ஜோதிட ரீதியாக சூரிய கிரகணம் மிகவும் முக்கியமானது. அதேபோல் விஞ்ஞான ரீதியாக சூரிய கிரகணம் ஒரு முக்கியமான வானியல் நிகழ்வு. 2024வது ஆண்டின் முதல் சூரிய கிரகணம் ஏப்ரல் மாதம் நிகழ்ந்தது.இந்து நாட்காட்டியின் படி 2024வது ஆண்டின் இரண்டாவது சூரிய கிரகணம் அக்டோபர் மாதம் இரண்டாம் தேதி நிகழப்போகிறது. அறிவியல் ரீதியாக சூரிய கிரகணம் வானியல் நிகழ்வாக இருந்தாலும் சூரிய கிரகணத்தை வெறும் கண்களால் பார்த்தால் நிறைய ஆபத்துகள் உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே சந்திர கிரகணம் சூரிய கிரகணம் இரண்டுமே மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.
ஜோதிட ரீதியாக நிகழவிருக்கும் இரண்டாவது சூரிய கிரகணமானது 12 ராசிகளில் மூன்று ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகிறது என்பது சில ஜோதிடர்களின் கருத்து. சூரிய கிரகணம் நிகழ்வதால் அனைத்து ராசிக்காரர்களுக்கும் ஒரு சில விளைவுகள் ஏற்படும் அது சாதகமான விளைவாகவும் இருக்கும் எதிர்மறை விளைவாகவும் இந்த சூரிய கிரகணம் சுமார் ஆறு மணி நேரம் நான்கு நிமிடங்கள் நீடிக்கும் இந்த சூரிய கிரகணத்தை வடக்கு மற்றும் தென் அமெரிக்காவில் இருந்து பார்க்க முடியும் இந்தியாவிலிருந்து பார்க்க முடியாது என்றும் ஜோதிடர்கள் கூறுகிறார்கள்.சூரிய கிரகணத்தால் அனைத்து ராசிக்காரர்களின் ஒரு சில விளைவுகளை சந்தித்தாலும் அதிர்ஷ்டத்தை அள்ள போகும் சில ராசிகளைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
மிதுன ராசி

இந்த ஆண்டின் இரண்டாவது சூரிய கிரகணத்தால் மிதுன ராசிக்காரர்களின் வாழ்க்கை மிகவும் சிறப்பானதாக இருக்கும் மிதுன ராசிக்காரர்களின் குடும்பத்தில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் நீங்கி வாழ்க்கை சுமுகமாக இருக்கும். இருந்த சங்கடங்கள் அனைத்தும் தீர்ந்து மகிழ்ச்சியான வாழ்க்கையும் கிடைக்கும்.
கடக ராசி

வணிகத்தில் ஈடுபட்டிருக்கும் கடக ராசி காரர்களுக்கு வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். இந்த சூரிய கிரகணத்தால் மாணவர்களின் ஒத்துழைப்பால் குடும்பங்களுக்கு இடையே உள்ள பிரச்சனைகள் நீங்கி உறவுகள் மேம்படும். உங்களுக்கு நிலுவையில் இருந்த அனைத்து பணங்களும் வந்து சேரும். ஆன்மீக பணிகளில் அதிக ஆர்வம் காட்டி வருவீர்கள். மொத்தத்தில் இந்த காலகட்டம் உங்களுக்கு மிகவும் சாதகமானதாகவே அமையும்.
விருச்சிக ராசி

இந்த வருடத்தின் இரண்டாவது சூரிய கிரகணத்தால் விருச்சிக ராசிக்காரர்களுக்கு நிலுவையில் இருந்த பல பணிகள் விரைவில் நடந்து முடியும் வாழ்க்கையில் இருக்கின்ற அனைத்து பிரச்சினைகளும் தீர்ந்து மகிழ்ச்சியை மட்டுமே காண்பீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத வகையில் முன்னேற்றங்கள் ஏற்பட்டு வாழ்க்கை அழகானதாக மாறும்.
இதனையும் படியுங்கள் : குரு உச்ச ஆட்டம், இனி இந்த ராசிகளுக்கு பொற்காலம் தான்!!



