சுவையான காஷ்மீர் ஸ்டைல் ஃப்ரைட் ரைஸ் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் இதன் ருசியில் அசந்து விடுவீர்கள்!!!

- Advertisement -

பிரைட் ரைஸ் பிரியர்கள் பிரியாணி பிரியர்களை விட அதிக அளவில் நம் நாட்டில் இருக்கின்றனர். பிரியாணிக்கு இணையான ஒரு டிஷ் என்றால் அது பிரைட் ரைஸ் மட்டும் தான். ஹோட்டலுக்கு சென்றாலே பாதிப்பேர் எனக்கு பிரைட் ரைஸ் வேணும் என்று கேட்டு வாங்கி சாப்பிடுகிறார்கள். அதை ஹோட்டலில் தான் சாப்பிட வேண்டுமா? இனி வீட்டிலேயே சுவையான பிரைட் ரைஸ் எப்படி செய்வதென்று பார்ப்போமா. துரித உணவு வகையை சார்ந்த பிரைட் ரைஸ், சந்தேகத்திற்கு இடமின்றி இளம் வயதினரின் மிகவும் பிடித்தமான உணவு வகை.

-விளம்பரம்-

பிரைட் ரைசில் பல வகை உண்டு. அசைவ பிரியர்களுக்கு சிக்கன் மற்றும் எக் பிரைடு ரைஸ் மிகவும் பிடித்தமானவையாக இருக்கின்றன. சைவ பிரியர்களுக்கு மஸ்ரூம் மற்றும் பன்னீர் பிரைட் ரைஸ்களுக்கு அடுத்து வெஜிடபிள் பிரைட் ரைஸ் தான் டாப் சாய்ஸாக உள்ளது.

- Advertisement -

வெஜிடபிள் பிரைட் ரைஸ்கலோடு பன்னீர் பட்டர் மசாலா அல்லது கோபி மஞ்சூரியன் சேர்த்து உண்பது பெரும்பாலானோர் விரும்பும் காம்பினேஷன் ஆக உள்ளது. உண்மையில் இந்த வெஜ் பிரைட் ரைஸ் மிகவும் சுவையாக இருக்கும். வீட்டில் சமைப்பதும் மிகவும் எளிது. ஒருமுறை செய்து சாப்பிட்டால், மீண்டும் மீண்டும் சமைக்க வைக்கும். குழந்தைகளுக்கும் இது மிகவும் பிடிக்கும். எப்போது பார்த்தாலும் சாம்பார், ரசம், குழம்பு என்று வைத்து அலுத்துப் போன நேரத்தில் வாரத்தில் ஒரு நாள் இப்படி வெரைட்டி ரைஸ் செய்து சாப்பிடலாம்.

Print
No ratings yet

காஷ்மீர் ஃப்ரைடு ரைஸ் | Kashmiri Fried Rice Recipe In Tamil

பிரைட் ரைஸ் பிரியர்கள் பிரியாணி பிரியர்களை விட அதிக அளவில் நம் நாட்டில் இருக்கின்றனர். பிரியாணிக்கு இணையான ஒரு டிஷ் என்றால் அது பிரைட் ரைஸ் மட்டும் தான். ஹோட்டலுக்கு சென்றாலே பாதிப்பேர் எனக்கு பிரைட் ரைஸ் வேணும் என்று கேட்டு வாங்கி சாப்பிடுகிறார்கள். அதை ஹோட்டலில் தான் சாப்பிட வேண்டுமா? இனி வீட்டிலேயே சுவையான பிரைட் ரைஸ் எப்படி செய்வதென்று பார்ப்போமா. துரித உணவு வகையை சார்ந்த பிரைட் ரைஸ், சந்தேகத்திற்கு இடமின்றி இளம் வயதினரின் மிகவும் பிடித்தமான உணவு வகை. பிரைட் ரைசில் பல வகை உண்டு. வீட்டில் சமைப்பதும் மிகவும் எளிது. ஒருமுறை செய்து சாப்பிட்டால், மீண்டும் மீண்டும் சமைக்க வைக்கும். குழந்தைகளுக்கும் இது மிகவும் பிடிக்கும்.
Prep Time10 minutes
Active Time10 minutes
Total Time20 minutes
Course: dinner
Cuisine: Indian
Keyword: Kashmiri Fried Rice
Yield: 3 People
Calories: 162kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 2 கப் பாசுமதி சாதம்
  • 1/2 சிகப்பு குடைமிளகாய்
  • 1/2 மஞ்சள் குடைமிளகாய்
  • 1/2 பச்சை குடைமிளகாய்
  • 1 பெரிய வெங்காயம்
  • 2 கேரட்
  • 10 பீன்ஸ்
  • 1/2 டீஸ்பூன் மிளகு தூள்
  • வெங்காயத்தாள் சிறிதளவு
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு
  • பாதாம், முந்திரி, திராட்சை தேவையான அளவு

செய்முறை

  • முதலில் குடைமிளகாய், பீன்ஸ், கேரட், வெங்காயம், வெங்காயத்தாள் ஆகியவற்றை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் கேரட், பீன்ஸ், வெங்காயம், குடைமிளகாய் என அனைத்தையும் சேர்த்து லேசாக வதக்கவும்.
  • காய்கறிகள் லேசாக வதங்கியதும் அதில் வடித்து வைத்துள்ள பாசுமதி சாதத்தை சேர்த்து நன்கு கலந்து விடவும்.
  • பின் அத்துடன் உப்பு, மிளகு தூள் சேர்த்து கலந்து விடவும். இறுதியாக வெங்காயத்தாள், முந்திரி, பாதாம், திராட்சை சேர்த்து கலந்து அடுப்பை அணைத்து விடவும்.
  • அவ்வளவுதான் சூடான மற்றும் சுவையான காஷ்மீர் ஸ்டைல் ஃப்ரைட் ரைஸ் தயார். இதனுடன் தக்காளி சாஸ் வைத்து சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும்.

Nutrition

Serving: 400g | Calories: 162kcal | Carbohydrates: 5.5g | Protein: 6.8g | Fat: 2.2g | Sodium: 78mg | Potassium: 194mg | Fiber: 2.4g | Vitamin A: 71IU | Vitamin C: 154mg | Calcium: 18mg | Iron: 6mg

இதனையும் படியுங்கள் : மதிய உணவுக்கு ருசியான அவல் ப்ரைடு ரைஸ் இப்படி செய்து பாருங்க! ஒரு தட்டு சோறும் காலியாகும்!!