Home சைவம் உடம்பில் ரத்தம் ஊறுவதை அதிகரிக்க இந்த ஒரு ஜூஸ் குடித்தாலே போதும்!

உடம்பில் ரத்தம் ஊறுவதை அதிகரிக்க இந்த ஒரு ஜூஸ் குடித்தாலே போதும்!

இனிப்புச் சுவை கொண்ட இயற்கையான உணவு வகையில் பழவகைகள்  இருக்கிறது. மனிதர்களின் உடல் நலத்திற்கு பல்வேறு நன்மைகளை தரக்கூடிய சத்துக்கள் பழங்களில் நிறைந்து இருக்கிறது. இந்த பழங்கள் நன்றாகப் பிழிந்து சாறெடுக்கடப்பட்டு ஜூஸாக  மக்களால் அதிகம் விரும்பி அருந்தப்படுகிறது. அந்தக் ஃப்ரூட் ஜூஸ் அதிகம் அருந்துவதால் மனிதர்களின் உடலுக்கு ஏற்படக் கூடிய மருத்துவ ரீதியான நன்மைகள் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.

-விளம்பரம்-

பழ வகைகள் அனைத்துமே சாப்பிடுவதற்கு சிறந்த இயற்கை உணவாக இருக்கிறது. பல மருத்துவ குணங்களை கொண்ட பழ வகைகள் நிறைந்த நாடாக இந்தியா இருக்கிறது.  இந்தியாவின் மருத்துவ முறைகளான சித்த மற்றும் ஆயுர்வேதத்தில் பழவகை காய் வகைகளை கொண்டு நோய் தீர்க்கும் முறைகள் கூறுகின்றன.

அப்படிப்பட்ட பழங்களிலால் ஆனா பழ  சாறு அல்லது ஹெர்பல் ஃப்ரூட் ஜூஸில் அருந்துவதால் பல அற்புதமான நன்மைகள் கிடைக்கபெறுவோம். வாங்க இதை எப்படி செய்வதுஎன்று பார்ப்போம்.

Print
4.34 from 3 votes

ஹெர்பல் ஃப்ரூட் ஜூஸ் | Herbal Fruit Juice Recipe In Tamil

பழ வகைகள் அனைத்துமே சாப்பிடுவதற்கு சிறந்த இயற்கை உணவாக இருக்கிறது. பல மருத்துவ குணங்களைகொண்ட பழ வகைகள் நிறைந்த நாடாக இந்தியா இருக்கிறது.  இந்தியாவின் மருத்துவ முறைகளான சித்த மற்றும் ஆயுர்வேதத்தில்பழவகை காய் வகைகளை கொண்டு நோய் தீர்க்கும் முறைகள் கூறுகின்றன. அப்படிப்பட்ட பழங்களிலால்ஆனா பழ  சாறு அல்லது ஹெர்பல் ஃப்ரூட் ஜூஸில்அருந்துவதால் பல அற்புதமான நன்மைகள் கிடைக்கபெறுவோம். வாங்க இதை எப்படி செய்வதுஎன்றுபார்ப்போம்.
Prep Time5 minutes
Active Time7 minutes
Course: Drinks
Cuisine: tamil nadu
Keyword: Herbal Fruit Juice
Yield: 4
Calories: 187kcal

Equipment

  • 1 மிக்ஸி

தேவையான பொருட்கள்

  • 1/2 கட்டு புதினா, கொத்தமல்லி
  • 2 தக்காளி
  • 2 ஆரஞ்சு
  • 2 எலுமிச்சை
  • இஞ்சி சிறிது
  • 1/2 ஸ்பூன் சீரகம்
  • 1 கப் சர்க்கரை

செய்முறை

  • சீரகம், இஞ்சி, புதினா, கொத்தமல்லி ஆகியவைகளை மிக்சியில் அரைத்து வடிகட்டவும்.
  • இதே போல் தக்காளி ஜூஸ், ஆரஞ்சு ஜூஸ், எலுமிச்சை ஜூஸ் சம அளவு எடுத்து,சர்க்கரை, சிறிது தண்ணீர் விட்டு கரைத்து வைக்கவும்.
  • பழச்சாறுகளுடன் இஞ்சி, புதினா சாற்றை கலந்து மீண்டும் வடிகட்டவும்.
  • பிரிட்ஜில் குளிர வைக்கவும்.
  • பரிமாறும் போது ஒரு ஸ்பூன் தேன் விட்டால் சுவையும் மீண்டும் கூடும்.

Nutrition

Serving: 100g | Calories: 187kcal | Carbohydrates: 31.9g | Protein: 1.3g | Sodium: 4mg | Potassium: 499mg | Fiber: 2.3g | Calcium: 0.5mg