பீர்க்கங்காய் முட்டையை வைத்து ஆரோக்கியமான பீர்க்கங்காய் முட்டை கறி சில நிமிடத்தில் தயார். சப்பாத்தி, தோசை சுடச்சுட சாதத்திற்கு இது செம சைட் டிஷ்.

நாம் செய்யக்கூடிய சமையல் உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடியதாகவும் இருக்க வேண்டும். நாவிற்கு சுவை கொண்டதாகவும் இருக்க வேண்டும். சமைப்பதற்கு சுலபமாகவும் இருக்க வேண்டும். காலை நேரத்தில் அவசர அவசரமாகச் லஞ்ச் பேக் செய்யும் போது குழந்தைகளுக்கு, கணவருக்கு ஹெல்தியான சுவையான ஒரு ரெசிபி சமைக்க

By Prem Kumar · 21/1/2024

நாம் செய்யக்கூடிய சமையல் உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடியதாகவும் இருக்க வேண்டும். நாவிற்கு சுவை கொண்டதாகவும் இருக்க வேண்டும். சமைப்பதற்கு சுலபமாகவும் இருக்க வேண்டும். காலை நேரத்தில் அவசர அவசரமாகச் லஞ்ச் பேக் செய்யும் போது குழந்தைகளுக்கு, கணவருக்கு ஹெல்தியான சுவையான ஒரு ரெசிபி சமைக்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டால்,

 இந்த பீர்க்கங்காய்  முட்டை கறி செய்து அசத்துங்கள். சப்பாத்திக்கு உள்ளே இந்த கறி வைத்து சுருட்டி ஸ்டஃப்டு சப்பாத்தியா கொடுக்கலாம். தோசையில் வைத்து சுருட்டி கொடுக்கலாம். சாம்பார் சாதம் ரசம் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள சைட் டிஷ் ஆகவும் கொடுக்கலாம். நம்முடைய விருப்பம்தான். சிம்பிளான இன்ட்ரஸ்டிங்கான ஹெல்தியான இந்த ரெசிபியை தெரிந்து கொள்வோமா.

பீர்க்கங்காயில் மருத்துவ குணங்கள் அதிகம் உள்ளன. இதில் விட்டமின் ஏ, சி மற்றும் மக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. பீர்க்கங்காயை உணவில் சேர்த்துக் கொள்வதால் நீர்சத்து அதிகரிக்கிறது, மலச்சிக்கல், சர்க்கரை நோய், எலும்பு பிரச்சனை போன்ற நோய்களை கட்டுப்படுத்த உதவுகிறது. ஆனால் பீர்க்கங்காயில் இருக்கும் நீர்த்தன்மை பலருக்கும் பிடிப்பதில்லை என்பதால் அவற்றை உணவில் பெருமளவில் தவிர்த்து விடுகின்றனர். இவ்வாறானவர்களுக்கு பீர்க்கங்காயுடன் முட்டையை சேர்த்து செய்யும் இந்த கறி செய்து கொடுக்கலாம்.

Recipes AMP · Quick view
View full