Advertisement
சைவம்

ஜவ்வரிசி புட்டு இப்படி செய்து கொடுத்தால் வீட்டில் யார் தான் வேண்டாம் என்று கூறுவார்கள்?

Advertisement

புட்டு வகைகளில் ரொம்பவே சத்தான புட்டு என்று இந்தப் புட்டை கூறலாம். ஜவ்வரிசியில் இருக்கும் சத்துக்கள் அனைவர்க்கும் அதிகம் பயன் அளிக்கக் கூடியது. சவ்வரிசி என்பது பாயசம் போன்ற உணவுகளைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் ஓர் உணவுப் பொருள். இது சவ்வரிசி மரம் என்ற மரத்தின் தண்டுகளின் நடுப்பகுதியில் சேமிக்கப்படும் மாப்பொருளிலிருந்து தயாரிக்கப்படுகின்றது… ஜவ்வரிசி இப்படி புட்டாகவும் செய்து கொடுத்தால் சத்துடன் சுவையும் ரொம்பவே பிடித்தமானதாக இருக்கும்.

ஆரோக்கியம் மிகுந்த ஜவ்வரிசி கொண்டும் புட்டு தயாரிக்க முடியும். பாயாசத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்படும் இந்த ஜவ்வரிசியை வைத்து ஏராளமான உணவுகள் தயாரிக்கலாம்! ஜவ்வரிசியில் மெக்னீசியம், கால்சியம் மற்றும் இரும்புச்சத்து போன்றவை நிறைந்துள்ளதால், எலும்புகளின் வளர்ச்சியை மேம்படுத்த உதவுகிறது. வயதுதானவர்களுக்கு மூட்டுவலி அபாயத்தைக் குறைக்கவும் உதவுகிறது. வளரும் குழந்தைகளின் அன்றாட உணவில் ஜவ்வரிசியை அதிகம் சேர்ப்பதால் எலும்புகள் பலப்படுகிறது. இது போல ஜவ்வரிசி புட்டு செய்து கொடுத்தால் வீட்டில் யார் தான் வேண்டாம் என்று கூறுவார்கள்? குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய இந்த ஜவ்வரிசி புட்டு எப்படி செய்வது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் இனி தெரிந்து கொள்ள இருக்கிறோம்.  

Advertisement

ஜவ்வரிசி புட்டு | Sabudana Puttu Recipe In Tamil

Print Recipe
ஆரோக்கியம் மிகுந்த ஜவ்வரிசி கொண்டும் புட்டுதயாரிக்க முடியும். பாயாசத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்படும் இந்த ஜவ்வரிசியை வைத்துஏராளமான உணவுகள் தயாரிக்கலாம்! வயதுதானவர்களுக்கு மூட்டுவலி அபாயத்தைக் குறைக்கவும் உதவுகிறது. வளரும் குழந்தைகளின் அன்றாட உணவில் ஜவ்வரிசியைஅதிகம் சேர்ப்பதால் எலும்புகள் பலப்படுகிறது. இது போல ஜவ்வரிசி புட்டு செய்து கொடுத்தால்வீட்டில் யார் தான் வேண்டாம் என்று கூறுவார்கள்? குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரைஅனைவரும் விரும்பி உண்ணக்கூடிய இந்த ஜவ்வரிசி புட்டு எப்படி செய்வது? என்பதை தான் இந்தபதிவின் மூலம் இனி தெரிந்து கொள்ள இருக்கிறோம்.  
Advertisement
Course Breakfast
Cuisine tamil nadu
Keyword Sabudana Puttu
Prep Time 5 minutes
Cook Time 10 minutes
Servings 4
Calories 350

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • 200 கிராம் நைலான் ஜவ்வரிசி
  • 1/2 கப் பச்சரிசி மாவு
  • 1 முடி தேங்காய்
  • 100 கிராம் சீனி
  • 3 ஏலக்காய்
  • 1/4 தேக்கரண்டி உப்பு

Instructions

  • பாத்திரத்தில் ஜவ்வரிசியை போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி முதல் நாள் இரவே ஊற வைத்து விடவும்.உடனே
    Advertisement
    செய்ய வேண்டும் என்றால் தண்ணீரை 1 பாத்திரத்தில் ஊற்றி நன்கு கொதிக்க வைத்து அதில் ஜவ்வரிசியை போட்டு அரை மணிநேரம் ஊற வைத்து செய்யவும்.வைத்த ஜவ்வரிசியை மறுநாள் ஊற வைத்த எடுத்துதண்ணீரை வடித்து விட்டு, 1 அகலமான பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்.
  • பிறகு ஜவ்வரிசியுடன் உப்பு, தயாரித்து வைத்திருக்கும் அரிசி கலந்துக் கொள்ளவும். மாவு சேர்ந்துஒரே அளவிலான 5 சிறிய கிண்ணங்கள் அல்லது சிறிய டம்ளர்களை எடுத்துக் கொள்ளவும். கிண்ணத்தில் நெய் தடவி முதலில் தேங்காய் துருவலை கால் பகுதி அளவு வைத்துக் கொள்ளவும்.
  • பிறகு அதில் கலந்து வைத்திருக்கும் ஜவ்வரிசியை முக்கால் பகுதி வைத்து அதன் மேலே மீண்டும் கால் பகுதி தேங்காய் துருவலை வைக்கவும். இதே போல 5 கிண்ணங்களிலும் ஜவ்வரிசி கலவை மற்றும் தேங்காயை வைத்துக் நிரப்பவும்.
  • இட்லி பானையில் 2 கப் தண்ணீர் ஊற்றி சூடுப்படுத்தவும். அதில் இட்லி தட்டை வைத்து ஜவ்வரிசி, தேங்காய் கலவை நிரப்பிய கிண்ணங்களை வைக்கவும்.இட்லி பானையை மூடி வைத்து 8 நிமிடம் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்,
  • பின்னர் வெந்த ஜவ்வரிசி புட்டை எடுத்து 1 தட்டில் கவிழ்த்து அதனுடன் மீதமுள்ள தேங்காய் துருவல், சீனி மற்றும் பொடி செய்து வைத்திருக்கும் ஏலக்காய் சேர்த்து கலந்துக் கொள்ளவும்,தேவைப்பட்டால் முந்திரியை நெய்யில் வறுத்து அதனுடன் சேர்த்து பரிமாறலாம்.

Nutrition

Serving: 500g | Calories: 350kcal | Carbohydrates: 58.5g | Protein: 7g | Fat: 0.02g | Sodium: 3mg | Potassium: 5mg | Fiber: 3g | Calcium: 20mg
Advertisement
Prem Kumar

Recent Posts

இட்லி மீதமாயிடுச்சு அப்படின்னா இந்த மாதிரி மசாலா இட்லி செஞ்சு பாருங்க!

வீட்ல இட்லி மீதமாயிருச்சு அப்படின்னா அதை வைத்து இட்லி உப்புமா தான் செய்வோம் ஆனா எல்லாருக்குமேலா இந்த இட்லி உப்புமா…

7 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 18 மே 2024!

மேஷம் எதிர்பாராத பயணம் களைப்பை ஏற்படுத்தலாம். இன்று பொறுமை குறைவாக இருக்கும் - அதனால் கவனமாக இருங்கள். வேலையில் இன்று…

9 மணி நேரங்கள் ago

வீட்டு கதவு ஜன்னலை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் திறந்து வைப்பதால் ஏற்படும் அதிர்ஷ்டங்கள்

இந்துக்களுக்கு பொதுவாக ஆன்மீகத்திலும் ஜோதிடத்திலும் வாஸ்து சாஸ்திரத்திலும் அதிகப்படியான நம்பிக்கை இருக்கும் அந்த வகையில் ஒரு வீடு கட்டுவதற்கு அஸ்திவாரம்…

19 மணி நேரங்கள் ago

குடல் குழம்பு இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

ஆட்டுக்கறி குழம்பு ஆட்டு குடல் குழம்பு ஆட்டு ஈரல் ப்ரை, சுவரொட்டி ஃப்ரை, மட்டன் சூப், மட்டன் மூளை ப்ரை,…

1 நாள் ago

காரசாரமான ருசியான பூசணிக்காய் கிரேவி ஒரு முறை இப்படி மட்டும் செய்து பாருங்க அற்புதமான சுவையில் இருக்கும்!

கிரேவிகள் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. பொதுவாக கிரேவியை சப்பாத்தி, பூரி, நான், புல்கா, பரோட்டா,…

1 நாள் ago

புதனின் பெயர்ச்சியால் ராஜயோகம் அடையப்போகும் சில ராசிக்காரர்கள்!

ஜோதிடத்தின் படி ஒவ்வொரு கிரகத்தின் மாற்றத்தாலும் அனைத்து ராசியினருக்கும் தாக்கம் ஏற்படும் அந்த வகையில் புதனின் பெயர்ச்சியால் அறிவு ஞானம்…

1 நாள் ago