பீர்க்கங்காய் மசாலா கறி
இன்று மதியம் என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? இதுவரை வீட்டில் செய்திராத ஒரு குழம்பை செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் பீர்க்கங்காய் உள்ளதா? அப்படியானால் அந்த பீர்க்கங்காய் கொண்டு கறி செய்யுங்கள். தினமும் நாம் சமைக்க கூடிய சமையல் நாவிற்கு ருசியாக இருக்கிறதா
இன்று மதியம் என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? இதுவரை வீட்டில் செய்திராத ஒரு குழம்பை செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் பீர்க்கங்காய் உள்ளதா? அப்படியானால் அந்த பீர்க்கங்காய் கொண்டு கறி செய்யுங்கள். தினமும் நாம் சமைக்க கூடிய சமையல் நாவிற்கு ருசியாக இருக்கிறதா என்று தான் நாம் பார்க்கிறோமே தவிர அது உடலுக்கு எந்த அளவிற்கு ஊட்டச்சத்தை தருகின்றது என்பதை இன்றைய சூழ்நிலையில் கவனிப்பதே கிடையாது.
அந்த வரிசையில் உடலுக்கு அதிகப்படியான நீர் சத்தை, நார் சத்தையும் கொடுக்கக்கூடிய பீர்கங்காயை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். பீர்க்கங்காய் உடலுக்கு மிகவும் சிறந்தது. ஏனெனில் இதில் உடலுக்கு தேவையான வைட்டமின் சி, வைட்டமின் பி மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இத்தகைய சிறப்புடைய பீர்க்கங்காயை வாரத்திற்கு ஒரு முறை செய்து சாப்பிட்டால், உடல் ஆரோக்கியமாக இருக்கும். இது மலச்சிக்கல் பிரச்சனைகளையும் குறைக்கும். இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சமநிலைப்படுத்தவும் இது பயனுள்ளதாக இருக்கும். மேலும் உடலில் சேரும் நச்சுக் கழிவுகளை வெளியேற்றவும் உதவுகிறது.
ஆனால் நிறைய பேருக்கு இந்தப் பீர்க்கங்காய் பிடிக்காது. பீர்க்கங்காய் வைத்து ஒருமுறை இப்படி கறி வைத்து கொடுத்து பாருங்கள். இந்த பீர்க்கங்காய் கறி சாதத்துடன் சாப்பிட அட்டகாசமாக இருக்கும். மேலும் இது குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். முக்கியமாக இது நீங்கள் வழக்கமாக செய்யும் பொரியலை விட சற்று வித்தியாசமாக இருக்கும். அதோடு இந்த கறியை 15 நிமிடத்தில் செய்துவிடலாம். அந்த அளவில் சீக்கிரம் செய்யக்கூடியது. வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் விருப்பமாக சாப்பிடுவார்கள்.
இதனையும் படியுங்கள் : இனி பீர்க்கங்காய் வாங்கினால் மிஸ் பண்ணாம அவசியம் இப்படி குழம்பு செய்து பாருங்கள்!