வீடு செழிப்புடன் இருக்க 48 நாட்கள் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டியவை!!
வாஸ்து சாஸ்திரம் இந்து மத நம்பிக்கையின் ஒரு அங்கமாக கருதப்படுகிறது. நம் வீடு ஒரு கனவு இல்லமாக மாறுவதற்கு வெற்றியை உருவாக்கக்கூடிய சரியான ஆற்றலை பெற வேண்டும். வாஸ்து சாஸ்திரத்தின் படி, ஒவ்வொரு வீட்டிலும் சில எதிர்மறை மற்றும் நேர்மறை சக்திகள் இருக்கின்றன. இந்த ஆற்றல்கள் மக்களின் வா
வாஸ்து சாஸ்திரம் இந்து மத நம்பிக்கையின் ஒரு அங்கமாக கருதப்படுகிறது. நம் வீடு ஒரு கனவு இல்லமாக மாறுவதற்கு வெற்றியை உருவாக்கக்கூடிய சரியான ஆற்றலை பெற வேண்டும். வாஸ்து சாஸ்திரத்தின் படி, ஒவ்வொரு வீட்டிலும் சில எதிர்மறை மற்றும் நேர்மறை சக்திகள் இருக்கின்றன. இந்த ஆற்றல்கள் மக்களின் வாழ்வில் ஏதோ ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. பொருளாதார சிக்கலில் இருப்பவர்கள் வாஸ்து சாஸ்திரத்தின் படி இந்த விஷயங்களை செய்தால் போது வீட்டில் செல்வம் செழிக்கும் என்று சொல்லப்படுகிறது. அந்த வகையில் வீட்டில் நேர்மறை ஆற்றல் அதிகரித்து நன்மை பெருக தினந்தோறும் கட்டாயம் செய்யவேண்டிய ஐந்து செயல்கள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
பிரம்ம முகூர்த்தம்
ஒவ்வொரு நாளும் பொழுது விடியும் அதிகாலையான 4.30 மணி முதல் 6 மணி வரையான காலநேரத்தை, படைப்புக் கடவுளான பிரம்மாவுடன் ஒப்பிட்டு ‘பிரம்ம முகூர்த்தம்’ என்று அழைக்கிறோம். பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்தால் பல அற்புத நன்மைகள் நிகழ்வதாக சாஸ்திரங்களும், விஞ்ஞானமும் கூறுகின்றன. முதலில் பிரம்ம முகூர்த்தம் என்று சொல்ல கூடிய அதிகாலை வேளையில் 4 மணிக்கு வீட்டில் விளக்கு ஏற்ற வேண்டும். பிரம்ம முகூர்த்தத்தில் விளக்கு ஏற்றினால் நீங்கள் நினைத்த அனைத்தும் நடக்கும் என்பது ஐதீகம்.
கோலம்
வாசலில் கோலம் போடுவதால் கோடி நன்மைகள் கிடைக்கும் முன்னோர்கள் கூறுவர். சூரிய உதயத்திற்கு முன்பாகவே எழுந்திருக்க கூடியவர்கள் பெண்கள். அதனால் பெண்கள் எழுந்தவுடன் முதலில் செய்ய வேண்டிய வேலை வாசலில் கோலமிடுவது தான். கோலம் அழகிற்காக மட்டும் போடுவது அல்ல. கோலமிட்டால் மகாலட்சுமியின் அருள் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.
பூஜையறை மலர்கள்
ஒவ்வொரு வீட்டிலும் நேர்மறை ஆற்றலை கொண்டு வர வேண்டும் என்றால் பிரதான வாயிலை எப்போதும் மலர்களால் அலங்கரிக்க வேண்டும். விசேச நாட்களுக்கு மட்டுமல்ல மாதத்திற்கு ஒரு முறையாவது மாவிலை, வேப்பிலை போன்றவற்றைக் கட்டித் தொங்க விட வேண்டும். அடுத்ததாக வீட்டின் பூஜையறை தான், பூஜை அறையில் எப்போதும் மலர்களால் அலங்காரம் செய்து விட்டு, சாம்பிராணி போட்டு வைக்க வேண்டும்.
கடவுள் வழிபாடு
காலையில் எழுந்ததும் நீராடி விட்டு நிலை வாசலில் 2 தீபங்கள் ஏற்ற வேண்டும். அது நெய் விளக்கோ, நல்லெண்ணெய்யோ, பஞ்சகூட்டு எண்ணெய்யோ அல்லது வழக்கமாக நீங்கள் தீபம் ஏற்ற பயன்படுத்தும் எண்ணெய் கொண்டு விளக்கேற்ற வேண்டும். பின் பூஜையறையில் விளக்கு ஏற்றி விட்டு நமக்கு பிடித்த கடவுளின் பதிகத்தை பாடி வழிபாடு செய்ய வேண்டும்.
நைவேத்தியம்
நாம் வணங்கும் கடவுளின் மனம் குளிர அவ்வப்போது நைவேத்தியம் படைத்து வழிபடுவோம். ஒவ்வொரு கடவுளுக்கும் ஒவ்வொரு மாதிரியான நைவேத்தியம் உண்டு. அதனால் உங்கள் விருப்ப தெய்வத்திற்கு என்ன நைவேத்தியம் படைப்பீர்களோ அதை படைத்து வழிபட வேண்டும். இவ்வாறு தொடர்ந்து 48 நாட்கள் செய்து வந்தால் வீட்டில் நன்மைகள் பெருகி, வீடு ஒரு வளர்ச்சி பாதையை நோக்கி செல்லும் என்றும் நினைத்த காரியங்கள் அனைத்தும் நடக்கும் என்றும் நம்பப்படுகிறது.
இதனையும் படியுங்கள் : தீர்க்க முடியாத நோய்களையும் தீர்க்கும் ஆஞ்சநேயர் வழிபாடு