காலை எப்போதும் இட்லி, தோசை சாப்பிட்டு போரடித்துவிட்டதா? ஒரு வித்தியாசமான, அதே சமயம் சத்தான ஒரு ரெசிபியை செய்து சாப்பிட நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் காளான் உள்ளதா? அப்படியானால் அதைக் கொண்டு பிரைட் ரைஸ் செய்யுங்கள். இந்த பிரைட் ரைஸ் வழக்கமாக செய்யும் பிரைட் ரைஸை போல் இல்லாமல், சுவையாக விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். முக்கியமாக இது செய்வதற்கு மிகவும் சுலபமாகவும் இருக்கும். இந்த பிரைட் ரைஸ் வீட்டில் காலை வேளையில் செய்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். பிரைட் ரைஸ் பிரியர்கள் பிரியாணி பிரியர்களை விட அதிக அளவில் நம் நாட்டில் இருக்கின்றனர்.
பிரியாணிக்கு இணையான ஒரு டிஷ் என்றால் அது பிரைட் ரைஸ் மட்டும் தான். ஹோட்டலுக்கு சென்றாலே பாதிப்பேர் எனக்கு பிரைட் ரைஸ் வேணும் என்று கேட்டு வாங்கி சாப்பிடுகிறார்கள். அதை ஹோட்டலில் தான் சாப்பிட வேண்டுமா? இனி வீட்டிலேயே சுவையான பிரைட் ரைஸ் எப்படி செய்வதென்று பார்ப்போமா. துரித உணவு வகையை சார்ந்த பிரைட் ரைஸ், சந்தேகத்திற்கு இடமின்றி இளம் வயதினரின் மிகவும் பிடித்தமான உணவு வகை. பிரைட் ரைசில் பல வகை உண்டு. அசைவ பிரியர்களுக்கு சிக்கன் மற்றும் எக் பிரைட் ரைஸ் மிகவும் பிடித்தமானவையாக இருக்கின்றன.
சைவ பிரியர்களுக்கு மஸ்ரூம் மற்றும் பன்னீர் பிரைட் ரைஸ்களுக்கு அடுத்து வெஜிடபிள் பிரைட் ரைஸ் தான் டாப் சாய்ஸாக உள்ளது. பிரைட் ரைஸ்கலோடு பன்னீர் பட்டர் மசாலா அல்லது கோபி மஞ்சூரியன் சேர்த்து உண்பது பெரும்பாலானோர் விரும்பும் காம்பினேஷன் ஆக உள்ளது. உண்மையில் இந்த காளான் பிரைட் ரைஸ் மிகவும் சுவையாக இருக்கும். ஒரு முறை செய்து சாப்பிட்டால், மீண்டும் மீண்டும் சமைக்க வைக்கும். குழந்தைகளுக்கும் இது மிகவும் பிடிக்கும். எப்போது பார்த்தாலும் சாம்பார், ரசம், குழம்பு என்று வைத்து அலுத்துப் போன நேரத்தில் வாரத்தில் ஒரு நாள் இப்படி வெரைட்டி ரைஸ் செய்து சாப்பிடலாம்.
காளான் பிரைட் ரைஸ் | Mushroom Fried Rice Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
- 1 வாணலி
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 250 கி காளான்
- 2 டீஸ்பூன் மைதா மாவு
- 2 டீஸ்பூன் சோள மாவு
- 1/2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு
- 1 டீஸ்பூன் சிக்கன் மசாலா
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
- 1 பட்டை, கிராம்பு, ஏலக்காய்
- 2 முட்டை
- 1 கேரட்
- 5 பீன்ஸ்
- 2 பச்சை மிளகாய்
- 1 டேபிள் ஸ்பூன் தக்காளி சாஸ்
- 1 டேபிள் ஸ்பூன் மிளகாய் சாஸ்
- 1 டீஸ்பூன் பிரியாணி மசாலா
- 2 கப் உதிரியாக வடித்த சாதம்
- 2 டீஸ்பூன் மிளகு தூள்
- 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
செய்முறை
- முதலில் காளானை நன்கு கழுவி விட்டு, சின்ன துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- ஒரு பவுளில் நறுக்கிய காளான், மைதா, சோள மாவு, உப்பு, மிளகாய் தூள், எலுமிச்சை சாறு, சிக்கன் மசாலா சேர்த்து நன்கு கலந்து சிறிது நேரம் ஊற விடவும்.
- பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் காளானை சேர்த்து பொன்னிறமாக பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
- ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து வதக்கவும். பின் நறுக்கிய கேரட், பீன்ஸ், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
- காய்கறிகள் சற்று வெந்ததும் முட்டை சேர்த்து அதனுடன் உப்பு, தக்காளி சாஸ், மிளகாய் சாஸ், சோயா சாஸ், பிரியாணி மசாலா, மிளகு தூள், மிளகாய் தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
- பின் நாம் பொறித்து வைத்துள்ள காளான், வடித்த சாதம் சேர்த்து நன்கு கலந்து இரண்டு நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைத்து விடவும். அவ்வளவுதான் சுவையான காளான் பிரைட் ரைஸ் தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : சுவையான காஷ்மீர் ஸ்டைல் ஃப்ரைட் ரைஸ் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் இதன் ருசியில் அசந்து விடுவீர்கள்!!!