சமைக்க நேரம் இல்லா சமயத்தில் இந்த ஈஸியான ரோட்டுக்கடை தக்காளி சாம்பார் செய்து பாருங்கள்!!
சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஓர் உணவு வகைதான் சாம்பார். எந்தக் காய்கறி வைத்தும் தயார் செய்யக்கூடிய சாம்பார் துவரம் பருப்பு, பாசிப் பருப்பு, மைசூர் பருப்பு என ஏகப்பட்ட பருப்பு வகைகளை பயன்படுத்தி, வித்தியாச சுவையை கொடுக்கலாம். அதிகப்படியான புரதச்சத
சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஓர் உணவு வகைதான் சாம்பார். எந்தக் காய்கறி வைத்தும் தயார் செய்யக்கூடிய சாம்பார் துவரம் பருப்பு, பாசிப் பருப்பு, மைசூர் பருப்பு என ஏகப்பட்ட பருப்பு வகைகளை பயன்படுத்தி, வித்தியாச சுவையை கொடுக்கலாம். அதிகப்படியான புரதச்சத்து நிறைந்துள்ள இந்த சாம்பாரை வெறும் தக்காளி சேர்த்து சுவையாக எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
இன்று இரவு உங்கள் வீட்டில் இட்லி அல்லது தோசை செய்யப் போகிறீர்களா? நிறைய பேருக்கு இட்லி, தோசைக்கு சட்னிக்கு பதிலாக, சாம்பார் தொட்டு சாப்பிட ரொம்பவும் பிடிக்கும். உங்கள் வீட்டிலும் அப்படி என்றால், இன்று தக்காளியைக் கொண்டு சுவையான சாம்பார் செய்யுங்கள். இந்த தக்காளி சாம்பார் இட்லி, தோசைக்கு அட்டகாசமாக இருப்பதோடு, செய்வதற்கு மிகவும் சுலபமாகவும் இருக்கும்.
சாம்பார் என்றாலே அது பருப்பில் தான் செய்ய முடியும். ஆனால் இந்த தக்காளி சாம்பார் செய்ய பருப்பு அவசியமில்லை, நீங்கள் விருப்பப்பட்டால் சேர்த்து கொள்ளலாம். கிட்டத்தட்ட இதுவும் சட்னி போல தான். ரோட்டுக்கடையில் இட்லி, பொங்கலுடன் இந்த சாம்பார் அதிகம் பரிமாறப்படும். சற்று காரம் தூக்கலாக, தக்காளி புளிப்புடன் டேஸ்டில் சூப்பராக இருக்கும். ரெட் கலரில் இருக்கும் இதற்கு பெயர் தான் தக்காளி சாம்பார். இட்லி, தோசை, சப்பாத்தி, பொங்கல், உப்புமா என அனைத்து வகையான பிரேக் ஃபாஸ்ட் உணவுகளுக்கும் இந்த சாம்பார் செட் ஆகும்.
இதனையும் படியுங்கள் : ரோட்டுக்கடை ஸ்டைல் காளான் பிரைட் ரைஸ் ஒரு தரம் இப்படி செய்து பாருங்கள் வீட்டில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்!!!