பீர்க்கங்காய் முட்டையை வைத்து ஆரோக்கியமான பீர்க்கங்காய் முட்டை கறி சில நிமிடத்தில் தயார். சப்பாத்தி, தோசை சுடச்சுட சாதத்திற்கு இது செம சைட் டிஷ்.

- Advertisement -

நாம் செய்யக்கூடிய சமையல் உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடியதாகவும் இருக்க வேண்டும். நாவிற்கு சுவை கொண்டதாகவும் இருக்க வேண்டும். சமைப்பதற்கு சுலபமாகவும் இருக்க வேண்டும். காலை நேரத்தில் அவசர அவசரமாகச் லஞ்ச் பேக் செய்யும் போது குழந்தைகளுக்கு, கணவருக்கு ஹெல்தியான சுவையான ஒரு ரெசிபி சமைக்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டால்,

-விளம்பரம்-

 இந்த பீர்க்கங்காய்  முட்டை கறி செய்து அசத்துங்கள். சப்பாத்திக்கு உள்ளே இந்த கறி வைத்து சுருட்டி ஸ்டஃப்டு சப்பாத்தியா கொடுக்கலாம். தோசையில் வைத்து சுருட்டி கொடுக்கலாம். சாம்பார் சாதம் ரசம் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள சைட் டிஷ் ஆகவும் கொடுக்கலாம். நம்முடைய விருப்பம்தான். சிம்பிளான இன்ட்ரஸ்டிங்கான ஹெல்தியான இந்த ரெசிபியை தெரிந்து கொள்வோமா.

- Advertisement -

பீர்க்கங்காயில் மருத்துவ குணங்கள் அதிகம் உள்ளன. இதில் விட்டமின் ஏ, சி மற்றும் மக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. பீர்க்கங்காயை உணவில் சேர்த்துக் கொள்வதால் நீர்சத்து அதிகரிக்கிறது, மலச்சிக்கல், சர்க்கரை நோய், எலும்பு பிரச்சனை போன்ற நோய்களை கட்டுப்படுத்த உதவுகிறது. ஆனால் பீர்க்கங்காயில் இருக்கும் நீர்த்தன்மை பலருக்கும் பிடிப்பதில்லை என்பதால் அவற்றை உணவில் பெருமளவில் தவிர்த்து விடுகின்றனர். இவ்வாறானவர்களுக்கு பீர்க்கங்காயுடன் முட்டையை சேர்த்து செய்யும் இந்த கறி செய்து கொடுக்கலாம்.

Print
5 from 1 vote

பீர்க்கங்காய் முட்டை கறி | Ridge Gourd Egg Curry In Tamil

பீர்க்கங்காயில் மருத்துவ குணங்கள் அதிகம்உள்ளன. இதில் விட்டமின் ஏ, சி மற்றும் மக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன.பீர்க்கங்காயை உணவில் சேர்த்துக் கொள்வதால் நீர்சத்து அதிகரிக்கிறது, மலச்சிக்கல்,சர்க்கரை நோய், எலும்பு பிரச்சனை போன்ற நோய்களை கட்டுப்படுத்த உதவுகிறது. ஆனால் பீர்க்கங்காயில் இருக்கும் நீர்த்தன்மை பலருக்கும் பிடிப்பதில்லை என்பதால் அவற்றை உணவில் பெருமளவில்தவிர்த்து விடுகின்றனர். இவ்வாறானவர்களுக்கு பீர்க்கங்காயுடன் முட்டையை சேர்த்து செய்யும் இந்த கறி செய்து கொடுக்கலாம்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: LUNCH
Cuisine: tamil nadu
Keyword: Ridge Gourd Egg Curry
Yield: 4
Calories: 245kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1 பீர்க்கங்காய்
  • 2 வெங்காயம்
  • 1/2 ஸ்பூன் கடுகு
  • 5 கருவேப்பிலை
  • உப்பு தேவையான அளவு
  • 2 முட்டை
  • 2 காய்ந்த மிளகாய்
  • 1 பின்ச் மஞ்சள் தூள்
  • 2 ஸ்பூன் எண்ணெய்

செய்முறை

  • பீர்க்கங்காய் தோல் சீவிய பிறகு பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு கறிவேப்பிலை காய்ந்த மிளகாய் சேர்த்து பொரியவிடவும்
  • பிறகு வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். வெங்காயம் நன்கு வதங்கியவுடன் பீர்க்கங்காய் உப்பு மஞ்சள்தூள் சேர்த்து வேக வைக்கவும்.
  • பீர்க்கங்காய் முக்கால் பாகம் வெந்தவுடன் முட்டையைஉடைத்து ஊற்றி கிளறி மூடி வைத்து வேக விடவும்.
  • பிறகு கிளறி பரிமாறலாம் சுவையான பீர்க்கங்காய் முட்டை பொரியல் தயார் இதை காரக்குழம்பு ஆகியவற்றுடன்சைட்டிச்சாக சாப்பிட சுவையாக இருக்கும்.

Nutrition

Serving: 300g | Calories: 245kcal | Carbohydrates: 245g | Cholesterol: 1mg | Sodium: 233mg | Potassium: 3.2mg | Vitamin A: 13IU | Calcium: 23.34mg