

மகர ராசிக்காரர்கள் செய்ய வேண்டியவை

மகர ராசிக்காரர்கள் காலை 6 மணிக்கு பிறகு நெய் தீபம் ஏற்றி இரண்டு மணி நேரம் எரிய விட்டு உணவு உண்பதற்கு முன்பாக எள் கலந்த சாதத்தை காகத்திற்கு வைக்க வேண்டும். மேலும் மாலை நேரத்தில் நவகிரக கோவிலுக்கு சென்று சனீஸ்வர பகவானுக்கு பூக்கள் போட்டு விளக்கு ஏற்றி வழிபட வேண்டும்.

மீன ராசிக்காரர்கள் செய்ய வேண்டியவை

மீன ராசிக்காரர்கள் அன்றைய தினத்தில் காலை 6 மணிக்கு மேல் வீட்டில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்துவிட்டு மாலை நேரத்தில் பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்வது நல்லது.

புனர்பூச நட்சத்திரக்காரர்கள் செய்ய வேண்டியவை

அன்றைய தினத்தில் காலை 6 மணிக்கு வீட்டில் நெய் தீபம் ஏற்றி இரண்டு மணி நேரம் எரிகிவிட்டு குளிர்விக்க வேண்டும் அதன் பிறகு மாலை நேரத்தில் துளசி மாலையை வாங்கி பெருமாள் ஆலயத்திற்கு சென்று அங்கு கொடுத்துவிட்டு பெருமாளின் நன்றாக வழிபாடு செய்ய வேண்டும்.

விசாக நட்சத்திரக்காரர்கள் செய்ய வேண்டியவை

சந்திர கிரகணத்தன்று காலை 6:00 மணிக்கு வீட்டில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட்டு விட்டு கொண்டைக்கடலையை நெய்வேத்தியமாக வைத்து மனதார பிரார்த்தனை செய்ய வேண்டும். அதன்பிறகு மாலை நேரத்தில் ஏதாவது ஒரு அம்மன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்யலாம்.

மேற்குறிப்பிட்ட எளிமையான பரிகாரங்களை செய்வதால் சந்திர கிரகணத்தால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்கலாம்.

இதனையும் படியுங்கள் : சூரிய கிரகணத்தால் (10.2.2024) அதிர்ஷ்டத்தை அள்ள போகும் மூன்று ராசிகள்

Recipes AMP · Quick view
View full