ரோட்டுக்கடை ஸ்டைலில் சுவையான மற்றும் மொறு மொறுவென்ற இந்த நெத்திலி மீன் ஃப்ரை செய்து பாருங்கள் இனி இப்படித்தான் மீன் வறுவல் செய்வீர்கள்!!

ரோட்டு கடைக்கு சென்றால் அங்கு விற்கும் உணவு பொருட்களை பார்த்து பசித்து எடுத்து சாப்பிடுவது ஒரு வழக்கமாக வைத்திருப்போம்..! ரோட்டுக்கடை உணவுகள் என்றால் பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. பானிபூரி, மசாலா பூரி, பேல் பூரி, சிக்கன் பக்கோடா, காளான் என எதுவாக இருந்தாலும் நாம் கடைகளி

By Prem Kumar · 10/5/2024

ரோட்டு கடைக்கு சென்றால் அங்கு விற்கும் உணவு பொருட்களை பார்த்து பசித்து எடுத்து சாப்பிடுவது ஒரு வழக்கமாக வைத்திருப்போம்..! ரோட்டுக்கடை உணவுகள் என்றால் பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. பானிபூரி, மசாலா பூரி, பேல் பூரி, சிக்கன் பக்கோடா, காளான் என எதுவாக இருந்தாலும் நாம் கடைகளில் சப்புக்கொட்டி சாப்பிடுவோம். அவை ஆரோக்கியமான உணவு இல்லை என்று நமக்கு நன்றாக தெரியும். ஆனால்‌ அதில் இருக்கும் சுவை நாக்கில் தாண்டவமாடும்.

என்னதான் வீட்டில் சுவையாக சமைத்து கொடுத்தாலும் குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் வீட்டில் செய்யும் உணவுப்பொருட்களை விட வெளி உணவகங்களில் சாப்பிடும் உணவுப் பொருட்களின் சுவைதான் மிகவும் பிடித்திருக்கும். அதுவும் இந்த ரோட்டுக் கடையில் கிடைக்கும் நெத்திலி ஃப்ரையின் சுவை மிகவும் அருமையாகத்தான் இருக்கும். அனைவரும் விரும்பி சாப்பிடும் இந்த நெத்திலி ஃப்ரை ரோட்டு கடையின் சுவையிலேயே வீட்டில் எவ்வாறு சமைப்பது என்பதை பற்றி இப்பதிவில் பார்ப்போம் வாருங்கள்.

இந்த நெத்திலி மீனை குழம்பு வைத்துச் சாப்பிடலாம், தொக்கு செய்து சாப்பிடலாம் அல்லது குழந்தைகளுக்கு பிடிக்கின்ற வகையில் எண்ணெயில் பொரித்து நெத்திலி ஃப்ரை செய்து சாப்பிடலாம். நெத்திலி மீன் பொடிசாக இருந்தாலும் அதன் சுவை திமிங்கலம் போன்றது. இதில் குழம்பு செய்வதைக் காட்டிலும் இப்படி வறுத்துப் பாருங்கள். இந்த சுவை உங்கள் நாவை விட்டு நீங்காது.

இதனையும் படியுங்கள் : அடுத்தமுறை நெத்திலி மீன் வாங்கினால் மிஸ் பண்ணமாக இப்படி வறுவல் செஞ்சி பாருங்கள்!

Recipes AMP · Quick view
View full