உங்கள் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான முறையில் ஏதேனும் செய்து கொடுக்க வேண்டும் நினைத்தால் இந்த பொட்டுக்கடலை பர்பியை ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள்!!
மாலை வேளையில் குழந்தைகள் பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்தாலே போதும் சாப்பிட ஏதாவது கேட்டு நச்சரிப்பார்கள். அப்போது எந்நேரமும் கடைகளில் வாங்கிக் கொடுத்தால், பணம் அதிகம் செலவாவதோடு, ஆரோக்கியமும் பாழாகும். இந்நிலையில் வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டே சுவையான ஸ்நாக்ஸ்களை செய்து கொடுத்த
மாலை வேளையில் குழந்தைகள் பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்தாலே போதும் சாப்பிட ஏதாவது கேட்டு நச்சரிப்பார்கள். அப்போது எந்நேரமும் கடைகளில் வாங்கிக் கொடுத்தால், பணம் அதிகம் செலவாவதோடு, ஆரோக்கியமும் பாழாகும். இந்நிலையில் வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டே சுவையான ஸ்நாக்ஸ்களை செய்து கொடுத்தால், குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள், அவர்களின் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும். சொல்லப்போனால் வீட்டில் செய்து கொடுத்தால் எவ்வளவு வேண்டுமானாலும் அவர்கள் கேட்டு விரும்பி சாப்பிடுவார்கள்.
சரி அப்படி என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் பொட்டுக்கடலை இருந்தால் போதும். அதைக் கொண்டு பொட்டுக்கடலை பர்பியை செய்து கொடுங்கள். இந்த பர்ஃபி மிகவும் சுவையானது மட்டுமின்றி, சத்தானதும் கூட. இவை நம் இதய ஆரோக்கியம் முதல் எடை இழப்பு ஆரோக்கியம் வர உதவுகிறது. இது கலோரிகளில் குறைவாக இருப்பதோடு அதிக அளவு ஊட்டச்சத்துக்கள் இதில் உள்ளன. இதில் மாங்கனீஸ், போலேட், பாஸ்பரஸ் மற்றும் காப்பர் போன்ற இதய நோய்களை குறைக்கும் சத்துக்கள் உள்ளன.
இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ள பொட்டுக்கடலையில் எப்படி சுவையான பர்பி செய்வதென்று பார்ப்போம். இந்த பொட்டுக்கடலை பர்பி எளிமையாக தயாரிக்கக்கூடிய ஒரு இனிப்பாகும். மிக எளிமையாக ஒரு சில நிமிடங்களில் தயாரிக்கும் இந்த இனிப்பு, புரதத்தின் ஆதாரமாக உள்ளது. உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது இந்த இனிப்பை தயார் செய்து பாருங்கள். பொட்டுக்கடலை உருண்டை, பொட்டுக்கடலை பர்பி என்று அழைக்கப்படும் இந்த இனிப்பு ப்ரோடீன் பார் என்றும் அழைக்கப்படுகிறது. இதனை குறைந்த நேரத்தில் எளிமையாக செய்யும் முறையை இப்போது பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : வீட்ல அவல் இருந்தா ஒரு தடவை இந்த அவல் பர்பி செஞ்சு சாப்பிட்டு பாருங்க! பின் அடிக்கடி நீங்களே செய்வீங்க!