இனி பீர்க்கங்காய் வாங்கினால் மிஸ் பண்ணாம அவசியம் இப்படி குழம்பு செய்து பாருங்கள்!

- Advertisement -

இன்று மதியம் என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? இதுவரை வீட்டில் செய்திராத ஒரு குழம்பை செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் பீர்க்கங்காய் உள்ளதா? அப்படியானால் அந்த பீர்க்கங்காய் கொண்டு குழம்பு செய்யுங்கள். தினமும் நாம் சமைக்க கூடிய சமையல் நாவிற்கு ருசியாக இருக்கிறதா என்று தான் நாம் பார்க்கிறோமே தவிர அது உடலுக்கு எந்த அளவிற்கு ஊட்டச்சத்தை தருகின்றது என்பதை இன்றைய சூழ்நிலையில் கவனிப்பதே கிடையாது. அந்த வரிசையில் உடலுக்கு அதிகப்படியான நீர் சத்தை, நார் சத்தையும் கொடுக்கக்கூடிய பீர்கங்காயை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். பீர்க்கங்காய் உடலுக்கு மிகவும் சிறந்தது. ஏனெனில் இதில் உடலுக்கு தேவையான வைட்டமின் சி, வைட்டமின் பி மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இத்தகைய சிறப்புடைய பீர்க்கங்காயை வாரத்திற்கு ஒரு முறை செய்து சாப்பிட்டால், உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

-விளம்பரம்-

இது மலச்சிக்கல் பிரச்சனைகளையும் குறைக்கும். இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சமநிலைப்படுத்தவும் இது பயனுள்ளதாக இருக்கும். மேலும் உடலில் சேரும் நச்சுக் கழிவுகளை வெளியேற்றவும் உதவுகிறது. ஆனால் நிறைய பேருக்கு இந்தப் பீர்க்கங்காய் பிடிக்காது. பீர்க்கங்காய் வைத்து ஒருமுறை இப்படி குழம்பு வைத்து கொடுத்து பாருங்கள். இந்த பீர்க்கங்காய் குழம்பு சாதத்துடன் சாப்பிட அட்டகாசமாக இருக்கும். மேலும் இது குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். முக்கியமாக இது நீங்கள் வழக்கமாக செய்யும் குழம்பை விட சற்று வித்தியாசமாக இருக்கும். அதோடு இந்த குழம்பை 15 நிமிடத்தில் செய்துவிடலாம். அந்த அளவில் சீக்கிரம் செய்யக்கூடியது. வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் விருப்பமாக சாப்பிடுவார்கள்.

- Advertisement -
Print
3.50 from 2 votes

பீர்க்கங்காய் குழம்பு | Peerkangai Kulambu Recipe In Tamil

இன்று மதியம் என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? இதுவரை வீட்டில் செய்திராத ஒரு குழம்பை செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் பீர்க்கங்காய் உள்ளதா? அப்படியானால் அந்த பீர்க்கங்காய் கொண்டு குழம்பு செய்யுங்கள். தினமும் நாம் சமைக்க கூடிய சமையல் நாவிற்கு ருசியாக இருக்கிறதா என்று தான் நாம் பார்க்கிறோமே தவிர அது உடலுக்கு எந்த அளவிற்கு ஊட்டச்சத்தை தருகின்றது என்பதை இன்றைய சூழ்நிலையில் கவனிப்பதே கிடையாது. அந்த வரிசையில் உடலுக்கு அதிகப்படியான நீர் சத்தை, நார் சத்தையும் கொடுக்கக்கூடிய பீர்க்கங்காயை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். பீர்க்கங்காய் வைத்து ஒருமுறை இப்படி குழம்பு வைத்து கொடுத்து பாருங்கள். இந்த பீர்க்கங்காய் குழம்பு சாதத்துடன் சாப்பிட அட்டகாசமாக இருக்கும். மேலும் இது குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.
Prep Time10 minutes
Active Time15 minutes
Total Time25 minutes
Course: LUNCH
Cuisine: Indian
Keyword: Peerkangai Kulambu
Yield: 4 People
Calories: 80kcal

Equipment

  • 1 கடாய்
  • 1 பவுள்
  • 1 மிக்ஸி

தேவையான பொருட்கள்

  • 1 பீர்க்கங்காய்
  • 1/2 டீஸ்பூன் கடுகு
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 1 கொத்து கறிவேப்பில்லை
  • 10 பல் பூண்டு
  • 1/4 கப் தேங்காய்
  • 1 கப் சின்ன வெங்காயம்
  • 2 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • எண்ணெய் தேவையான அளவு
  • உப்பு தேவையான அளவு

செய்முறை

  • முதலில் பீர்க்கங்காயை நன்கு கழுவி விட்டு தோல் நீக்கி சற்று பெரிய துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு‌ மிக்ஸி ஜாரில் தேங்காய், சீரகம் மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
  • ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்த்து காய்ந்ததும் கடுகு, சீரகம், பூண்டு, கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தாளிக்கவும்.
  • பின் சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.‌ அதன்பிறகு நறுக்கி வைத்துள்ள பீர்க்கங்காயை சேர்த்து வதக்கி தேவையான அளவு தண்ணீர் விட்டு மூடி போட்டு வேக விடவும்.
  • பீர்க்கங்காய் வெந்ததும் அரைத்து வைத்துள்ள தேங்காயை சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான பீர்க்கங்காய் குழம்பு தயார்.

Nutrition

Serving: 400g | Calories: 80kcal | Carbohydrates: 4.4g | Protein: 5.8g | Fat: 1.4g | Sodium: 26mg | Potassium: 118mg | Fiber: 3.1g | Vitamin C: 5.42mg | Calcium: 18mg | Iron: 3mg

இதனையும் படியுங்கள் : பீர்க்கங்காய் முட்டையை வைத்து ஆரோக்கியமான பீர்க்கங்காய் முட்டை கறி சில நிமிடத்தில் தயார். சப்பாத்தி, தோசை சுடச்சுட சாதத்திற்கு இது செம சைட் டிஷ்.